Re:...மக்கள் வைத்தியர் சுகுமாறன் posted byசாளை பஷீர் (மண்ணடி , சென்னை)[06 October 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 30558
மருத்துவர் சுகுமார் அப்போது நினைவுக்கு வந்தார்.
என் மகளுக்கு உடல்நலமில்லாமல் போகும்போதும், எங்கள் நோய்களுக்கும் பெருங்குடி ரயில் நிலையத்திற்கு அருகே குடியிருக்கும் அவர்தான் சிகிச்சை செய்துவந்தார்.
வேளச்சேரி-தரமணி சாலையில் குடியிருக்கும் குடிசைப் பகுதி மக்களுக்கும் அவர்தான் மருத்துவர். எந்த ஆடம்பரமும் விளம்பரங்களும் விற்பனைப் பிரதிநிதிகளும் இல்லாத அவரது வீட்டின் கார் ஷெட் போன்ற முன்பகுதியில் திரைமறைப்பில் தான் அவர் அவர் மருத்துவம் பார்த்துவந்தார்.
அவரிடம் மாத்திரை மற்றும் ஊசியோடு சேர்த்து 50 ரூபாய்தான் அதிகபட்ச கட்டணம். எனக்கு திருமணமான காலத்தில் 30 ரூபாய் பீஸ் வாங்கினார். யாரையும் நோய் குறித்து அச்சம்கொள்ள வைக்காமல் சிரித்த முகத்துடன் அவரவர் குடும்ப நலனை விசாரித்து மாத்திரை மருந்து கொடுத்தனுப்புவார்.
பணம் இல்லாமல் சிலர் சிகிச்சை பெற்றுப் போவதையும் பார்த்திருக்கிறேன். குடி காரணமாக வயிற்று வலியோடு அவதிப்பட்டு வருபவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுவது அவசியமாக இருக்கும். அவர்கள் கூலி மற்றும் துப்புரவு வேலை செய்பவர்கள். வீட்டின் முன்பகுதி முற்றத்திலேயே ஒரு மரக்கட்டிலில் படுக்கவைத்து அவர்களுக்கு டிரிப்ஸ் ஏற்றுவார்.
நோய் குறித்து அச்சம் கொள்ள வைக்காமல் சிரித்த முகத்துடன் அவரவர் நலனை விசாரித்து மாத்திரை மருந்து கொடுத்தனுப்புவார்.
கடந்த ஓராண்டாக நீரிழிவு நோயால் அவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டது. நாங்கள் சிகிச்சைக்குப் போகும்போது, அவரது உடல்நலன் குறித்தும் நாங்கள் விசாரிப்போம்.
சில நாட்களில் எழ முடியாமல் எழுந்து வந்துதான், காத்திருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்தார். உடன் ஒரு உதவியாளரையும் சேர்த்துக் கொண்டிருந்தார். சுகுமார் மருத்துவரை விட்டால் அவர்களுக்கு வேளச்சேரியில் எளிமையாக மருத்துவம் செய்ய இப்போது ஆளே கிடையாது.
இந்தக் கட்டுரையை எழுதும்போது சுகுமார் மருத்துவர் உயிருடன் இல்லை. அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நானும் என் மனைவியும் அவர் வீட்டுக்குப் போனோம். அங்கே இருந்த கூட்டத்தைக் காண ஆச்சரியமாக இருந்தது.
மருத்துவரின் உறவினர்களை விட அவர் சிகிச்சை அளித்த ஏழைகள்தான், சொந்தத் தந்தையின் மரணத்தைப் போல சொந்த இழப்பைப் போல அழுது அரற்றிக்கொண்டிருந்தனர். ஒரு புறம் நெகிழ்வும், இத்தனை நேசத்தை அவர் சம்பாதித்திருப்பது தொடர்பான ஆச்சரியமும் ஏற்பட்டது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross