அக்டோபர் 14 அன்று (நேற்று) அரஃபா நாள் என்றும், 15 அன்று (இன்று) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் என்றும் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் ஜமாஅத்தின் சார்பில், அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று அரஃபா நாளை முன்னிட்டு நோன்பு நோற்றோருக்காக, காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) வளாகத்தில், அந்நிர்வாகத்தின் சார்பில் இஃப்தார் - நோன்பு துறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த முன்னூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், வடை, கறி கஞ்சி உள்ளிட்ட பதார்த்தங்கள் அனைவருக்கும் பரிமாறப்பட்டன.
|