103 கூட்டப் பொருட்களைக் கொண்ட காயல்பட்டினம் நகர்மன்றத்தின் செப்டம்பர் மாத கூட்டத்தின் 3ஆவது அமர்வு இன்று காலை 11.30 மணியளவில் துவங்கியது. 72 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மதியம் 01.30 மணியுடன் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இன்று மாலை 03.00 மணிக்கு கூட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3ஆம் அமர்வாக இன்று காலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,
04ஆவது வார்டு உறுப்பினர் ஏ.டி.முத்து ஹாஜரா,
08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய்,
10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்,
12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு,
16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாபுத்தீன்,
18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி,
பதவி விலகல் கடிதம் அளித்துள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான்
தவிர்த்து மற்ற அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். |