காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) சார்பில், நடப்பு ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளை முன்னிட்டு, இன்று காலை 07.40 மணிக்கு பெருநாள் தொழுகை, காயல்பட்டினம் கடற்கரையில் நடத்தப்பட்டது.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஏ.எஸ்.நெய்னா முஹம்மத் தொழுகையை வழிநடத்தினார்.
அப்பள்ளியின் கத்தீபும், ஆயிஷா ஸித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ குத்பா பேருரையாற்றினார்.
பெண்களுக்கும் தனி இடவசதி செய்யப்பட்டிருந்த இத்தொழுகையில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, துணைத்தலைவர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி எஸ்.எம்.அமானுல்லாஹ், ஹாஜி எஸ்.இப்னு ஸஊத், செயலாளர் ஹாஜி ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், துணைச் செயலாளர்களான ஹாஜி எல்.கே.கே.லெப்பைத்தம்பி, ஹாஜி எம்.ஏ.புகாரீ, பொருளாளர் ஹாஜி எம்.என்.எம்.ஐ.மக்கீ, துணைப் பொருளாளர் ஹாஜி கரூர் ஹஸன், முன்னாள் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், ஐ.ஐ.எம். பொறுப்பாளர் எஸ்.டி.ஷாஹுல் ஹமீத், ஐ.ஐ.எம். டிவி இயக்குநர் எஸ்.அப்துல் வாஹித், அதன் ஒளிப்பதிவாளர் எம்.ஏ.அப்துல் ஜப்பார், தமுமுக நிர்வாகிகளான கே.முஹ்ஸின் முர்ஷித், ஜாஹிர் ஹுஸைன், காயல்பட்டினம் நல அறக்கட்டளை தலைவர் ஹாஜி எஸ்.ஐ.அபூபக்கர், அதன் துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன், எழுத்தாளர்களான சாளை பஷீர், சாளை முஹம்மத் முஹ்யித்தீன், கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப், எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன் மற்றும் அல்ஃபத்தாஹ் அபுல்ஹஸன், அ.மு.சுலைமான், சாளை நவாஸ் உட்பட - நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
தொழுகை நிறைவுற்றதும், ஐ.ஐ.எம். பைத்துல்மால் சார்பில்,
ஆண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 61,642 தொகையும்,
பெண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 56,897 தொகையும் என
மொத்தம் 1,18,539 தொகை ஏழைகள் நல நிதியாக சேகரிக்கப்பட்டு, கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.
குத்பா உரை நிறைவுற்ற பின்னர், அனைவரும் கட்டித் தழுவி, கைலாகு செய்து, தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
மற்றும்
வீனஸ் ஸ்டூடியோ
தகவல் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |