உத்தர பிரதேச மாநில அரசின் முஸ்லிம் விரோதப் போக்கு உட்பட பல்வேறு தீமைகளைக் கண்டித்து, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இம்மாதம் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட, அதன் நகர நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் அமைப்பான மனிதநேய மக்கள் கட்சியின் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் கூட்டம், இம்மாதம் 02ஆம் தேதி புதன்கிழமை மாலை 05.00 மணியளவில், கட்சியின் நகர கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.
தமுமுக நகர தலைவர் ஜாஹிர் ஹுஸைன் தலைமை தாங்கினார். மருத்துவ அணி செயலாளர் முஜீப், மமக நகரச் செயலாளர் ஐதுரூஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - இரண்டாவது பைப்லைன் திட்டம்:
காயல்பட்டினத்திற்கு சீரான குடிநீர் கிடைக்க வழி செய்யும் இரண்டாவது பைப்லைன் குடிநீர் திட்டத்தை விரைவாக முடித்து, மக்களுக்கு பயனளிக்க ஏற்பாடு செய்யுமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 2 - கண்டன ஆர்ப்பாட்டம்:
உத்தர பிரதேச மாநில அரசின் முஸ்லிம் விரோதப் போக்கு, தாது மணல் கொள்ளை, டி.சி.டபிள்யு. தொழிற்சாலையினால் ஏற்படுத்தப்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றைக் கண்டித்து, 11.10.2013 வெள்ளிக்கிழமை மாலை 04.00 மணிக்கு - காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு, தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, மனிதநேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
மமக மாவட்டச் செயலாளர் பீரப்பா, தமுமுக மாவட்டச் செயலாளர் நவாஸ், மாநில நிர்வாகி ஜோஸப் நொலாஸ்கோ, தமுமுக மாவட்டப் பொருளாளர் நெய்னா, மருத்துவ அணி மாநில செயலாளர் கிதுரு, மாவட்ட வழக்கறிஞர் அணியின் ஜெய்லானீ, யூஸுஃப், மமக மாவட்ட துணைச் செயலாளர் ‘முர்ஷித்’ முஹ்ஸின் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் - உடன்குடி, கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் பொதுக்கூட்டம் நடத்திட தீர்மானிக்கப்பட்ட.து.
தகவல்:
‘முர்ஷித்’ முஹ்ஸின்
மாவட்ட துணைச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி
கள உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |