செய்தி: முஸ்லிம்களுக்கு வாழ்வுரிமையை பெற்றுத் தந்தது முஸ்லிம் லீக்! முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாட்டில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பச்சை திரையை கண்ணில் கட்டி கொண்டு மஞ்சள் துண்டுடன் புது உறவு துவங்கி இருக்கும் கவிமகனாருக்கு முதலில் வாழ்த்துக்கள்!!
அன்று உங்களுக்கு வேஷத்தலைவராக தெரிந்து இன்று பச்சை கண்ணாடி அணிந்த உடன் பாச தலைவராக மாறி இருக்கும் தலைவரின் தளபதி சொன்ன இட ஒதுக்கிடுக்கு பிரச்சனைக்கு அன்று சொன்ன பதிலையே உங்களுக்கு சமர்ப்பணம் செய்யும் நாள் வரும் என்று எதிர்பார்க்க வில்லை
ஓர் அழகான வீட்டை துப்புரவு செய்து, வண்ணம் பூசி, அலங்கரித்து, அந்த வீட்டு வாயிற்படி மீது, அழுகிய குப்பையை கொட்டி வைத்தது போல், இனத்துரோகி கருணாநிதியை மேடையில் ஏற்றி, நாறும் குப்பைக்கு நறுமணம் என்று பட்டம் வேறு அளித்திதிருப்பதை மனசாட்சி உள்ள எந்த முஸ்லிமும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று நம்புகிறேன்.
எந்த மேடையில் ஏறினாலும் வாக்குறுதி என்ற பெயரில், அல்வா கொடுப்பது கருணாநிதிக்கு கை வந்த கலை. பாரதீய ஜனதா உடனான இவர்களது காதல் முறிந்து போனது பதவிச் சண்டயாலேயன்றி, அடிக்கடி இவர் காற்றிலே பறக்க விடுகின்ற கொள்கையினால் அல்ல என்பதை, நாட்டு நடப்புகளை அவதானிக்கின்ற எல்லா நண்பர்களும் அறிவார்கள்.
இடஒதுக்கீடு குறித்து சட்டமன்றத்திலே, மறைந்த தலைவர் அப்துல் லத்தீப் அவர்கள் கோரிக்கை வைத்த போது, அவரைக் கடிந்து கருணாநிதி உரைத்த துரோக வார்த்தைகள் சட்டமன்றக் குறிப்பிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது தோழர்களே!
பிற்காலத்தில் லத்தீப் அவர்களை கொண்டே, தாய்சபையை இரண்டாகப் பிளந்து தந்தை சபையையும் உருவாக்கிய கயமையின் மொத்த உருவத்திற்குப் பாராட்டும் பட்டமும் தந்திருப்பத்தின் பின்னணி பேராசியருக்கே வெளிச்சம்.
எனதருமைத் தாய்சபையே! கருணாநிதியின் கயமைப் பிடிக்குள் சிக்காமல், காய்தே மில்லத் அவர்களின் கண்ணியமிக்க வழியில், இனியேனும் நடைபோட, என்னைப் போன்றவர்களின் வாழ்த்துக்கள். கருத்து உபயம் கவிமகன் (அன்றும் - இன்றும் )
நாள் : December 13, 2010 தகவல்: Kayalpatnam .com
http://www.kayalpatnam.com/shownews.asp?id=5262
உங்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மறுநாளே ஏற்காடு இடைதேர்தலுக்கு பிஜேபி க்கு ஆதரவு கடிதம் எழுதி இருக்கிறார்.!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross