சவுதி அரேபியா நாட்டின் உச்ச நீதி மன்றம் அக்டோபர் 14 அன்று அரஃபா தினம் என்றும், அக்டோபர் 15 - ஹஜ் பெருநாள் தினம் என்றும் அறிவித்துள்ளது.
நேற்று (அக்டோபர் 5) சனிக்கிழமை வெளியான அறிவிப்பில் - நேற்று மாலை, சவுதியில் பலர் துல்ஹஜ் தலைபிறையை கண்டதாக சாட்சி கூறியதன் அடிப்படையில், இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும், துல்கஃதா மாதம் 29 நாட்களுடன் நிறைவு செய்யப்படுவதாகவும், சவுதி அரேபியா நாட்டின் உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 13 அன்று மினாவில் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள பிரயாணிகள் கூடுவர். அக்டோபர் 14 அன்று - சுமார் 25 லட்சம் பிரயாணிகள், அரஃபா மைதானத்தில் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 6:00 pm / 6.10.2013]
1. Welcome to the fold posted byAbdul Wahid S. (Kayalpatnam)[06 October 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 30549
"நேற்று (அக்டோபர் 5) சனிக்கிழமை வெளியான அறிவிப்பில் - நேற்று மாலை, பலர் துல்ஹஜ் சவுதியில் தலைபிறையை கண்டதாக சாட்சி கூறியதன் அடிப்படையில், இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும், துல்கஃதா மாதம் 29 நாட்களுடன் நிறைவு செய்யப்படுவதாகவும், சவுதி அரேபியா நாட்டின் உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது." (C & P).
தலைப் பிறை கண்ணுக்குத் தெரியக் கூடிய நேரம் (மக்ரிப்) சூரியன் மறைந்த பின் தான். சவுதியில் நேற்று சூரியன் மறைந்த நேரம் மாலை 6:05 மணி. அப்பொழுது அன்று பிறந்த சந்திரனின் வயது சுமார் 15 மணி நேரம். சந்திரனின் ஒலியூட்டுதல் (Illumination) அப்போது வெறும் 0.5% மட்டுமே. அதன் நீட்சி(Elongation) 7.78 டிகிரி. அதுமட்டுமல்ல. இந்த இணையதளத்தில் வெளியிடட்டபட்ட பார்க்கக் கூடிய நிலை வளைவு (Visibility Curve) நிலப் பரப்பில் சவுதி இல்லை.
புறக் கண்ணால் பார்க்க முடிந்த இடங்களான தென் பசிபிக் கடல் தீவுகள், தென் அமெரிக்க கண்டத்திலுள்ள நாடுகளான சிலி, அர்ஜென்டினா, பிரேசில், பொலிவிய, பெரு போன்ற நாடுகளில் பார்த்ததாக எந்த தகவலும் இல்லை. தொலை நோக்கிகள் உதவிகொண்டு பார்க்க இயலுமான தென் ஆப்ரிக்காவில் கூட பார்த்ததாக எந்த தகவலும் இல்லை. ஆனால் எந்த கருவிகளின் உதவி இருந்தாலும் பார்க்க முடியாத நிலப்பரப்பிலுள்ள சவுதியில் மட்டும் பார்த்ததாக தகவல். கிழக்கிலுள்ள ஈரான், பாகிஸ்தான், இந்தியா, மேற்கிலுள்ள எகிப்த், லிப்யா, அல்ஜீரிய, சூடான் , வடக்கிலுள்ள ஈராக், சிறிய, துருக்கி, தெற்கிலுள்ள எமன், ஓமன் போன்ற நாடுகளில் பார்க்க முடியாத தலை பிறை சவுதியில் மட்டும் எப்படி தெரிந்தது என்பது அல்லாஹுக்குத்தான் வெளிச்சம்.
ஏன் எந்த வளைகுடா நாடுகளிலும் பிறை பார்த்ததாக எந்த தகவலும் இல்லை.
ஒன்று தவறான தகவலை இந்த இணையத்தளம் நமக்குத் தந்திருக்க வேண்டும் அல்லது. சவுதி அரசு தவறான தகவல்களை பெற்று அறிவித்திருக்க வேண்டும். இரண்டும் சரியாக இருக்க முடியாது.
பிறை பார்த்ததாக இரண்டு முஸ்லிம்கள் சாட்சி சொல்லும் பொது நம்பவேண்டைய நாம், சவுதி அரசே பலர் பார்த்ததாக அற்விக்கும்போது நம்பிதானே ஆகவேண்டும்!.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross