மைக்ரோ காயல், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்புகள் இணைந்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான மருத்துவ பரிசோதனை இலவச முகாமை நடத்தவுள்ளதாகவும், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அன்பார்ந்த காயல் வாசிகளே... அஸ்ஸலாமு அலைக்கும்!
இன்ஷா அல்லாஹ், வருகின்ற 20/10/2013 ஞாயிற்றுக்கிழமை காலை 09:30 மணி முதல் மாலை 03:30 மணி வரை, நமதூர் எல்.கே. லெப்பைத்தம்பி சாலையில் உள்ள எல்.கே. மேனிலைப்பள்ளி வளாகத்தில், அக்யூ பங்சர் இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
நாகர்கோவில் ATAMA மருத்துவக் குழுமத்துடன் இணைந்து, மைக்ரோகாயல் மற்றும் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்புகள் நடத்தவுள்ள இம்முகாமில், உயர் இரத்த அழுத்தம் {HIGH BLOOD PRESSURE}, நீரிழிவு [DIABETES] நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அத்துடன் அக்யூ பங்சர் தொடர்பான பொதுமக்களின் அய்யங்களுக்கும், வினாக்களுக்கும் தெளிவும் விளக்கமும் அளிக்கப்பட உள்ளது.
இம்முகாமில் பங்கெடுக்க விரும்பும் பொதுமக்கள், தம் பெயர்களை கீழ்க்கண்ட நபர்களிடம் முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டோக்கன்கள் வழங்கப்படும்.
தொடர்பு விபரம்:
1} V.N.S. மொகுதூம் அலீ ஸாஹிப் – 94870 80888
2} சாளை பஷீர் - 99628 41761, 91713 24824
3} எம்.எஸ்.ஹெச்.முத்து இஸ்மாயில்
ஸ்டார் ரெடிமேட்ஸ்
அஞ்சல் அலுவலகம் எதிரில்.
மெயின் ரோடு - காயல்பட்டினம்
இவ்வாறு, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
J.செய்யித் ஹஸன் |