அக்டோபர் 15 அன்று (நேற்று) அரஃபா நாள் என்றும், 16 அன்று (இன்று) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், நேற்று அரஃபா நாளை முன்னிட்டு நோன்பு நோற்றோருக்காக அவ்வமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை யால் நிர்வகிக்கப்பட்டு வரும் - காயல்பட்டினம் அலியார் தெருவிலுள்ள ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் என சுமார் 200 பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், வடை, கறி கஞ்சி உள்ளிட்ட பதார்த்தங்கள் அனைவருக்கும் பரிமாறப்பட்டன.
|