அவர்களுக்கு தவ்ஃபீக் செய்வானாக ... posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[12 October 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 30696
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
பெருநாள் வாழ்த்து சொல்வதற்கு போஸ்டர் ஒட்ட வேண்டிய அவசியமில்லை – போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்றால் அதிலே அவர்களுக்கு ஆதாயம் இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
ஆதாயம் ஒன்றும் நாட்டை ஆளக்கூடிய அளவுக்கு இல்லை என்றாலும் கட்சியிலோ அல்லது அவர்கள் வசிக்கும் பகுதியிலோ பிரபல்யம் ஆகிறதற்காக இருக்கலாம் – அதற்காக அவர்கள் போஸ்டர் அடித்து இருப்பதைகூட சகித்துக்கொள்ளலாம்.
ஆனால் பெயர்களுக்கு மத்தியில் ஈமானல்லாதவர்களின் பெயரை அடைமொழியாக சேர்ப்பதை மார்க்க பற்றுள்ள , பண்புள்ள முஸ்லிம் செய்யமாட்டான் என்பதை அந்த சகோதரர்கள் உணர வேண்டும்.
இனியாவது தங்கள் சொந்த ஆதாயத்திற்காக பெயர்களை மாற்றுவதையும், ஊரின் பெயரை உபயோகிப்பதையும் நிறுத்திக்கொள்வார்களாக – அல்லாஹ்! அவர்களுக்கு தவ்ஃபீக் செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross