காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதுக்கு புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், இம்மாதம் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று (நாளை) காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறுகிறது. இத்தேர்தலில், மொத்தமுள்ள 55 நிர்வாகக் குழு உறுப்பினர் பொறுப்பிடங்களுக்கு, 67 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், நடப்பு நிர்வாகத்தின் மீது அவதூறான பரப்புரைகளைச் செய்து பிரசுரங்கள் பல வெளியிடப்பட்டதைக் கருத்திற்கொண்டு, “அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகக் குழுவிற்குப் போட்டியிடும் ஒன்றுபட்ட வேட்பாளர்கள்” சார்பில், காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) அரங்கில், அக்டோபர் 12ஆம் தேதியன்று இரவு 07.00 மணி முதல் 09.30 மணி வரை, “அவதூறுக்கு விளக்கம்!” என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், இன்றிரவு 07.00 மணியளவில் “அவதூறுக்கு விளக்கம்!” நிகழ்ச்சி, ஐ.ஐ.எம். அரங்கில், ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமையில் நடைபெற்றது.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் நடப்பு நிர்வாகத்தின் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை உள்ளடக்கி வெளியிடப்பட்ட பிரசுரங்களுக்கு இக்கூட்டத்தில், ஆதார ஆவணங்களுடன் - எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, எஸ்.ஐ.தஸ்தகீர், எம்.என்.எம்.ஐ.மக்கீ, டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், எல்.கே.கே.லெப்பைத்தம்பி, எம்.என்.அஹ்மத் ஸாஹிப் உள்ளிட்டோரால் விளக்கமளிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் விடையளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முழுவதும், ஐ.ஐ.எம். டிவியிலும், இணையதளத்திலும் நேரலை செய்யப்பட்டது.
முன்னதாக, ஒன்றுபட்ட வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் சின்ன எண்களை உள்ளடக்கி வெளியிட்டு வினியோகிக்கப்பட்ட பிரசுரம்:-
மறு தரப்பில், 12 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் சின்ன எண்களை உள்ளடக்கி வெளியிட்டு வினியோகிக்கப்பட்ட பிரசுரம்:-
தகவல் & படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
[கூடுதல் தகவல்களும், படங்களும் இணைக்கப்பட்டன @ 07:27 / 13.10.2013] |