செய்தி எண் (ID #) 12081 | | |
திங்கள், அக்டோபர் 14, 2013 |
ஓமனில் காயலர் காலமானார்! ஸலாலாவில் நல்லடக்கம்!! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 3982 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த அம்பலம் செய்யித் ராபியா என்ற பெண்மணி, நேற்று (அக்டோபர் 13) ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில், ஓமன் நாட்டில் காலமானார். அவருக்கு வயது 55.
இவர், சின்ன அம்பலத்தார் என்றழைக்கப்பட்ட மர்ஹூம் அம்பலம் மொகுதூம் நெய்னா என்பவரின் மகன்வழிப் பேத்தியும்,
மர்ஹூம் பிரபு மஹ்மூத் நெய்னா என்பவரின் மகள்வழிப் பேத்தியும்,
மர்ஹூம் செய்யித் ஹுஸைன் மரைக்கா ஸாஹிப் என்பவரின் மகளும்,
மர்ஹூம் ஹாஜி பிரபு சுல்தான் ஜமாலுத்தீன் என்பவரின் மனைவியும்,
அம்பலம் மொகுதூம் நெய்னா என்பவரின் சகோதரியும்,
வாவு காதிர் ஸாஹிப் என்பவரின் மாமியும்,
ஹாஜி பிரபுத்தம்பி என்ற பிரபு முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி பிரபு அபூபக்கர், பிரபு செய்யித் அப்துர்ரஹ்மான் ஆகியோரின் மருமகளும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, ஓமன் ஸலாலா தளத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
K.M.T.சுலைமான் |