அரசு புறம்போக்கு (80 ஏக்கருக்கு மேல் உள்ள) நிலமெல்லாம் தற்போது எங்கே... ! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[08 October 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 30590
CRZ பகுதியில் இருந்து ஒதுங்கி (இதே சர்வே எண்ணில்) வேறு இடத்தை தருவதாக முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர்ரஹ்மான் மாவட்ட ஆட்சியரிடம் இன்று தெரிவித்தார். CP
நகரின் தேவைக்கு உதவி செய்ய முன் வந்து பெருந்தகைக்கு வாழ்த்துக்கள்... அதே நேரத்தில் நாம் இதையும் கவனிக்க வேண்டும்...!
1976ஆம் ஆண்டு காயல்பட்டினம் பஞ்சாயத்திற்கு அப்போது திருச்செந்தூர் தாசில்தாராக இருந்த வேலாயுதம் என்பவர் நம் நகர் பஞ்சாயத்திற்கு ஒப்படைக்கப்பட்ட காயல்பட்டினம் தென் பாக - வட பாக கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு (80 ஏக்கருக்கு மேல் உள்ள) நிலமெல்லாம் தற்போது எங்கே... ! மாவட்ட ஆட்சியர் இதில் கவனம் செலுத்த வேண்டும்...!
அருணாச்சலபுரத்திலுள்ள 334/1, 334/2 ஆகிய சர்வே எண்களைக் கொண்ட நிலப்பரப்பை அப்பகுதி மக்கள் அரசு புறம்போக்கு இடம் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொண்டது போல் ஏன் (இந்த இணையத்தில் குறிபிடப்பட்டுள்ள) பிற சர்வே எண்களைக் கொண்ட நிலப்பரப்பை தெரிந்து கொள்ள முயற்சிக்க கூடாது...?
அரசு புறம்போக்கு நிலத்தை தனியார் ஒருவர் அவ்விடத்திற்கு உரிமை கொண்டாடி வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக செய்தியில் அறியமுடிகிறது... இது போல் எத்தனை எத்தனை அரசு நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதோ... !
அதை தீவிரமாக ஆராய்ந்தாலே பயோகாஸ் திட்டத்திற்கான இடம் அமைந்து விடும் என்பதில் சந்தேகம் அல்ல...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross