சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், இம்மாதம் 04ஆம் தேதி நடைபெற்ற அதன் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட படி, காயல்பட்டினத்தில் வசிக்கும் - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள 65 குடும்பத்தினருக்கு, எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு - ரூபாய் 94 ஆயிரம் செலவில் அத்தியாவசிய சமையல் பொருட்கள் இம்மாதம் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை) முதல் வினியோகிக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு சமையல் பொருட்பொதியிலும், ரூபாய் 1,450 மதிப்பில் 26 வகையான சமையல் பொருட்கள் பின்வரும் பட்டியல் படி வைக்கப்பட்டுள்ளது:-
வினியோகப் பணிகளை, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் தலைமையில், அம்மன்றத்தின் அங்கத்தினரான எம்.எச்.அப்துர்ரஹ்மான், ஹாஜி ஸூஃபீ, பொதுநல ஆர்வலர்களான கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, கே.எம்.என்.முஹம்மத் உமர் ஆகியோர் இணைந்து மேற்கொள்ளவுள்ளனர். |