ஹஜ் பெருநாளை முன்னிட்டு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், பொதுமக்களுக்கு பெருநாள் வாழ்த்து தெரிவித்து பின்வருமாறு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது:-
1. Re:... posted byZainul abdeen (Dubai)[12 October 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30684
யாரோ ஒரு கூத்தாடி ஒரு இரண்டு சீட்டு வைத்துகொண்டு அதுவும் அவருடைய சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக வந்த கட்சிக்காக தங்களின் பெயருக்கு முன்னால் சரத் என்று சூட்டி அதையும் பார்பவர்கள் என்ன நினைக்க கூடும் என்று கூட கொஞ்சமும் சிந்திக்காமல் இப்படி போஸ்டர் அடித்து பெருநாள் வாழ்த்துக்கள் தெரிவிகிறார்கள்.
அவர்களை அவர்களின் தந்தையருடனேயே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது! (அல்குர்ஆன், 33:5)
இன்னாரின் மகன் என்று தந்தையின் பெயர் தெரிந்திருக்க அவரின் தந்தையின் பெயருடனேயே அழைக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. இரத்த சம்பந்தமான தந்தையல்லாதவரின் (வளர்ப்புத் தந்தையாக இருப்பவரின்) பெயரை தெரிந்து கொண்டே தந்தையாகச் சேர்த்து சொல்லக்கூடாது, அப்படிச் சொல்வது அநீதியாகும் என்பதையே அல்குர்ஆன் (033:005) வசனம் உணர்த்துகிறது. மேலும், தந்தை இல்லை என்று தெரிந்துகொண்டே தனக்குத் தந்தையல்லாத ஒருவரைத் தந்தை என்று கூறினால் சுவனத்தின் வாடையைக்கூட அனுபவிக்க முடியாது என்று ஹதீஸ்கள் எச்சரிக்கின்றன.
இப்படி வளர்ப்பு தந்தை பெயரை கூட கூறி அழைக்க தடை இருக்கும் இந்த மார்கத்தில் பிறந்து கொண்டு கண்ட கண்ட கூத்தாடி பெயர்களை எல்லாம் பெயருடன் போட்டு .. நம்ம ஊரில் , அதுவும் பெருநாள் வாழ்த்து .. எங்கே போய் சொல்ல???
சரத் ராதிகா கேள்விபட்டிறிக்கிறோம்.. அது என்ன சரத் ஜுவைரியா !!!!!!
7. Re:...மிகவும் வேதனை posted byA.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA)[12 October 2013] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30695
மிகவும் மன வேதனை ....
எங்கே செல்கிறது நமது இஸ்லாமிய சமூதாயகம் . ஒரு நடிகனின் பெயருடன் இணைத்து நமது இஸ்லாமிய சகோதர , சகோதரியின் பெயர் . இது நமக்கு எல்லாம் ஒரு வெட்க கேடு தான் .
நம்முடைய பெயருடன் , நமது நாயகம் கண்மணி அவர்களின் பெயரையும் பரக்கத்துக்காக இணைக்கும் வழிமுறையாக கொண்டு உள்ள நமது சமூதாயத்தில் இப்படியுமா ? ? ? ...
வல்ல நாயன் , இப்படி வழி தவறி நடக்கும் இந்த மாதிரியான நம் சமூதாய மக்களுக்கு அவனுடைய நல்ல ஹிதாயத்தை கொடுத்து .. நமது இஸ்லாமிய வழி நெறியில் & வழி முறையில் நடக்க அருள் புரிவானாக ... ஆமீன் .
8. அவர்களுக்கு தவ்ஃபீக் செய்வானாக ... posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[12 October 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 30696
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
பெருநாள் வாழ்த்து சொல்வதற்கு போஸ்டர் ஒட்ட வேண்டிய அவசியமில்லை – போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்றால் அதிலே அவர்களுக்கு ஆதாயம் இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
ஆதாயம் ஒன்றும் நாட்டை ஆளக்கூடிய அளவுக்கு இல்லை என்றாலும் கட்சியிலோ அல்லது அவர்கள் வசிக்கும் பகுதியிலோ பிரபல்யம் ஆகிறதற்காக இருக்கலாம் – அதற்காக அவர்கள் போஸ்டர் அடித்து இருப்பதைகூட சகித்துக்கொள்ளலாம்.
ஆனால் பெயர்களுக்கு மத்தியில் ஈமானல்லாதவர்களின் பெயரை அடைமொழியாக சேர்ப்பதை மார்க்க பற்றுள்ள , பண்புள்ள முஸ்லிம் செய்யமாட்டான் என்பதை அந்த சகோதரர்கள் உணர வேண்டும்.
இனியாவது தங்கள் சொந்த ஆதாயத்திற்காக பெயர்களை மாற்றுவதையும், ஊரின் பெயரை உபயோகிப்பதையும் நிறுத்திக்கொள்வார்களாக – அல்லாஹ்! அவர்களுக்கு தவ்ஃபீக் செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.
10. காயல் பதியின் கேன்சர்களின் ஒரு வகை!!!. posted bys.s.md meerasahib (TVM)[13 October 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 30704
மார்க்க கல்வி குன்றி போனால்...... இதுவும் நடக்கும் இதுக்கு அப்புறமும் நடக்கும். பெயரளவில் முஸ்லிம்களாக இருப்பர். அல்லாஹ் காப்பாற்றுவானாக நம் காயல் மக்களை.
11. ஓவர்நைட் பப்ளிசிட்டி கொடுத்துட்டீங்களே !! posted bySalai.Mohamed Mohideen (KayalPatnam)[13 October 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 30707
அட போங்கங்க !! இதுக்கெல்லாம் கமெண்ட் எழுதி பப்ளிசிட்டி கொடுத்து கிட்டு...
தங்களின் சுவரொட்டி இணைய தளத்தில் எல்லாம் வரும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். அநேகமாக இச்செய்தி /கமெண்ட்கள் அவர்களை சென்றடைந்திருக்குமா என்று கூட தெரியவில்லை !
சமத்துவ மக்கள் கட்சி என்று ஒன்றிருக்கின்றதென்று (அதுவும் நமதூரில் நகர கிளை??) நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஓவர்நைட் பிரபல்யத்துக்கு, எதையாவது (எடக்கு மடக்காக) செய்து பெயர் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதெல்லாம் சகஜமப்பா !!
அடிப்படை / போதிய மார்க்க அறிவின்மை தான் இதற்கு மிக முக்கிய காரணம்... தயவு செய்து பிள்ளைகளை மார்க்க கல்வி பயில அனுப்புங்கள் !!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross