காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் பத்து லட்ச ரூபாய் செலவில் புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி நிறுவப்பட்டுளது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு காயல்பட்டணம் மருத்துவ அறக்கட்டளை தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கே.எம்.டி. மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் எம்.எஸ்.செய்யித் இஸ்மாஈல் புதிய கருவியின் செயல்பாட்டை முறைப்படி துவக்கி வைத்தார்.
காயல்பட்டினம் மருத்துவ அறக்கட்டளையின் மூத்த நிர்வாகிகளான ஹாஜி எம்.எம். உவைஸ், ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, உதவித் தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லா, கே.எம்.டி. மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் சிந்தியா தம்பிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அறக்கட்டளை செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம் செய்திருந்தார்கள்.
இந்த கருவியில் எக்ஸ்ரே படங்கள் கணினி மூலம் உருவாக்கப்படுவதால் அவை மிகவும் துல்லியமாக இருக்கும் என்பதும், எக்ஸ்ரே படங்களை சி.டி. மற்றும் பென் டிரைவில் பதிவு செய்து வைத்துக்கொள்ளவும், மின்னஞ்சல் வழியாக மருத்துவர்களுக்கு அனுப்பி ஆலோசனை பெறவும் வசதியாக இருக்கும் என்பதும் இதன் சிறப்பம்சமாகும்.
தகவல் & படங்கள்:
K.அப்துல் லத்தீஃப்
மேலாளர்,
கே.எம்.டி. மருத்துவமனை, காயல்பட்டினம் |