ஒரு மகத்தான கவிதையை நண்பர் முஷ்தாக் வடித்துள்ளார்.......!!!!!! posted byS.K.Shameemul Islam (Chennai)[18 October 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 30846
காலத்திற்கு மிகவும் தேவையான மிகவும் பிரயோசனமான இதுவன்றி வேறு எதவும் முக்கியத்துவம் பெறாத பெற முடியாத ஒரு மகத்தான கவிதையை நண்பர் முஷ்தாக் வடித்துள்ளார்.
கூடவே கவிஞ்சர்கள் பற்றி குர்ஆன் எதிர் மறையான பார்வையையே வைக்கிறது. நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகளும் அவ்வாறே உரைக்கின்றன.
ஆனால் இது போன்ற கவிதைகள் தவிர.
அதாவது எழுதியவன் யார் என்பதை விட எழுதப்பட்ட செய்தியில் அர்த்தம் இருக்க வேண்டும். கருத்து இருக்க வேண்டும். அறியாமை என்னும் இருளிலிருந்து அறிவதற்கான கண்களைத் திறந்திடவேண்டும்.
அல்லாஹ்வை அவன் உள்ளான் என்பதை உரக்கச் சொல்ல வேண்டும். அதைச் சொல்ல வந்தவர்தான் அல்லாஹ்வின் தூதர் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:
26:224 وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ
இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.
26:227. ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்); அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross