செய்தி: சுப்ரதோ கோப்பை: எல்.கே. மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம், தமிழ்நாடு vs ஓம் ராய் நினைவு மேல்நிலைப்பள்ளி, மேகாலயா போட்டி! புகைப்படங்கள் தொகுப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வெற்றி எட்டாக்கனியல்ல விரைவில் எட்டும் கனி! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[06 October 2013] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30552
நம் இந்திய தலைநகர் வரை சென்று,தங்கள் முயற்சியை முத்திரைப்பதித்த தங்கங்களே வீர சிங்கங்களே,வெற்றி தோல்வி என்பது எதார்த்தம் வெகு எழுச்சியோடு பங்கு கொள்வது,பதக்கம் பெற பாடுபடுவதென்பது ஒவ்வொரு வீரனுக்குறிய விலை மதிப்பற்ற சிறப்பாகும்!
உலகில் வெற்றிபெற்று சாதனை படைத்த அனைவர்களும் அவர்கள் முயன்ற அந்த முதல் முயற்சியிலேயே முழு வெற்றியை பெற்றுவிடவில்லை!
எம்பெருமானாரின் பிரியமுள்ள தோழர்கள் கூட நபியவர்களின் பல நேர்வழிகாட்டின் நெறிமுறைகளை கையாலும் பொழுது பல தடைகளையும் தாண்டிய
பிறகுதான் நபியின் பெருமைக்குறிய பாராட்டுதலைப்பெற்ற தோழர்களாக திழைத்தாதாக பல சான்றுகளை நாம் படித்திருக்கிறோம்!
ஈச்சைமர ஒட்டுமுறை சாகுபடியில் கூட உலக நடப்புகளுடன் ஒன்றிப்போக வேண்டும் என்று ஓராண்டிற்குப் பிறகே உத்தமநபியின் கவனத்திற்கு வந்து அதன் பிறகு அந்த ஒட்டுமுறை மகசூளுக்கு மனமுவந்து அனுமதியளித்த வரலாறுகளை பல சன்மார்க்க சான்றோர்கள் மூலமாக அறியப்பெற்றிக்கிரோம்!
ஏன் ஒளிவிளக்கை கொடுத்த ஆல்வாய் எடிசனாக இருக்கட்டும்,வான்வெளி ஊர்தி தந்த ரைட் சகோதரர்களாக இருக்கட்டும் எத்தனை தடைகளை தகர்த்தெறிந்து,எத்தனை இன்னல்களை சந்தித்து இறுதியில் இவ்உலகம் போற்றும் உன்னத இடத்தில் ஒய்யார புகழுடன் வெற்றி வீரர்களாக இன்றும் நம் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லயா?
ஏன் நம் கஜனி முகம்மதின் படையெடுப்பு எத்தனை?
இறுதியில் வெற்றி வாகை சூடவில்லையா?
நாம் நினைக்கும் அத்தனை வெற்றிகளையும், அவ்வப்போதே கிடைக்கவேண்டும்,எத்தடங்கலும் இல்லாமல் எதையும் "இமி" பொழுதில் அடைய வேண்டும்,இனி எத்துன்பமும் எனக்கில்லை என்று இறுமாப்புடைய வாழ்வை நாம் விரும்புவோமேயானால், நம்மை படைத்த இறைவனை நாம் மறந்தவர்கள் மட்டுமல்ல,அவனுக்கு அஞ்சக்கூடிய நிலை மறந்து அகம்பாவ நிலையை அடைந்து விடுவோம்!
நம்மால் உருவான மானிடன் மமதையில் மிதக்க கூடாது என்பதற்காகவே எல்லாம் வல்ல அல்லாஹ்
எச்செயலின் பயனையும் எளிதில் எட்டுவதற்குமுன்
பலமுயற்சிகளை செய்ய வேண்டும்,பல முட்டுக்கட்டைகளை தாண்ட வேண்டும் என்று உலக வாழ்க்கை முறையை வகுத்திருக்கிறான்!
ஆகவே வெற்றிக்காக உன்னத முயற்சிகளை உடலாலும் உரமேறிய உள்ளதாலும் உழைத்த அன்பு தம்பிகளே,
தங்ககம்பிகளே இன்னும் எவ்வளவோ காலங்கள் உங்கள் வெற்றி கனவுக்கு முன்னால் காத்திருக்கிறது,கின்ஜித்தும் கலங்க வேண்டாம்,விடாமுயற்சியுடன் வீறு நடை போடுவோம் வெற்றியை அடைவோம்!
வெகுண்டு வெறுப்படைபவன் உண்மை வீரனல்ல,நம்மை வீழ்த்தவரும் எதிர்ப்பை இறுதிவரை எதிர்கொண்டு இறைவன் உதவியால் இன்று மாபெரும் வெற்றியை ஈன்றோம் என்ற வரலாறு படைக்கும் வெற்றியை நீங்கள் அடையத்தான் போகிறீர்கள் அந்த நாளில் இந்த அண்ணன் அல்லாஹ்வின்உதவியால் ஆயுலுடன்இருந்தால்,
எத்திசையில் வாழ்தாலும்"இமி" பொழுதில் ஓடோடிவந்து ஓராயிரம் ஆசை முத்தங்களை உங்கள் அன்புகரங்களில் செழுத்திடுவேன் இன்ஷா அல்லாஹ்!
விரைவில் உங்கள் வெற்றிக்கரங்கலருகில்,
முஹம்மது ஆதம் சுல்தான்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross