தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், இம்மாதம் 15ஆம் தேதியன்று அரஃபா நாளென்றும், 16ஆம் தேதி (இன்று) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அவ்வமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், நடப்பு ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளை முன்னிட்டு, இன்று காலை 07.30 மணிக்கு பெருநாள் தொழுகை, காயல்பட்டினம் கடற்கரையில் நடத்தப்பட்டது.
ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியின் கத்தீப் மவ்லவீ அப்துல் மஜீத் உமரீ தொழுகையை வழிநடத்தியதோடு, குத்பா பேருரையும் ஆற்றினார்.
பெண்களுக்கும் தனி இடவசதி செய்யப்பட்டிருந்த இத்தொழுகையில் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
தொழுகை நிறைவுற்றதும், ஆண்கள் - பெண்கள் பகுதிகளிலிருந்து ஏழைகள் நல நிதியாக ரூபாய் 56,421 தொகை நன்கொடையாக சேகரிக்கப்பட்டது. |