இத்தொடரின் பாகம் 1 காண இங்கு அழுத்தவும்
இந்தியாவின் கடலோர பகுதி - அந்தமான், நிகோபார் தீவுகளையும் இணைத்து பார்த்தால் - சுமார் 7500 கிலோமீட்டர் நீளமாகும். இயற்கை வளம் மிக்க இந்த பகுதியினை பாதுகாக்க - மத்திய அரசு, 1991 ஆம் ஆண்டு, COASTAL REGULATION
ZONE (CRZ) என்ற விதிமுறைகளை THE ENVIRONMENT (PROTECTION) ACT, 1986 மற்றும் THE ENVIRONMENT (PROTECTION) RULES, 1986 ஆகியவற்றின்படி, பிப்ரவரி 19, 1991 முதல் நடைமுறைபடுத்த, ,அறிவித்தது.
காயல்பட்டினத்தில் பலர் CRZ விதிமுறைகள் - டிசம்பர் 26, 2004 அன்று இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்த சுனாமி பேரலைகளுக்கு பின்னரே, உருவாக்கப்பட்டன
என்ற எண்ணத்தில் உள்ளனர். இது தவறு. சுனாமி பேரழிவுக்கு பின்னர் - இந்த விதிமுறைகள் பரவலாக மக்களால் பேசப்பட துவங்கியது என்பது உண்மை.
இந்த விதிமுறைகள் - 7500 கிலோமீட்டர் நீளத்திற்கு உள்ள இந்திய கடலோர பகுதிகளில், கடலின் உயர்நிலை அலை எல்லையில் (HIGH TIDE LINE - HTL) இருந்து 500 மீட்டர் தூரம் வரை உள்ள பகுதிகளில் தொழில்கள், கட்டுமானங்கள்
உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும். உயர்நிலை அலை எல்லையில் (HIGH TIDE LINE - HTL) இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு, ஒவ்வொரு காரியத்திற்கும், எவ்விதமான கட்டுப்பாடுகள் உள்ளன என்பது - அந்த பகுதி, CRZ
விதிமுறைகள்படி, எந்த உட்பிரிவின் கீழ் (CRZ - I, CRZ - II, CRZ - III) வருகிறது என்பதே நிர்ணயிக்கும்.
1991 முதல் 2011 வரை அமலில் இருந்த விதிமுறைகள் - 500 மீட்டர் நீள, CRZ பகுதியினை, நான்கு உட்பிரிவுகளாக (CRZ - I, CRZ - II, CRZ - III, CRZ - IV) பிரித்தது. இதில்
CRZ - IV என்பது அந்தமான், நிகோபார் தீவுகளுக்கு மட்டுமே பொருந்துவதாக இருந்தது.
ஜனவரி 6, 2011 முதல் CRZ விதிமுறைகள் மாற்றப்பட்டு, புதிய விதிமுறைகள் (CRZ NOTIFICATION 2011) அமலுக்கு வந்தன. இந்த புதிய விதிமுறைகளும் நான்கு உட்பிரிவுகளாக (CRZ - I, CRZ - II, CRZ - III, CRZ - IV) CRZ பகுதியினை பிரித்தது. முன்னர் அந்தமான், நிகோபார் தீவுகளுக்கு பொருந்திய CRZ - IV உட்பிரிவு, தற்போது குறைந்த நிலை அலையில் இருந்து (LOW TIDE LINE - LTL), கடல் நோக்கி 12 மைல் தூரத்தினை குறிக்கிறது. அந்தமான், நிகோபார் தீவுகளுக்கு என Island Protection Zone Notification 2011 என்ற பெயரில் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.
குஜராத் (1,915 கிலோமீட்டர் நீளம்) மற்றும் ஆந்திர (1,037 கிலோமீட்டர் நீளம்) மாநிலங்களுக்கு அடுத்து அதிக நீளம் கொண்ட தமிழக கடலோரத்தின் (864 கிலோமீட்டர் நீளம்) 13 மாவட்டங்களில் - உயர் நிலை அலையிலிருந்து 500 மீட்டர் வரையிலான
பகுதிகள் - CRZ - I உட்பிரிவை சார்ந்ததா, CRZ - II உட்பிரிவை சார்ந்ததா, CRZ - III உட்பிரிவை சார்ந்ததா என ஆய்வு செய்து, அறிவிக்கும் பணியை, 1990 களில் அண்ணா பல்கலைக் கழகம் மேற்கொண்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் INSTITUTE OF OCEAN MANAGEMENT துறையின் மேற்ப்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் - மத்திய அரசாங்கத்தின் விதிமுறைகள்படி, கடலோர பகுதிகளுக்கு, அவைகளின் நிலை அடிப்படையில், பிரிவுகள்
வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டு அளவிலான ஆய்வுகளின் முடிவு
தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆய்வுகளின் முடிவு
ஒரு பகுதி CRZ - I என்றோ, CRZ - II என்றோ, CRZ - III என்றோ என்றோ கீழ்க்காணும் தகுதி அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது.
CRZ - I
சூழலியல் அடிப்படையில் முக்கியமான பகுதிகள் (ecologically sensitive) CRZ - I பகுதி என அறிவிக்கப்பட்டது.
CRZ - II
கடற்கரை வரையிலும் அல்லது அதற்கு அருகாமை வரையிலோ - வளர்ச்சிக்கண்ட நகர்புற பகுதிகள் CRZ - II என அறிவிக்கப்பட்டது.
CRZ - III
கடலோரமாக அவ்வளவாக வளர்ச்சி காணாத பகுதிகள் - CRZ - III பகுதிகள் என அறிவிக்கப்பட்டது.
ஆய்வின் இறுதியில் காயல்பட்டினத்தின் சுமார் 1.8 கிலோமீட்டர் நீள கடலோர பகுதிகள், CRZ - III பகுதி என அறிவிக்கப்பட்டது.
காயல்பட்டினத்தின் - பெருவாரியான கடலோர பகுதி CRZ - III பிரிவில் வந்தாலும், இக்கடலோர பகுதியில் உள்ள ஒவ்வொரு சர்வே எண்ணும், வெவ்வேறு பிரிவில் (CRZ - I, CRZ - II) வர வாய்ப்பும் உள்ளது. இப்பகுதியை சார்ந்த
சுமார் 50 சர்வே எண்கள் குறித்த உறுதியான தகவல், அண்ணா பல்கலைக்கழகத்தின் INSTITUTE OF OCEAN MANAGEMENT துறை மூலமோ, DTCP அலுவலகம் மூலமோ பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு சர்வே எண் - CRZ - I என்றோ, CRZ - II என்றோ, CRZ - III என்றோ அறிவிக்கப்பட்டால், அப்பகுதிக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன?.
CRZ - I என அறிவிக்கப்பட்ட இடங்களில்/சர்வே எண்களில் - கடலின் உயர் அலை நிலையிலிருந்து (HIGH TIDE LINE - HTL) 500 மீட்டர் வரை அனுமதிக்கப்பட்ட / அனுமதிக்கப்படாத
காரியங்கள்
CRZ - I பகுதிகளில் மிகவும் அத்தியாவசியமான, பொதுவாக அரசு சம்மந்தப்பட்ட, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த காரியங்கள் (இயற்கை வாயு தேடல், வானிலை ராடார், கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் போன்றவை) மட்டுமே
அனுமதிக்கப்பட்டது
CRZ - II என அறிவிக்கப்பட்ட இடங்களில்/சர்வே எண்களில் - கடலின் உயர் அலை நிலையிலிருந்து (HIGH TIDE LINE - HTL) 500 மீட்டர் வரை அனுமதிக்கப்பட்ட / அனுமதிக்கப்படாத
காரியங்கள்
ஒரு பகுதி/சர்வே எண் CRZ - II பகுதி என அறிவிக்கப்பட்டால், 1991 நிலைப்படி, அங்கு இருந்த அங்கீகரிக்கப்பட்ட சாலை அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்டிடம்/கட்டுமானத்தில் இருந்து (அந்த அங்கீகரிக்கப்பட்ட சாலை / கட்டுமானம், கடலின்
உயர்நிலை அலைக்கு மிக அருகாமையில் இருந்தாலும் கூட), நிலம் நோக்கி - புதிய கட்டுமானங்கள், DTCP போன்ற அமைப்புகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படலாம்.
உதாரணமாக - கடலின் உயர்நிலை அலையிலிருந்து 25 மீட்டர் தூரத்திலோ, அல்லது 100 மீட்டர் தூரத்திலோ, ஏதாவது சாலை (அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்டுமானம்) ஏற்கனவே இருந்தால், புதிய கட்டுமானங்கள், அந்த சாலைக்கு (அல்லது
அங்கீகரிக்கப்பட்ட கட்டுமானத்திற்கு) மேற்காக (கடல் - கிழக்கு திசையில் இருக்கும் பகுதிகளில்) அனுமதிக்கப்பட்டது.
CRZ - III என அறிவிக்கப்பட்ட இடங்களில்/சர்வே எண்களில் - கடலின் உயர் அலை நிலையிலிருந்து (HIGH TIDE LINE - HTL) 500 மீட்டர் வரை அனுமதிக்கப்பட்ட / அனுமதிக்கப்படாத
காரியங்கள்
CRZ - III பகுதிகள், இரண்டாக பிரிக்கப்பட்டு (0-200, 200-500) வெவ்வேறு விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடலின் உயர்நிலை அலையில் இருந்து 200 மீட்டர் வரை பொதுவாக எந்த வளர்ச்சி திட்டத்திற்கும் (NO DEVELOPMENT ZONE) அனுமதி இல்லை. இருப்பினும் - விவசாயம், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், அப்பகுதி மக்களுக்கு
தேவையான பள்ளிக்கூடங்கள், கழிப்பிடங்கள் போன்றவை NDZ பகுதிகளில் அனுமதிக்கப்பட்டது.
மேலும் - மீனவ சமுதாயத்திற்கு தேவையான குடித்தனங்கள், 100 மீட்டர் தூரத்தில் இருந்து அனுமதிக்கப்படுகிறது. 1991 - 2011 வரை அமலில் இருந்த சட்டத்தில், இவ்வளவு அருகில் - மீனவ சமுதாயத்திற்கு தேவையான குடித்தனங்கள் - அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
200 மீட்டர் தூரத்தில் இருந்து 500 மீட்டர் தூரம் வரை பகுதியில் சுற்றுலாவாசிகளுக்கு விடுதிகள், இயற்கை மூலமாக எரிவாயு தயாரிப்பது அனுமதிக்கப்பட்டது. குடிதனங்களை பொறுத்தவரை, அப்பகுதிகளில் பாரம்பரியமாக (மீனவ சமுதாயம் போன்ற)
வாழ்ந்து வருபவர்கள், இருக்கும் கட்டிடத்தை புதுப்பிக்கவோ, புதிதாக கட்டவோ - DTCP போன்ற உள்ளூர் அமைப்புகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, அனுமதிக்கப்படலாம். அந்த கட்டுமானங்கள் 9 மீட்டருக்கு மேல் உயர்ந்து இருக்கக்கூடாது (தரை
தளம் + முதல் மாடி).
[தொடரும் ...]
இத்தொடரின் பாகம் 1 காண இங்கு அழுத்தவும்
நகரின் பிரதான தொழில்களில் ஒன்றான வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE) குறித்த சிறப்பு பக்கம் இணையதளத்தில் உள்ளது. |