பள்ளி மாணவர்களுக்கான சுப்ரடோ கோப்பை சர்வதேச கால்பந்து சுற்றுப்போட்டி, கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி துவங்கி, இம்மாதம் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்போட்டியில், தமிழ்நாடு மாநிலம் சார்பில் விளையாடச் சென்ற காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி, இன்று காலையில், செந்தூர் விரைவுத் தொடர்வண்டி மூலமாக ஊர் திரும்பியது.
காலை 07.30 மணியளவில் காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தை வந்தடைந்த அணி வீரர்களை, எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப், தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை, ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.கே.லெப்பைத்தம்பி, தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், உடற்கல்வி ஆசிரியர் வேலாயுதம், ஒருங்கிணைப்பாளர் ‘ஹிட்லர்’ சதக் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் குழுவாகச் சென்று வரவேற்பளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில், அங்குள்ள கால்பந்து வீரர்கள் வரவேற்பளித்தனர். வீரர்கள் அனைவருக்கும் அங்கு தேனீர் உபசரிப்பு செய்யப்பட்டது.
[குழுப்படங்கள் அனைத்தையும் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!]
சுப்ரடோ கோப்பை கால்பந்து சுற்றுப் போட்டியில், தமிழ்நாடு மாநிலம் சார்பில் விளையாடிய எல்.கே.மேனிலைப்பள்ளி அணி, திரிபுரா, மேகாலயா, புது டில்லி ஆகிய அணிகளுடன் 3 லீக் போட்டிகளில் விளையாடியது. அதில், திரிபுராவுடனான போட்டி சமனில் முடிவுற்றது. இதர இரண்டு போட்டிகளிலும் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி வெற்றிவாய்ப்பை இழந்தது.
களத்தொகுப்பு & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
|