துல் ஹஜ் பிறைக் காட்சி படம் எடுக்கப்பட்ட விபரம்... posted byM.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.)[08 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30582
அன்புள்ள வாசகர்களே!
06/10/2012 அன்று மாலை 06:15 மனிக்கு கடல் காட்சியை படமெடுத்து விட்டு நண்பர்களோடு கடற்கரை திறந்தவெளிப் பள்ளியில் மஃரிப் தொழுது விட்டு வழக்கமாக நான் தேனீர் அருந்தும் புதிய பேருந்து நிலைத்திற்கு சென்றேன். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடை பூட்டியிருந்தது.
முன்பு தப்லீக் ஜமாத் மாநாடு பந்தல் போட்டிருந்த மேற்கு பகுதியில் மிகத் தெளிவாக வானில் ஒரு செந்நிறத்தில் செதுக்கிய மெல்லிய கீற்று போல் இளம்பிறையைக் கண்டேன். மிக அருமையான காட்சி! உடனே நான் எனது நோக்கியா-N8 செல்ஃபோனில் படம் பிடித்தேன். ஒரு மெல்லிய கீற்று என்பதால் தெளிவாக இல்லை. எனவே ஜூம் செய்து இரண்டு படங்கள் இருட்டினில் எடுத்தேன். அதை செய்திக்காக இத்தளத்திற்கு அனுப்பி வைத்தேன். இதுதான் நடந்த உண்மை!
இதில் படம் தெளிவாக தெரிய வேண்டும் என்பதால் க்ரோப் செய்திருக்கலாம் அல்லது படத்தின் அளவைக் கூட்டி இருக்கலாம். ஏன் இந்த வீனான சர்ச்சைகள்? விவாதம் செய்யாமல் செய்தியை ஒரு தகவலாக மட்டும் எடுத்துக் கொள்வதுதான் வாசகர்களாகிய நமது கடமை. நான் எடுத்த ஒரிஜினல் படங்களை எனது முகநூலில் Timeline –ல் பதித்துள்ளேன். பார்க்க:
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross