காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதுக்கு புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அறிவிக்கப்பட்ட படி, இன்று காலை 09.00 மணிக்குத் துவங்கி, மாலை 04.00 மணி வரை நடைபெற்றது.
தேர்தலில் போட்டியிட்ட 67 வேட்பாளர்களிலிருந்து, 55 வேட்பாளர்களை, பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்திட, மொத்தமுள்ள 1374 பொதுக்குழு உறுப்பினர்களில், 673 பேர் இத்தேர்தலில் வாக்களித்தனர்.
வாக்கு எண்ணிக்கை நிறைவுற்றதும், வாக்குப் பெட்டிகள் அனைத்தும் மூடி முத்திரையிடப்பட்டது. பூட்டிய அறைகளுக்குள், மாலை 05.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முறைப்படி துவங்கி, இரவு 09.40 மணிக்கு நிறைவுற்றது.
வாக்குப்பதிவுகள் நிறைவுற்று, வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல், தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலுடன், பள்ளியின் அனைத்துப் பகுதிகளிலும், பள்ளி வளாகத்தைச் சுற்றியும் பள்ளியின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரண்டிருந்தனர்.
இரவு 09.45 மணியளவில் தேர்தல் முடிவுகளை, தேர்தல் அதிகாரியும் - திருநெல்வேலி மண்டல வக்ஃப் கண்காணிப்பாளருமான வஸீர் அஹ்மத் முறைப்படி அறிவித்தார்.
[தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட அசைபடத்தைக் காண கீழ்க்காணும் படத்தின் மீது சொடுக்குக!]
அந்த அறிவிப்பின் படி, இத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு:-
[அட்டவணை விபரம்: வரிசை எண், பெயர், சின்னம் எண், பெற்ற வாக்குகள்]
வெற்றிபெற்று, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் நிர்வாகக் குழுவிற்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 55 உறுப்பினர்கள் விபரம் வருமாறு:-
[அட்டவணை விபரம்: வரிசை எண், பெயர், சின்னம் எண், பெற்ற வாக்குகள்]
தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன், தேர்தல் நடைமுறைகள் குறித்தும், பள்ளியைப் பராமரிப்பதன் ஒழுங்கு முறைகள் குறித்தும், பள்ளியின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இன்று நடைபெற்ற நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் வெற்றிபெற்ற 55 பேரும், நாளை (அக்டோபர் 14) நண்பகல் லுஹ்ர் தொழுகைக்குப் பின், பள்ளி வளாகத்தில் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தி, தலைவர், செயலர், பொருளர் மற்றும் துணை நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.
கள உதவி:
A.K.இம்ரான்
படங்களில் உதவி:
M.F.முஹம்மத் ஸாலிஹ்
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதுக்கு கடந்த முறை நடைபெற்ற நிர்வாகக் குழு உறுப்பினர் தேர்தல் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 08:10 / 14.10.2013] |