நடப்பாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தமிழ்நாடு ஹஜ் குழுமத்தின் மூலமாக சஊதி அரபிய்யாவிலுள்ள புனித மக்கா சென்றடைந்துள்ள காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹஜ் பயணியர், அங்கு தமது உறவினர் மற்றும் நண்பர்களைச் சந்தித்த காட்சிகள்:-
ஜட்னியாரே... அதென்ன களத்தொகுப்பு...??? எந்த களத்தில் இறங்கி போராடினீர்கள்....?
ஹரமில் மதாஃப் விரிவுபடுத்தபடுவதாலும், ஹாஜிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை களையவும், கூட்ட நெரிசலை கட்டுபடுத்தவும் சற்று கெடுபிடிகள் அதிகமென்று கேள்வி.
உரிய ஆவணமின்றி ஹஜ் பயணம் வேண்டாமே.
அரஃபாவில் நுழைய மூன்று வாயில்கள் மட்டுமே அமைத்து ஏனைய அரஃபா எல்கையை சுற்றிலும் தடுப்புகள் ஏற்படுத்தியிருப்பதாகவும், பாதுகாப்பு படையினரும் அதிகளவில் குவிந்திருப்பதாகவும் செய்தி.
கீழ்காணும் அறிவிப்பை சஊதி தொலைகாட்சியில் தொடர்ந்து ஓடவிட்ட வண்ணம் உள்ளார்கள்.
Dear Muslim Brothers: The Holy Masjid witnesses these days the expansion of Mataf to facilitate the performance of prayers and Circumambulation for the guests of Allah. Owing to the heavy crowding. We hope for cooperation till this project completed. Through the arrangement of Umrah and Hajj visits or to postpone them.
3. பராக்கு பாதை .. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[12 October 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30698
ஹாஜிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தெரிகிறார்கள். ஆனால் அவர்களோடு இருப்பவர்கள் தான் இணையதள படக்காட்சியில் பதிந்து விட வேண்டுமென்ற மிடுக்குடன் காட்சியளிக்கிறார்கள்!
இந்த கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக கூடிவருகிறது இறுதியில் எங்கள் குடும்பத்தார்களை காட்டவில்லை, உங்கள் குடும்பங்களை உதாசீனப்படுத்தி விட்டார்கள் என்ற தேவை இல்லாத தர்ம சங்ககடங்களை சந்திக்க வேண்டியது இருக்கும் எனதன்பின் அட்மின் அவர்களே!
இக்கலாச்சாரம் தீவிரமாகுமுன் சற்று சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்!
புனித பயணத்தின் புண்ணிய காரியங்கள் பிரிதொரு பராக்கு பாதைக்கு செல்ல நாம் காரணமாகி விடுவோமோ என்ற அச்சம் கலந்த உரிமையில் இந்த ஆதம் சுல்தான் எழுதுகிறேனே யல்லாமல் இதில் எள்ளளவும் உள் நோக்கம் இல்லை!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross