Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:52:57 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12074
#KOTW12074
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 13, 2013
காயலர் முயற்சியில் உருவான “தி மெசேஜ்” டிவிடி தமிழ் பதிப்பு வெளியீடு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2955 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உலகின் சிறந்த 100 மனிதர்களில் முதல் நபராக இடம்பெற்ற நபிகள் நாயகத்தின் வரலாற்றை சொல்லும் “The Message” திரைப்படம் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வரலாற்றை உள்ளடக்கிய “தி மெசேஜ்’ என்ற ஆங்கில திரைப்படம், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் டிவிடி குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி, இம்மாதம் 12ஆம் தேதி சனிக்கிழமை (நேற்று) மாலை 06.00 மணிக்கு, சென்னையிலுள்ள Four Frames Preview Theaterஇல் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் DVD வெளியிட்டவர்கள் LKS இம்தியாஸ் அஹமது, A.R.ரேஹானா, முஹம்மது தம்பி, பி.மன்னர் ஜவஹர் (அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்), இயக்குனர்கள் கரு பழனியப்பன், S.P. ஜனநாதன், பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கேப்டன் அமீர் அலி, கவிக்கோஅப்துல் ரஹ்மான், பத்திரிக்கையாளர்நக்கீரன் கோவி.லெனின் மேலும் பலர்.



‘தி மெசேஜ்’ தமிழ் மொழியாக்கத்தை காயல் முஹம்மத் தம்பி இயக்கியிருந்தார். வெளியீட்டு விழா ஏற்பாடுகளை, அவரது ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.

ஆங்கிலத்தில் இப்படத்தை 1976இல் இயக்கியவர் முஸ்தபா அக்காட். இவர் ‘பாலைவன சிங்கம்’ என்றழைக்கபட்ட உமர் முக்தார் அவர்களின் வாழ்க்கைச் சரிதத்தைக் கொண்ட புகழ்பெற்ற ஆங்கில படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடதக்கது.

[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 4:05 pm / 13.10.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மார்க்கம் எடுபட்டுவிட்டதா ???
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [14 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30739

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வரலாற்றை குறிக்கும் திரைப்படத்தை நம் தாய் மொழியில் மொழிப்பெயர்த்திருப்பது இஸ்லாமிய சமுதாயம் மட்டும் அல்லாமல் மாற்று மதத்தவர்களும் இஸ்லாத்தைப் பற்றிய உண்மையான வரலாற்றை உணர வேண்டும் என்பதற்காகவே.

ஒரு மனிதன் பிறந்து முதல் மூச்சை வெளியிடுவதிலிருந்து அவனுடைய கடைசி மூச்சு நின்று அவனை சவக்குழியில் அடக்கும் வரை உள்ள அனைத்திற்கும் இஸ்லாம் வழிக்காட்டுகிறது.

அத்தகைய நேர்வழியை கற்பித்துக் கொடுப்பதற்காகவே இறைவன் நபிமார்களை அனுப்பி வைத்தான் அதிலும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறுதியாக அனுப்பி மார்க்கத்தை பூர்த்தி செய்தான்.

---------------------------------

அவர்களுடைய வரலாற்றை சொல்லக்கூடிய சீடி’யை வெளியிடும்போது அவர்கள் நமக்கு கற்பித்துத்தந்ததை காற்றில் பறக்கவிட்டது ஏன்??? – அதோ அந்த பெண்ணை பாருங்கள் தலையில் முக்காடு இல்லாமல், கையில் நெட் வைத்து தைத்த சட்டையை அணிந்து அக்குள்வரை காட்டிக்கொண்டு நிற்பதை – இதுதான் இஸ்லாம் மக்களுக்கு போதிக்கிறதா ?. ஏன் இந்த நிலை ? எதற்காக அதை யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்கள்.

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் , கவிக்கோ அப்துர்ரஹ்மான் அவர்கள் மற்றும் பல முஸ்லிம்கள் அங்கே நின்று கொண்டிருக்கிறார்கள் யாராவது ஒருவர் அந்த பெண்ணுக்கு சொல்ல வேண்டாமா! முக்காடு போடு என்று!!.

ஒரு வேளை அந்த பெண் முஸ்லிம் அல்ல என்றாலும்கூட அந்த சபையிலே பல ஆண்களுக்கு மத்தியிலே வரும்போது, அதுவும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்று சீடி’யை வெளியிடும்போது அந்த பெண்ணை வற்புறுத்தி முக்காடு இட சொல்லனும் அல்லது அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தி இருக்க வேண்டும்.

யாராவது அந்த பெண்ணிடம் சொல்லியிருந்தால் அதுவும் அந்த பெண் முஸ்லிமல்லாதவராக இருந்தால்கூட நிச்சயமாக ஏற்று முக்காடு அணிந்திருப்பார்.

அதை ஏன் அவர்கள் செய்ய வில்லை – அவர்களை செய்யவிடாமல் செய்தது எது பணமா ? இல்லை பதவியா ?? அல்லது அவர்களிடமிருந்து மார்க்கம் எடுபட்டுவிட்டதா ??? – சிந்தியுங்கள் மக்களே! சிந்தித்து செயலாற்றுங்கள்.

----------------------

கவிக்கோ அவர்கள் முகத்தில் புன்னகை இல்லை கடுகடுப்பாக தோன்றுகிறார்கள் – ஒரு வேளை அந்த பெண்ணின் கோலத்தை மனதால் வெறுத்து கடுகடுப்பாக இருக்கிறாரோ? என்னவோ ?? அல்லாஹ்! அறிவான்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. தி மெசேஜ் கண்டிப்பாக அனைவரும் குறிப்பாக நம் இளைய தலைமுறையினர் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு சரித்திர திரைப்படம். மொழியாக்கம் செய்தவருக்கு பாராட்டுக்கள்...!
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [14 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30741

இந்த சரித்திர திரைப்படம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் அதை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டுள்ளார்கள்.

மக்கா, மதீனா, பத்ரு, உஹது போர்கள், பிலால் ரலி, சுமைய்யா ரலி, சத்திய மார்க்கத்தை கட்டிக்காத்த எராளமான சஹாபாக்கள், ஹிஜிரத் இப்படி நம் நபிகள் நாயகத்தின் வரலாற்றை ஹதீத் புத்தகத்திலும், குரானின் வசனங்களிலும் படித்து உணர்ந்த நமக்கு கண்முன் தோன்றிய காட்சிகளை பார்க்கும் போது மெய்சிலிர்த்தது உண்மை.

மூலப்பிரதி ஆங்கிலத்தில் இருப்பினும் அதன் சாராம்சம் சற்றும் மாறாமல், பிசகாமல் தாய்மொழியில் அழகிய சொற்களால் காட்சிக்குப் பொருத்தமான வகையில் மொழி மாற்றம் செய்து இருப்பது பிறர் சொன்னால் மட்டுமே தெரியும். முதன் முறையாக பார்ப்பவர்கள் இது தமிழ் மொழியில் எடுக்கப்பட்ட படம் என்றே சொல்லுவார்கள்.

தி மெசேஜ் கண்டிப்பாக அனைவரும் குறிப்பாக நம் இளைய தலைமுறையினர் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு சரித்திர திரைப்படம். மொழியாக்கம் செய்தவருக்கு பாராட்டுக்கள்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
சரத்துக்கு ஒட்டு! (?!)  (13/10/2013) [Views - 3282; Comments - 8]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved