80 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்திற்கு இன்னும் விடை தெரியாமல் உள்ளது... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[11 October 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 30652
ஏழாண்டுகளாக காயல்பட்டினம் நகராட்சிக்கு தேவையான குப்பைக்கொட்டுவதற்கான இடம் தேடல்! இச்செய்தி இன்று நகரில் எத்தனை பேருக்கு தெரியும்...? குறிப்பாக தற்போது உள்ள நகர்மன்ற உறுப்பினர்களில் சில பேருக்கு கூட 7 ஆண்டுகளாக இடம் தேடல் தொடர்பு தெரியாமல் இருக்கலாம்...!
இச்செய்தியில் ஆதாரமான தகவல்களை இணைத்து உண்மை நிலவரங்களை நகர்மக்களுக்கு அறிய செய்த இணையதளத்திற்கு நன்றி...
முன்னால் நகர்மன்ற தலைவர் கொடுப்பதாக அறிவித்த நிலம் அது அன்றே அவரின் மற்றும் (முன்னால் நகர்மன்ற துணைதலைவர்) தனது பதவி காலத்திலேயே அது CRZ
பகுதியில் வருகிறது என்றும் மாசு கட்டுபாட்டின் அனுமதியும் கிடைக்கவில்லை என்பதனால் அது கிடப்பில் போடப்பட்டது என முன்னால் நகர்மன்ற துணை தலைவர் சகோதரர் C S சதக்கத்துல்லாஹ் அவர்கள் மூலம் சில மாதம் முன்பே அறிந்து கொண்டேன்...
இன்று அது முழுமையாக மக்கள் பார்வைக்கும் தெளிவுக்கும் ஊடகம் மூலம் வெளி வந்துள்ளது...
சும்மா... எதற்கு எடுத்தாலும் திட்டத்திற்கு தலைவி தடையாக இருக்கிறார்கள்...! தலைவி தானாகவே அந்த நிலத்தை அவர்களாகவே அது CRZ பகுதியில் வருகிறது என்று ஆட்சியரிடம் கூறியதாகவும்... அதனால் அந்த நிலம் கிடைக்க அமைய தடை செய்து விட்டார் தலைவி... என்று பொய் பித்தலாட்ட பிரச்சாரங்கள் ஊடக வாயலாகவும், ஒரு குழுவாக செயல்பட்டு பேச்சு வாயலாகவும் பொய் பரப்புரைகள் செய்து வருவதினால் தீர்வு ஏற்பட போவதில்லை...! அது தீர்வாகாது.... உண்மை எதுவோ அதுவே... நாட்கள் பல தாமதித்தாலும் உண்மையே மக்கள் மத்தியில் போய் சேரும்...
வேண்டாம் இனி பொய் பரப்புரை...
குறிப்பு:- 1976 இல் தாசில்தார் மூலம் நகர்மன்றதிர்க்கு சமர்ப்பிக்கப்பட்ட 80 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்திற்கு இன்னும் விடை தெரியாமல் உள்ளது அதை பற்றி விரைவில் RTI மூலம் தகவல் பெற்று மக்களுக்கு அதன் பதிலை பார்வைக்கு தாருங்கள் என பணிவோடு வேண்டுகிறேன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross