ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.
ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் உள்ஹிய்யா கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா (ஜாவியா) சார்பில், மாடு பங்கு ஒன்றுக்கு ரூ.2000/- என தொகை நிர்ணயித்து அறிவிக்கப்பட்டு, அதனடிப்படையில் பங்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தது.
நடப்பாண்டு, மாடுகள் கொள்முதல் செய்ய கூடுதலாக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், கைப்பிடித்தத் தொகையை ஈடு செய்யும் நோக்குடன், பங்கொன்றுக்கு ரூ.250 அதிகரித்து, ஒரு பங்கின் விலை ரூ.2,250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஜாவியா நிர்வாகத்தின் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஏற்கனவே ரூ.2 ஆயிரம் தொகை செலுத்தி பங்கு சேர்ந்தவர்கள் கூடுதலாக ரூ.250 மட்டும் செலுத்தி ஒத்துழைக்குமாறும், புதிதாக பங்கு சேர விரும்புவோர் ரூ.2 ஆயிரத்து 250 தொகை செலுத்தி ஜாவியா அலுவலகத்தில் பெயர் பதிவு செய்துகொள்ளுமாறும், மேலதிக விபரங்களுக்கு, +91 4639 280342 என்ற அலுவலக தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்ளுமாறும் அந்நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் ஜாவியா நிர்வாகத்தின் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) உள்ஹிய்யா அறிவிப்பு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தகவல்:
ஜாவியா நிர்வாகத்தின் சார்பில்,
ஹாஃபிழ் M.S.முஹம்மத் ஸாலிஹ் |