செய்தி: நகராட்சி அவசரக் கூட்டம்: ஒருவழிப்பாதையில் புதிய சாலை, குப்பை கொட்ட, உயிரி எரிவாயு மையம் அமைக்க நிலம் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்! அசைபடப் பதிவுடன்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
குப்பை கொட்ட, உயிரி எரிவாயு மையம் அமைக்க நிலம் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்! posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[13 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30709
ஒருவழியாக தலைவி எதிர்ப்பு தெரிவித்தாலும் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு 2 திட்டங்களுக்கும் ஒரே இடத்தில் அமைக்க நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சந்தோஷம். ஆனால் இதற்கு அரசு ஒப்புதலும் கிடைக்க வேண்டும்.
உறுப்பினர்கள் ஒற்றைபிடியாக முன்னாள் தலைவர் அவர்கள் அரசு விலைக்கு தருவதாக சொன்ன இடத்தில்தான் 2 திட்டங்களும் அமையவேண்டும் என்று வக்காலத்து வாங்குகிறார்கள்.
தலைவி அவர்கள் "போதிய சாலை வசதி இல்லை என்றும், மின்விளக்கு ஏற்பாடுகள் எதுவுமில்லை என்றும், இவையனைத்தையும் செய்திட பல லட்சங்கள் மக்கள் பணத்தைச் செலவழிக்க வேண்டியது வரும் என்றும், அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள் இருக்க, இச்செலவு தேவையற்றது என்றும் கூறிய நகர்மன்றத் தலைவர், நகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இவ்விடத்தைத் தேர்வு செய்யலாம் என்றும், உயிரி எரிவாயு மையம் அமைக்க, சர்வே எண் 392/5, 334/1, 334/2 ஆகிய இடங்களுள் ஒன்றைத் தேர்வு செய்யலாமே என்றும் கூறினார்" (C&P)
தலைவி குறிப்பிடுவது 2 திட்டங்களும் வெவ்வேறு இடத்தில் இருக்க வேண்டும் என்று. 2 திட்டங்களும் வெவ்வேறு இடத்தில் இருந்தால், நீண்டகால திட்டத்தில் என்ன செலவு & சிக்கல் வரும்?
என்னுடைய முந்தய கமெண்ட் #30606-க்கு பதில் பதிவு செய்த சகோதரர் ஹமீத் ரிபாய் அவர்கள், 2 திட்டங்களும் ஒரே இடத்தில்
இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அப்படி 2 திட்டங்களும் வெவ்வேறு இடங்களில் இருப்பதனால் operation cost அதிகம் பிரச்சனை எல்லாம் இதில் கிடையாது என்று பதிவு செய்திருந்தார்.
2 திட்டங்களும் வெவ்வேறு இடங்களில் இருக்கும் போது, மக்கும் குப்பையை எவ்வாறு பிரிப்பார்கள்? நம் மக்கள் இப்போது ஒரு வாளி வைத்து அதை கொட்டவே சோம்பல், அலட்சியம் படும்போது, மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து தருவார்களா? நாம், நம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களும் பிரித்து தந்தால், ஒரே குப்பை வண்டியில் 2 பிரிவு (chamber) வைத்து சேகரித்து, மக்கும் குப்பையை ஊருக்கு அருகிலுள்ள bio-gas plant- ல் கொட்டிவிட்டு மீதியை ஊருக்கு வெளியில் உள்ள உரக்கிடங்குக்கு தினமும் கொட்டும் போது, அதற்கான transportation cost, (on long run) எவ்வளவு ஆகும்?
குப்பை கொட்டுவதற்கு மட்டும் முன்னாள் தலைவரின் இடத்தை தேர்வு செய்தால், அப்போது சாலை மற்றும் மின்விளக்கு அமைக்க தேவை இல்லையா?
(18ஆவது வார்டுக்குட்பட்ட - 392/5 என்ற சர்வே எண்ணைக் கொண்ட நிலம் குறித்து துவக்கமாக விவாதிக்கப்பட்டது. அவ்விடத்தில் மயானம் அமைக்கவும், திடக்கழிவுக்காகவும் இடங்களை ஒதுக்கி, 1958ஆம் ஆண்டில் - அப்போதைய பஞ்சாயத்து போர்டு தலைவர் எம்.கே.டி.அபூபக்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது, முத்து நாடார் என்ற 01ஆவது வார்டு உறுப்பினர் முன்வைத்த பிரேணனை அடிப்படையில், விவாதித்து தீர்மானம் இயற்றப்பட்டுள்ள தகவலை, தீர்மான நகலைக் காண்பித்து நகர்மன்றத் தலைவர் வெளியிட்டார்.
முன்னோர் அனைவரின் ஒப்புதலோடு அன்றே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் கருத்திற்கொண்டு இவ்விடத்தைத் தேர்வு செய்யலாமே என நகர்மன்றத் தலைவர் கேட்டார்.) (C&P)
MKT அப்பா அவர்கள் தலைமயில் தீர்மானம் போட்டது 1958. நாம் இப்போது இருப்பது 2013. வருடங்கள் 55 கழிந்து விட்டது. அப்போது நம் நகரின் மக்கள் தொகை என்ன? இப்போதைய மக்கள் தொகை என்ன? மேலும் அப்போது அது வராந்திர காடு. ஆனால் தற்போது அந்த நிலையிலா இருக்கிறது? அப்போது போட்ட தீர்மானம் திடக்கழிவுக்கு (குப்பை கொட்ட). இப்போது அங்கே குப்பை கொட்டலாமா?
சகோதரர் செய்யத் அஹ்மத் அவர்களே உங்கள் கருத்து பதிவுக்கும் சேர்த்துதான் என் கருத்து பதிவு.
தயவு செய்து இரு சாராரும் (தலைவி & உறுப்பினர்கள்) உங்களின் ego- வை ஓரம் வைத்து விட்டு, எந்த prejudice -ம் இல்லாமல் ஊர் நலனுக்காக ஒன்றுபடுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் ஹலாலான முயற்சியில் வெற்றியை தருவான். ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross