Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:58:18 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12015
#KOTW12015
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 7, 2013
அக்டோபர் 6 அன்று காயல்பட்டினத்தில் துல்ஹஜ் மாத தலைப்பிறை தென்பட்ட காட்சி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3116 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நேற்று (அக்டோபர் 6, 2013) காயல்பட்டினத்தில் துல்ஹஜ் (1434) மாத தலைப்பிறை தென்பட்ட காட்சி:



புகைப்படம்:
ஹிஜாஸ் மைந்தன்,
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Husain Noorudeen (Abu Dhabi) [07 October 2013]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30561

பிறை கொஞ்சம் பெருசா இருக்குற மாதிரி தெரியுதே. அநேகமா இது துல்கஅதா பிறை 28ஆ இருக்கும்னு நெனைக்குறேன்.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Seyed Mohamed (Bakkavi) (khobar) [07 October 2013]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30563

Kayalpatnam moon is bold.. I second husain..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பிறை கண்டல்லோ?
posted by hasbullah mackie (dubai) [07 October 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30565

பிறையை பார்க்க வேண்டியதில்லை என்பவர்களுக்கும் பிறைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை...அது பெரிசா இருந்தா என்ன ? சிரிதா இருந்தா என்ன? நம்ம தான் அடுத்த முப்பது வருட நோம்பு மற்றும் ஹஜ் பெருநாள் திகதியை இப்போதே சொல்லி விட முடியுமே?

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by farook (Saudiarabia) [07 October 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30566

நண்பர் ஹச்புல்லாஹ் சொல்லுவதுபோல், பிறையை பார்க்காமல் காலண்டரை பார்த்து முடிவு செய்பவர்கள், பிறை பற்றி எழுதுவது ஆச்சரியம். பிறையை படம் எடுத்து zoom பண்ணினால் பெருசா தான் தெரியும். இந்த படத்தில் கிளாரிட்டி குறையா இருப்பதால், இது ஜூம் செய்த போட்டோ தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...நபிகள் நாயகம் காலத்திலும் இப்படி தலைபிறை பெரிதாக இருந்த செய்தி இவர்களுக்கு தெரியாதோ...
posted by mackie noohuthambi (colombo) [07 October 2013]
IP: 122.*.*.* Sri Lanka | Comment Reference Number: 30568

காமாலை கண்ணுடயவனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்ற கதை உண்மையோ என்னவோ, பிறை பற்றி சந்தேகக் கண் கொண்டு பார்க்கும்போது அது பெரிதாக தெரிவதில் நியாயம் இருக்கத்தான் செய்யும்.

ஹஸ்புல்லாஹ் மக்கி அவர்கள் சொல்வதுபோல், பிறையை கண்ணால் காணாமல் கணக்குபோட்டே அறிந்து கொள்வது தான் சரியான முறை என்று வாதாடுபவர்களுக்கு பிறை பெரிதாக தெரிந்தால் என்ன சிறிதாக தெரிந்தால் என்ன, எல்லோருக்கும் ஒரு வழி என்றால் இடும்பனுக்கு வேறொரு வழிதான். என் வழி நபிமொழி என்று சொல்பவர்கள் என் வழி தனி வழி என்று சொல்லி போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். இப்போது அவர்களை யார் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். ஆக வேண்டிய வேலைகளை பாருங்கள்.

10 நாட்களும் நல் அமல்கள் செய்யுங்கள். முடிந்த வரை நோன்பு பிடியுங்கள், தான தர்மங்கள் கொடுங்கள் ஆடு குர்பான் கொடுங்கள் குடும்பங்களை ஒன்றினயுங்கள். குடும்ப பாசங்களை போற்றி பாதுகாத்துக் கொள்ளுங்கள். சிறு சிறு பிரச்சினைகளை ஊத்தி பெரிதாக்காமல் அதை காலடியில் போட்டு மிதித்து உறவுகளை பேணி நடவுங்கள்.இவை தான் உங்களை அல்லாஹ்விடம் நெருக்கமாக்கி வைக்குமே தவிர பிறை பற்றிய விவாதங்கள் ஆய்வு அரங்கங்கள் அல்ல.

நபிகள் நாயகம் அவர்கள் காலத்திலும் இப்படி தலைப்பிறை பெரிதாக தெரிந்ததாகவும் நபி தோழர்கள் நபி அவர்களிடம் கேட்டபோது ஒரு தம்பதிகளின் பிள்ளையின் ஜாடை பற்றி அவர்கள் கருத்து கூறி நீங்கள் எதை கண்டீர்களோ அது தலைபிறைதான் என்று கூறி அந்த விவாதம் தொடர முடியாமல் முற்றுப் புள்ளி வைத்தார்கள் என்ற தகவல் உலமாக்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அடுத்து அரபா நாள் சர்ச்சை வரும் அதற்கும் ஆயிஷா நாயகி தக்க பதில் சொல்லியிருக்கிறார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் கோயிலிலே தமிழன் அர்ச்சனை செய்ய அனுமதி வேண்டும் தமிழில் அர்ச்சனை செய்ய அனுமதி வேண்டும் என்று பேசி வந்தார். அதற்கு ஒரு அறிஞர் சொன்னார், கடவுளே இல்லை என்று சொல்பவர்களுக்கு கடவுளுக்கு அர்ச்சனை செய்வது பற்றி பேச அருகதை இல்லை. அர்ச்சனை தமிழில் இருந்தால் என்ன சமஸ்கிருதத்தில் இருந்தால் என்ன, கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று ஒப்புக் கொள்ளுங்கள், அதன்பிறகு யோசிப்போம் கடவுளுக்கு அர்ச்சனை செய்வது தமிழனா, தமிழிலா என்று விவாதிப்போம் என்று சொன்னார். ஆனாலும் அந்த பெரியாரின் தம்பிமார்கள் கூட ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று தங்கள் கோஷத்தை மாற்றி கொண்டார்கள்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஒன்றே குலம். ஒருவனே இறைவன் , ஒன்றே மறை ஒரே நபி என்ற தாரக மந்திரத்தை நம் வாழ்க்கை நெறியாக கொண்டுள்ள முஸ்லிம்களாகிய நாம் இப்படி வீண் வாதங்களில் இறங்கி நமது ஈமானை பாழாக்கி கொண்டிருக்கிறோமே அதுதான் 21ம் நூற்றாண்டில் முஸ்லிகளுக்கு ஏற்பட்டுள்ள பெரிய முசீபத்து. அல்லாஹ் பாதுகாப்பானாக..அல்லாஹ் மிக அறிந்தவன்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Husain Noorudeen (Abu Dhabi) [07 October 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30570

அட்மின் அவர்களே, என்னுடைய கருத்துக்கு கொச்சையாக கமண்ட் அடிக்க அனுமதிக்கும் நீங்கள், அதற்குரிய என்னுடைய மறுப்பை "விவாதம் தவிர்ப்பு" என்ற போர்வையில் மறைப்பது ஏன் என்று நன்றாகவே விளங்குகிறது.

உண்மையிலயே நீங்கள் நடுநிலைவாதியாக இருப்பீர்களானால், இந்த மறுப்பையாவது வெளியிடவும்.

மறுப்பு தெரிவித்து கமண்ட் அடித்தவர்களுக்கு பதில்:

யார் யாரோ பிறை பற்றி கருத்தரங்கு நடத்துகிறார்கள் என்ற உங்களின் ஆதங்கம் எங்களுக்கு நன்றாகவே புரிகிறது. பிறையின் அளவைப்பற்றிய ஹதீதை உங்களுக்கு சொல்லித்தந்த அந்த ஆலிம் கீழ் வரும் ஹதீதை உங்களுக்கு சுட்டிக்காட்டவில்லையா:

உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் 'ஒரு மாதம் தம் மனைவியருடன் சேர்வதில்லை' என்று சத்தியம் செய்திருந்தார்கள். இருபத்தி ஒன்பது நாட்கள் முடிந்ததும் (தமது இல்லம்) திரும்பினார்கள். அவர்களிடம் 'நீங்கள் ஒரு மாதம் (வீட்டிற்கு) வரமாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர்களே' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் 'ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் அமையும்' என்றார்கள். (புகாரி 1910)

மாதம் முடிந்ததற்கு பிறை பார்க்கப்பட்டிருந்தால் அது இங்கே விளக்கப்பட்டிருக்கும். பிறையை கொண்டு மட்டுமே மாதத்தை அறியமுடியக்கூடிய காலமாக அது இருந்தது. பிறை பார்க்கப்பட்டிருந்தால் ஏன் மாதம் முடியும் முன்னே வீட்டிற்கு போகின்றீர்கள் என்ற கேள்வியே எழுந்திருக்காது.

அல்லாஹ் தனது மறையில் கூறுவதை கேளுங்கள்:

"அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன."

"சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன."

பிறையை ஜூம் பண்ணி போட்டோ எடுப்பதால் பெரிதாக தெரியாது (அதாவது பிறையின் வயது கூடாது). Photoshop ல் மாற்றினால் தான் அவ்வாறு தெரியும். இந்த குறைந்த பட்ச விளக்கம் கூட இல்லாதவர்கள் அடுத்தவரைப்பற்றி கமண்ட் அடிக்கிறார்கள். அல்லது இந்த போட்டோவை வெளியிட்ட வலைதளத்தினர் தங்களது கை வேலையை காட்டி இருக்கிறார்கள் என்று கமண்ட் அடியுங்கள்.

அடுத்து வேறு ஒருவர் எழுதுகிறார், "பிறையை பார்க்க வேண்டியதில்லை என்பவர்களுக்கும் பிறைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை...அது பெரிசா இருந்தா என்ன ? சிரிதா இருந்தா என்ன? நம்ம தான் அடுத்த முப்பது வருட நோம்பு மற்றும் ஹஜ் பெருநாள் திகதியை இப்போதே சொல்லி விட முடியுமே?"

ஆமா முப்பது வருடம் அல்ல, அதற்கும் மேலும் ஆயிரம் வருடங்களுக்கு சொல்ல முடியும். மேல குறிப்பிட்டுள்ள வேத வசனங்களை பாருங்கள். அல்லாஹ்வின் படைப்பில், அவனது காலத்திட்டத்தில் கோளாறு இருக்காது என்பதை முழுமையாக நாங்கள் விசுவாசம் கொண்டுள்ளோம். வேதத்தின் ஒன்றை நம்பி மற்றொன்றை மறுக்கும் கூட்டம் அல்ல நாங்கள்.

சிந்தியுங்கள் மக்களே.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Husain Noorudeen (Abu Dhabi) [07 October 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30571

என்னுடைய முந்தைய கருத்துப்பதிவின் தொடர்ச்சி:

2007ல் என்று ஞாபகம், ஜாவியாவில் பிறையைப்பற்றி ஒரு கருத்தரங்கம் நடத்தினார்கள். இரண்டு நாட்கள் பிறையைப்பற்றி சகோதரர் காஜா முஹ்யித்தீன் அவர்கள் உரை ஆற்றினார்.

முதலாம் நாள் உரை முழுவதிலும் "பிறையப்பார்த்து நோன்பு வையுங்கள், பிறையப்பார்த்து நோன்பை விடுங்கள்" என்ற ஹதீதின் அடிப்படையில் பேசி முடித்தார். அன்றைய உரையின் இறுதியில் பார்வையாளர்களில் ஒருவர் "அப்படியானால் 'இன்னா உம்மத்துன் உம்மிய்யதுன்' என்று ஒரு ஹதீது உள்ளதே, அதன் கருத்து என்ன" என்று கேட்டார். அதற்கு, மறுநாள் பதிலளிப்பதாக உரையாளர் தெரிவித்தார்.

மறுநாள், கணக்கின் அடிப்படையை தவிர்க்க கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் போராடி பார்த்தப்பிறகு, ஆமாம் இருக்கிறது, வேண்டுமானால் கணக்கிட்டு கொள்ளுங்கள், இல்லையென்றால் இல்லை, என்று அவர் சமாளித்ததை மீண்டும் ஒரு முறை கணக்கை குறை சொல்லுவோர் கேளுங்கள். உண்மை விளங்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [08 October 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30581

எங்களைப் போல சாமானிய மக்களின் நிலைமைதான் கவலைக்குள்ளானது.

இந்த பள்ளிக்கு சென்று ஒரு பயானை கேட்டால் சரியாக தான் இருக்கின்றது. அதே சப்ஜெக்ட்டை வேறு பள்ளியில் கேட்கும் போது, ஆமாம் இதுதானே சரியாகப் படுகின்றது என்று விளங்குகின்றது. சரி, இதே மேட்டரை வேறு ஒரு இடத்தில பேசுகிறார்கள் என்று அங்கு சென்றால், அடா..டா இவர் சொல்லுவதும் சரியாக தானே இருக்கின்றது என்று குழப்பத்தின் உச்சிக்கு சென்று விடுகின்றோம்.

ஆக, ஒரு விசயத்தை ஒரு சாமானியன் புரிவதற்குள் அவனின் ஆயுள் முடிந்து விடுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இந்த மார்க்கத்தை வெள்ளை வெள்ளேர் என்று விட்டு செல்லுவதாக கூறினார்களே.. ஆக, இந்த குழப்பத்திற்கு காரணம் எது.? யார்?

நாம்தான். அல்குர்ஆனை மடக் மடக் என்று தண்ணீர் குடிப்பது போல ஓதி விடுகின்றோம். புரிதல் இல்லை. எத்தனை தமிழ் குர்ஆன் வந்துள்ளது. விளங்கி படிக்கின்றோமா? கிட்டத்தட்ட அனைத்து ஹதீஸ்களும் தமிழில் வந்துவிட்டது. விளக்கம் பெற்றோமா? இல்லையே. ஆக, யார் சொன்னாலும் சரி என்று தலையை ஆட்டிவிட்டு வந்து விடுகின்றோம்.

சரிங்க, பெரிய விவாதம் எல்லாம் எங்களுக்கு தேவை இல்லை.

தற்ப்போது தென் தமிழகம் முழுவதும் மேக மூட்டமாக உள்ளது. பிறையே தெரிய வாய்ப்பு இல்லை. நாம் இன்றைய நாளை 30 என்று முடிவு செய்து விடுகிறோம். ஆனால், சென்னையில் பிறை தெரிந்து, தலைமை காஜி அவர்கள், நாளை பெருநாள் என்று அறிவித்து விட்டார். இப்போது நம்முடைய நிலைமை என்ன.?

( பிறையை பார்த்து நோன்பு வையுங்கள் என்ற வாதத்திற்குக்கோ, கிலோமீட்டர் கணக்குக்கோ, கணிப்பு விசயத்திற்க்கோ வரவில்லை, அதான் ஒவ்வொருவர் சொல்லுவதும் சரியாக படுகின்றதே. )

நாமும் தலைமை காஜியின் அறிவிப்பை ஏற்று, நம் முடிவை மறுபரிசீலனை செய்து கொண்டோம்.

இதற்கு எல்லாம் காரணம் அறிவியல் வளர்ச்சி. தகவல் தொடர்பில் உண்டான மறுமலர்ச்சி. ஒரு நொடியில் சென்னையில் பிறை பார்த்த விசயம், தலைமை காஜியின் அறிவிப்பு ஆகியவை நமக்கு கிடைத்து விடுகின்றது.

ஆக, இன்றைய காலத்தில் சென்னையில் பெருநாள் என்றால், நம் காயலிலும் பெருநாள். (பிறையை பார்க்காவிட்டாலும்).

சரி, இதே விசயத்தை ஒரு ஐநூறு வருடங்களுக்கு முன்பு, (அதாவது அறிவியல் வளர்ச்சியோ, தொலை தொடர்பு வசதியோ இல்லாமல், அதிகபட்ச வேகமான வாகனம் என்றால் அது குதிரைதான் என்ற காலம்), நடை பெறுகின்றது என்றால்.. நிலைமை என்ன?.

சென்னையில் பிறை பார்த்த விபரம் நமக்கு வர குறைந்தது 2 நாட்களாக ஆகும். ஆக, சென்னையில் பெருநாள் என்றால், காயலில் நோன்பு.

ஒரே விசயம்தான், காலம்தான் வேறு. ஆனால், இரண்டு முடிவுகள். நம்முடைய மார்க்கம் அப்படியா? உலகம் முடிவு நாள் வரைக்கும் ஒரே மார்க்கம், ஒரே முடிவுதானே.

எங்களுக்கு இருக்கும் ஒரே ஆசை என்ன வென்றால், ஒரு 20, 25 வருடங்களுக்கு முன்பு, நம் ஊரில் தொழுகைக்கு ஒலிக்கப்படும் பாங்கில் (அழைப்பில்) பிரச்சனை இருந்தது. ஒரு பள்ளியில் பாங்கு ஒலிக்கப்படும், இன்னும் ஒரு பள்ளியில் 10 நிமிடம் கழித்து பாங்கு ஒலிப்பார்கள். பெண்கள் தொழுக ஆரம்பித்த பின்பு, அருகில் இருக்கும் பள்ளியில் அழைப்பு டங்கா அடிப்பார்கள், ஆரம்பித்த தொழுகையை விட்டு விடுவார்கள்.

இந்த பிரச்சனையும், இன்றைய பிறை பிரச்சனை போலவே இருந்தது. ஒருவர் டைம் பார்த்து பாங்கு சொல்லுவார், இன்னொருவர் சூரியனின் நிழலையும், உதிக்கும், மறையும் வேளையையும் பார்த்து பாங்கு சொல்லுவார்.

இந்த குழப்பத்திற்கு அனைத்து ஆலிம்களும் ஒன்றாக அமர்ந்து, ஒருங்கிணைந்து ஒரு முடிவு எடுத்து, இறுதி நாள் வரைக்கும் கணக்கிட்டு, கணித்து, ஒரு அட்டவணை தயாரித்து, முடிவு செய்து, அனைத்து பள்ளிவாசலுக்கும் தொழுகை கால அட்டவணை போர்டு வைத்து, இன்று வரை அதை பின்பற்றி, குழப்பம் இல்லாமல் இருக்கின்றதே,

இதை இதை இதைப்போல, அனைத்து ஆலிம்களும் ஒருங்கிணைந்து ஒரு நல்ல முடிவுக்கு வாருங்களேன்.

ரசூல் (ஸல்) கூறிய, வெள்ளை வெளேர் மார்க்கத்தை விட்டு சற்றும் பிசகாமல், நேரிய வழியில் செல்லும் பாக்கியத்தை வல்ல அல்லாஹ் எங்களுக்கு தருவானாக.

இப்படிக்கு,
ஒரு சாமானியன்,
சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. துல் ஹஜ் பிறைக் காட்சி படம் எடுக்கப்பட்ட விபரம்...
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [08 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30582

அன்புள்ள வாசகர்களே!

06/10/2012 அன்று மாலை 06:15 மனிக்கு கடல் காட்சியை படமெடுத்து விட்டு நண்பர்களோடு கடற்கரை திறந்தவெளிப் பள்ளியில் மஃரிப் தொழுது விட்டு வழக்கமாக நான் தேனீர் அருந்தும் புதிய பேருந்து நிலைத்திற்கு சென்றேன். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடை பூட்டியிருந்தது.

முன்பு தப்லீக் ஜமாத் மாநாடு பந்தல் போட்டிருந்த மேற்கு பகுதியில் மிகத் தெளிவாக வானில் ஒரு செந்நிறத்தில் செதுக்கிய மெல்லிய கீற்று போல் இளம்பிறையைக் கண்டேன். மிக அருமையான காட்சி! உடனே நான் எனது நோக்கியா-N8 செல்ஃபோனில் படம் பிடித்தேன். ஒரு மெல்லிய கீற்று என்பதால் தெளிவாக இல்லை. எனவே ஜூம் செய்து இரண்டு படங்கள் இருட்டினில் எடுத்தேன். அதை செய்திக்காக இத்தளத்திற்கு அனுப்பி வைத்தேன். இதுதான் நடந்த உண்மை!

இதில் படம் தெளிவாக தெரிய வேண்டும் என்பதால் க்ரோப் செய்திருக்கலாம் அல்லது படத்தின் அளவைக் கூட்டி இருக்கலாம். ஏன் இந்த வீனான சர்ச்சைகள்? விவாதம் செய்யாமல் செய்தியை ஒரு தகவலாக மட்டும் எடுத்துக் கொள்வதுதான் வாசகர்களாகிய நமது கடமை. நான் எடுத்த ஒரிஜினல் படங்களை எனது முகநூலில் Timeline –ல் பதித்துள்ளேன். பார்க்க:

https://www.facebook.com/rafeeq.mnl

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. நம் விருப்பமும், எதிர்பார்ப்பும்
posted by yahya mohiadeen (dubai) [08 October 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30585

ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகள் என்ற நபிமொழிக்கேற்ப, நமதூரின் இருபெரும் மதரஸாக்களின் ஆலிம்கள் கூடி விவாதித்து உம்மத்துகளுக்கு அறிவிக்கும் முடிவை மனதார ஏற்போம், வழிபடுவோம்.

நபி மூசா (அலை) அவர்களை நபியென ஏற்றும், கேள்விக்குமேல் பல கேள்விகள் கேட்டும், விதண்டாவாதம் செய்தும், சீரழிந்து சின்னாபின்னமான கூட்டத்தினர் போல் ஆகாமல், ஒட்டுமொத்தமாக ஆலிம்களின் முடிவுக்கு இணங்கினால், அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் நிச்சயம் நமக்கு உண்டு.

வானவியலை முறையாக கற்றுத்தேர்ந்த ஒருமார்க்க அறிஞர் மர்ஹூம் நஹ்வி செய்யிது நூஹு ஆலிம் அவர்கள்.

நமதூரில் நெடுங்காலமாக இருந்த பாங்கு நேர பிரச்சினைக்கு ஒரு முயற்சி எடுத்து தீர்வு கண்டது இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF). சற்றொப்ப 30 வருடங்களுக்கு முன், நமதூரின் அணைத்து ஆலிம்களையும் அழைத்து மஜ்லிசுல் புஹாரிஷரீப் சபையில் அமர்த்தி, விவாதித்து மேற்கூறிய ஆலிம் அவர்களின் கணக்கீட்டுப்படி நமதூரின் தொழுகை நேரங்களை முறைப்படுதிக்கொள்வது என்று ஏக மனதாக முடிவு செய்தனர்.

இம்முடிவை, நமதூரின் இருபெரும் கல்விக்கேந்திரங்களான ஜாவியா மற்றும் மஹ்ளரா நிர்வாகிகள் சரியென ஒப்புதல் அளித்தனர்.

இக்கணக்கீட்டு முறையே இன்றளவும் செயல்பாட்டில் உள்ளது. இதுபோன்றே இன்றைய பிறை கணக்கீடு முறையையும், முறையாக அணுகினால் இன்ஷா அல்லாஹ் இதற்கும் ஒரு தீர்வு பிறக்கும்.

ஆலிம்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் என்றென்றைக்கும் உண்டு. ஏன்? இமாம்கள் மத்தியிலும் உண்டு, இன்னும் சொல்லப்போனால் நபிமார்கள் மத்தியிலும் இருந்தன. இக்கருத்து வேறுபாடுகளை அல்லாஹ் குரானிலும் பதிவு செய்துள்ளான்.

நாம் விரும்புவதெல்லாம், நம் ஊரின் சங்கைக்குரிய ஆலிம்கள் அனைவரும் ஒன்றுகூடி, அவர்களின் கருத்துகளை குரான் மற்றும் ஹதீத் அடிப்படையில் முன்வைத்து ஒரு தீர்க்கமான முடிவை சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்பதுதான். மாறாக, வெவ்வேறு திசைகளில் தங்களின் முகங்களை திருப்பிக்கொண்டு உயிரனைய ஷரியத்தின் விசயங்களை சொல்லும் முறையில்தான் நாம் மாற்றத்தை விரும்புகிறோம்

மீண்டும் சொல்கிறோம், நம் ஊரின் அணைத்து ஆலிம்களும் ஒன்றுகூடி ஏக மனதாக ஒரு முடிவை சொல்லுங்கள். அந்நாள் எப்போது வருமோ அப்போது உங்கள் கால்களால் நீங்கள் எங்களுக்கு கட்டளை இடுங்கள், எங்கள் தலைகளால் அவற்றை பின்பற்றுகிறோம்.

நீங்கள் மார்க்க கல்வி பயில முதலீடு செய்த வருடங்களையும், மார்க்கப்பணியில் உங்களின் வாநாட்களை செலவு செய்யும் தன்மைகளையும் என்றைக்கும் மதிக்கிறோம். இவற்றிற்கு அல்லாஹ் நற்கூலி தர போதுமானவன்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களை அணுகி தீர்வு காண்பது அறிவுடைமை. அதுபோல்தான் இப்பிரச்னைக்கும் தீர்வு எட்டப்படவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

நம்முடைய ஆசையும், எதிர்பார்ப்பும் ஆலிம்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்பதுதான். எல்லா ஆலிம்களும் ஒன்றுகூடி விவாதித்து, தேவையெனில், இத்துறைசார்ந்த நிபுணர்களையும் அழைத்து, அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து இறுதியில், அறிவியல் கூற்றுப்படி நம்முடைய கணக்கீட்டு முறையை செயல்படுத்துவோம், அல்லது இக்கணக்கீடுமுறை குரான், ஹதீத் ஒளியில் நின்றும் வேறுபடுகிறது. எனவே, இந்தந்த அடிப்படையில் இன்றைக்கு நோன்பின் முதல் நாள் அல்லது பெருநாள் என்று சமூகத்திற்கு அறிவிக்கும் முறையைதான் விரும்புகிறோம், எதிர்பார்க்கிறோம்.

மொத்தத்தில் அணைத்து ஆலிம்களும் ஒன்றுபட்டு அறிவிக்கும் முடிவே நம் விருப்பமும், எதிர்பார்ப்பும். இவ்விருப்பமும், எதிர்பார்ப்பும் நடக்காது என்ற அவநம்பிக்கை எனக்கு கொஞ்சமும் இல்லை. நிச்சயம் நடக்கும் என்ற மேலென்ணமே ஓங்குகிறது. இதற்கு, முந்தைய பதிவில் கூறப்பட்ட நிகழ்வே காரணம்.

பின் குறிப்பு: இவ்விசயத்தில் கருத்துகளை பதியும் சகோதரர்கள் மென்முறையை கையாளுமாறு அன்புடன் வேண்டுகிறேன். கருத்துகளில் வலிமையை ஏற்றுங்கள் - அதேநேரம் நமக்குள் நன்முறையை நாடுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Fareed (Dubai) [08 October 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30589

Salam. Here i want to register my small doubts.

Some 15 years back the Aalims from KPM accepted the moon seen at srilanka and kerala and declare in KPM for Ramadan start or EID celebration. After the moon discussion started by hijra committee and Thowheed jamath, the same Aalims from KPM is not ready to accept the moon seen from srilanka and kerala. Even nagarkoil muslims is not accepting the decision of kerala muslims which is very close to them

Pls clear my doubts -why double standard followed by this Aalims. What is the benefits they received and who is held responsible for this act.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...நாககோவிலும் மாலேயகாவுன் ம்
posted by Husain Noorudeen (Abu Dhabi) [09 October 2013]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30594

ஆமா ஆமா, நாங்க 90 கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற நாகர்கோவிலை எல்லாம் கணக்குல எடுக்க மாட்டோம். ஆனா வடக்கே 3000 கிலோ மீட்டர் தாண்டி இருக்குற மாலேகாவுன்ல யாராவது பிறை பாத்தாங்கன்னு சொன்னாங்கன்னா உடனே எந்த மறுப்பும் சொல்லாம ஏத்துக்குவோம். இது எல்லாம் எங்களுக்கு எது வசதின்னு படுதோ அப்படித்தான் நடக்கும். அவாம்களாகிய நீங்க எங்க சொல்லுக்கு கட்டுப்பட்டு தண்டம் கட்டி நிக்கணும். அதுதான் உங்க கடமை.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Fareed (Dubai) [09 October 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30600

Salam. I believed my claim is correct.I am expecting some answers from Aalims and their beloved students of KPM and other KPM peoples who is not accepting the moon seen in other countries which is accepted by them earlier If they are not reply my query , meaning that all the Aalims and their students are lead our society in a wrong way and they should be responsible for all the acts in-front of Allah I am requesting Admin team to convey this message to Aalims and get their reply


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Farook (Saudiarabia) [09 October 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30609

பிறையை ஜூம் பண்ணி போட்டோ எடுப்பதால் பெரிதாக தெரியாது (அதாவது பிறையின் வயது கூடாது). Photoshop ல் மாற்றினால் தான் அவ்வாறு தெரியும். இந்த குறைந்த பட்ச விளக்கம் கூட இல்லாதவர்கள் அடுத்தவரைப்பற்றி கமண்ட் அடிக்கிறார்கள். அல்லது இந்த போட்டோவை வெளியிட்ட வலைதளத்தினர் தங்களது கை வேலையை காட்டி இருக்கிறார்கள் என்று கமண்ட் அடியுங்கள். (C-P)

போட்டோ எடுத்தவரே ஜூம் பண்ணி தான் போட்டோ போட்டேன் என்கிறார். ஜூம் பண்ணி போட்டதை தப்பு என்றா சொன்னோம். எந்த படத்தையும் ஜூம் பண்ணி போட்டால் பெரிதாதான் தெரியம். அதன் அசல்ளில் (இங்கே பிறை வயதில்) மாற்றம் உண்டு என்று நானோ அல்லது சகோ. ஹச்புல்லாஹ் வோ கூறவில்லையே. அது என்ன photoshop எடுத்தால் மட்டும் வருமாம்?? முதலில் கிண்டலா கேள்வி கேட்டு விவாதத்தை ஆரம்பம் செய்து விட்டு, மற்ற சகோதரரை வம்புக்கு இருக்காதீர்.

எந்த படத்தையும் ஜூம் பண்ணி போட்டால் பெரிதாதான் தெரியம். அதன் அசல்ளில் (இங்கே பிறை வயதில்) மாற்றம் உண்டு என்று நானோ அல்லது சகோ. ஹச்புல்லாஹ் வோ கூறவில்லையே. அது என்ன photoshop எடுத்தால் மட்டும் வருமாம்?? (C-P)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆயத்துக்கு தெரியாத விளக்கமா உங்களுக்கு எனக்கு தெரியும்? "சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன."

ஏன் நபிகள் பிறையை பார்க்க சொல்லணும்? மேகமூட்டம் இருந்தால் (அல்லது இல்லாமல் இருந்தாலும்) பிறை தெரியவில்லை என்றால் ஏன் முப்பது என்று கணக்கு எடுக்கள் என்று நமக்கு சொல்லி தரணும்? நீங்க எல்லா மாதமும் பிறை 30 என்பதே கிடையாது என்று சொல்ல வருகிறீர்களா? அப்படி 30 பிறை என்று இருக்கும் என்றால், எந்த எந்த மாதம் பிறை 30 அடுத்த வருடம் வரும் என்று உங்க ஹிஜ்ர காலெண்டரை பார்த்து சொல்லவும்?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Fareed (Dubai) [10 October 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30621

All dear brothers

All the peoples are answering Mr.Hussain Noordeen emails.Why no body answering my email. Who is the culprit. How 15 years before the same Aalim and their beloved students informed all KPM peoples to accept the moon seen at srilanka and near by states in KPM and now why the same aalim and their beloved students refusing to accept the same.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved