54வது பள்ளிக்கூடங்களுக்கு இடையிலேயான சுப்ரதோ கோப்பை சர்வதேச கால்பந்து போட்டிகளில் - ஜூனியர் பிரிவில் தமிழகம் சார்பில் விளையாட காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளி புதுடில்லி சென்றுள்ளது.
இன்று (அக்டோபர் 4) நடைபெறும் தனது முதல் சுற்றுப்போட்டியில், எல்.கே. மேல்நிலைப்பள்ளி அணி, திரிபுரா விளையாட்டு பள்ளி, அகர்தலா அணியினை எதிர்த்து விளையாட உள்ளது.
இப்போட்டிகள் காலை 7 மணிக்கு - அம்பேத்கர் மைதானத்தில் நடைபெறும்.
ஜூனியர் பிரிவில் 32 அணிகள், எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. தமிழக அணி - சி வரிசையில் இடம்பெற்றுள்ளது.
விளையாட்டு நேரம் - ஒரு பாதி, 30 நிமிடம் என இரு பாதியாக அமைந்திருக்கும். இடைவேளை 5 நிமிடங்கள்.
திரிபுரா விளையாட்டு பள்ளியினை தவிர, எல்.கே.மேல்நிலைப்பள்ளி அணி இடம்பெற்றுள்ள குழுவில், டி.பி.எஸ். வசந்த் கஞ்ச், டெல்லி அணி
மற்றும் ஓம் ராய் நினைவு மேல்நிலைப்பள்ளி, மேகாலயா அணி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
போட்டிகள் நடைபெறும் அம்பேத்கர் மைதானம் - 2007 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இம்மைதானத்தில் இரவு போட்டிகள் நடத்த ஒளி ஏற்பாடு
உள்ளது. நேரு கோப்பை உட்பட பல முன்னணி கால்பந்து போட்டிகள் நடைபெற்றுள்ள இம்மைதானத்தின் அதிகாரப்பூர்வ கொள்ளளவு 20,000 ஆகும்.
டெல்லி மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மைதானம், உலக கோப்பை தகுதி போட்டிகள் நடத்த உலக கால்பந்து சம்மேளனம் FIFA அங்கீகரித்துள்ள, இந்தியாவில் உள்ள இரு மைதானங்களில் ஒன்றாகும். மற்றொன்று, சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானம் ஆகும்.
இன்று காலை புதுடில்லியில் வெட்பம் 25 டிகிரி செல்சியஸ் (77 டிகிரி ஃபாரன்ஹைட்) இருக்கும் என்றும், ஈரப்பதம் 82 சதவீதம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று புதுடில்லியில் சூரிய உதயம் காலை 6:16 மணிக்கு.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 8:45 am/4.10.2013]
|