துல்ஹஜ் (1434) மாத பிறை குறித்து தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி மௌலவி பாஜில் எஸ்.டி. அம்ஜத் அலி மஹ்ழரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:
அன்பிற்கினிய இஸ்லாமிய பெருங்குடி மக்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதஹூ. 06.10.2013 ஞாயிற்றுகிழமை பின் திங்கள் இரவு தமிழகத்தில் துல்ஹஜ் தலைப்பிறை தென்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்).
எனவே, வருகிற 14.10.2013 திங்கள் பின்னேரம் செவ்வாய் இரவு அரஃபா இரவு எனவும், 15.10.2013 செவ்வாய் பின் புதன் இரவு ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப்பெருநாள் இரவு எனவும் தமிழக அரசு தலைமை காஜி அவர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.
எனவே தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் பெருமக்கள் 15.10.2013 செவ்வாய் அன்று அரஃபா தினமாகவும், 16.10.2013 புதன் அன்று ஹஜ்ஜு பெருநாளாகவும் கொண்டாட வேண்டும் என அன்புடன் அறிவிக்கப்படுகிறார்கள். அல்லாஹ் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக. ஆமீன்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் படங்கள்: ஹிஜாஸ் மைந்தன்,
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்.
1. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM)[07 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30564
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த வருஷம் தான் நமது ஊரில் அனைத்து மக்களும் ஒரே நாளில் சிறப்பாகவே பெரு நாள் கொண்டடுவதை நினைத்து மனதுக்கு பெருமையாகவே உள்ளது ...
ஒரு பக்கம் நமக்கு மன கவலையாகவும் இருக்கிறது ...இன்னும் ஒரு சில அமைப்புகள் பெரு நாள் ...தேதியை குறிப்பிட்டு ..... என்ன சொல்ல போகிறார்களோ என்கிற மன கவலையும் ஒரு பக்கம் இருக்கிறது ....அல்லாஹு மேலானவன்.
2. Re:... posted byV.M.T.MOHAMED HASAN (TUNG CHUNG, HONG KONG)[08 October 2013] IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 30584
ASSALAMU ALAIKUM
INSHA ALLAH
இவ்வூரைச் சார்ந்த அனைவரும் ஒரேநாளில் முதல் நோன்பு நோற்க, ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வல்ல அல்லாஹ் அருள்வானாக. ஆமீன்.
WE UNITE WE STAND AND WE DIVIDE WE FALL.. THIS IS REALITY,
MAY ALMIGHTY ALLAH PROTECT US FROM EVIL HAPPENINGS AND UNITE THE UMMAH.
YA ALLAH SHOW YOUR RIGHT PATH AND SHOWER YOUR MERCY TOWARDS ALL UMMAH AND GIVE US THE SHAFAATH OF OUR BELOVED PROPHET HAZRATH MUHAMMED (PEACE BE UPON HIM), AMEEN.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross