நெல்லை சரக டிஐஜி சுமித்சரண் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஏரலுக்கும், மாவட்ட குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆறுமுகநேரிக்கும், தூத்துக்குடி மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் ஸ்ரீவைகுண்டத்துக்கும், ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மத்தியபாகம் காவல்நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஆழ்வார்திருநகரி இன்ஸ்பெக்டர் ராஜு திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்துக்கும், திருச்செந்தூர் கோயில் இன்ஸ்பெக்டர் பிரதாபன் புளியம் பட்டிக்கும், புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆழ்வார்திருநகரிக்கும், ஏரல் இன்ஸ்பெக்டர் ராமராஜன் ஆத்தூர் காவல்நிலையத்துக்கும் மாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் திருட்டு சிடி தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் தீபு தூத்துக்குடி மாவட்ட குற்றஆவண காப்பக இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நெல்லை சரக டிஐஜி சுமித்சரண் விடுத்துள்ளார்.
நன்றி:
www.tutyonline.com
தகவல்:
'தமிழன்' முத்து இஸ்மாயில்
|