சினிமா...மிகப்பெரிய ஆயுதம். posted byM.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.)[09 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30593
அருமையான மென்மையான ஆழமான ஓர் பதிவு!
சினிமாவை முற்றிலுமாக நம்மவர் தவிர்த்த காரணம் ஆடல், பாடல், ஆபாசக் காட்சிகள், கொலை, கொள்ளை, வன்முறை சம்பவங்கள், இவைகள் மேலோங்கி இருப்பதால்தான்.
இன்று செய்தித்தொடர்பு சாதனங்கள், மீடியாக்கள், விஷுவல் கம்யூனிக்கேஷன் என பல்வேறு பரிணாம வளர்ச்சிக்கேற்ப சினிமாவின் ஆதிக்கமும் அசுர வளர்ச்சியும் மறுக்க இயலாத ஒன்று.
அரசியல்வாதிகள் ஆட்சியைப் பிடிக்க கையாண்ட சூழ்ச்சியில் பெரும் பங்கு வகித்தது சினிமாதான். பாமர மக்களுக்கு பார்த்தால் புரியும் விதத்தில் கதை வடித்து காட்சியில் லயித்து கண்ணீர் சிந்த வைத்ததும் சினிமாதான். கட்சி வளர்ந்ததும் சினிமாதான். கட்சி பிளர்ந்ததும் சினிமாதான்.
கேரள மக்கள் சிந்தனையே வேறு. வைக்கம் முகம்மது பஷீர் போன்ற பழுத்த எழுத்தாளர்களின் பல ஆக்கங்கள் இஸ்லாமிய கதாபாத்திரத்தை சித்தரிக்கும் சினிமாவாக வெளிவந்து அனைத்து சமுதாய மக்களும் பார்த்து உணரும் வித்ததில் அமைந்திருந்தன. மணியறை, மணித்தாலி, போன்ற எண்ணற்ற சினிமாக்கள் இஸ்லாமிய கலாச்சாரத்தை மேம்படுத்தி பாமர மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. எனவே அழுத்தமான கதாபாத்திரங்கள் தரமான கதையம்சம் கொண்ட பல முஸ்லிம் கதைகளும் மலையாள மொழியில் வெளிவந்தது. வெற்றியும் பெற்றது.
இவ்வளவு ஏன்? ஒரு முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன் வெளிவந்த கஃபா எனும் திரைப்படம் இஸ்லாமிய மக்களின் பேராதவைப் பெற்று வசூலில் சாதனை படைத்ததை நாம் மறுக்க இயலாது. தம் வாழ்நாளில் தியேட்டர் என்பது என்ன்வென்றே பார்த்திராத நம் தாய்க்குலங்கள் அணி திரண்டு அல்லாஹ்வின் ஆலயத்தைக் காண வரிசையில் நின்றது நினைவில் உள்ளது.
இஸ்லாமியர்களை சதிகாரர்களாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரித்து வன்மத்தை தூண்டும் பல சினிமாக்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டுமெனில் நம்மவர் இத்துறையில் கோலோச்ச வேண்டும்.
நம் கலாச்சாரம், பண்பாடு மற்றும் கொள்கை, ஆகியவற்றை மென்மையாக எடுத்து உலகிற்கு உணர்த்த அபாசமில்லாது ஆடல் பாடல் தவிர்த்து யதார்த்த நிலையை சித்தரிக்கும் இஸ்லாமிய கதைகளை நாம் சினிமாவாக கொண்டு வர வேண்டும். வர இயலும். உதாரணம் தி மெஸேஜ், உமர் முஃத்தார் போன்ற ஆங்கில படங்களைக் கூறலாம்.
நண்பர் கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் மிக அருமையாக தமது கருத்தை வெளியிட்டிருந்தார். அவருக்கும் இக்கட்டுரையைத் தந்த கே.எஸ்.முகம்மது ஷுஐப் அவர்களுக்கும் பாராட்டுக்கள்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross