54வது பள்ளிக்கூடங்களுக்கு இடையிலேயான சுப்ரதோ கோப்பை சர்வதேச கால்பந்து போட்டிகளில் -
ஜூனியர் பிரிவில் தமிழகம் சார்பில் விளையாட காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளி புதுடில்லி சென்றுள்ளது.
அம்பேத்கர் மைதானத்தில் இன்று (அக்டோபர் 5) நடைபெற்ற தனது இரண்டாம் சுற்றுப்போட்டியில், எல்.கே.
மேல்நிலைப்பள்ளி அணி, டி.பி.எஸ். வசந்த் கஞ்ச், டெல்லி அணியினை எதிர்த்து விளையாடியது. ஆட்ட நேர இறுதியில் 4-1 என்ற கோல்
கணக்கில் டி.பி.எஸ். வசந்த் கஞ்ச், டெல்லி அணி வெற்றிபெற்றது.
முழு நேர நிலை (10:05 am):
எல்.கே. மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம், தமிழ்நாடு - 1
டி.பி.எஸ். வசந்த் கஞ்ச், டெல்லி - 4
தற்போதைய புதுடில்லி வெட்பம் (10:05 am):
26 டிகிரி செல்சியஸ் (78.8 டிகிரி ஃபாரன்ஹைட்)
இடைவேளை நிலை (9:15 am):
எல்.கே. மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம், தமிழ்நாடு - 0
டி.பி.எஸ். வசந்த் கஞ்ச், டெல்லி - 1
தற்போதைய புதுடில்லி வெட்பம் (9:15 am):
26 டிகிரி செல்சியஸ் (78.8 டிகிரி ஃபாரன்ஹைட்)
இன்றைய போட்டியில் தோல்வியடைந்ததால் - எல்.கே. மேல்நிலைப்பள்ளி அணி, காலிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பிழந்தது. இன்று காலை
மற்றொரு போட்டியில் தோல்வியுற்ற திரிபுரா அணியும் காலிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பிழந்தது.
இரு போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ள மேகாலயா அணி - தற்போது முன்னிலையில் உள்ளது. ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்று டில்லி அணி இரண்டாம் நிலையில் உள்ளது.
நாளை (அக்டோபர் 6) நடைபெறும் போட்டியில் எல்.கே. மேல்நிலைப்பள்ளி அணி, மேகாலயா அணியுடன் மோதுகிறது. இப்போட்டி - காலை 9:45
மணிக்கு துவங்கும்.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 11:10 am /5.10.2013]
|