என் பாட்டனின் பாட்டன்
முப்பாட்டனின் முப்பாட்டன்
முப்பாட்டனின் மூதாதையன்
மூதாதையனின் மூத்தவன் - முனுசாமியை
காற்று அழைத்து வந்து - கடற்கரையில் நிறுத்தியது.
நாய்கள் கூட நடக்க நடுங்கும்
உச்சி வெயிலில் கடந்து போகும்
உயர்ந்த குலத்தினருக்காய்
கக்கத்தில் செருப்பையும்
பாதத்தில் மானத்தையும்
அணிந்து செல்லும் - தரித்திர பூமியில்
ஒற்றுமையை உரக்கச்சொல்லும்
ஒரு புதிய நாகரீகம்.
யார் இவர்கள் ... ?
கேள்வியாய்த் தொடங்கியது ...
விரியும் எல்லாம் சுருங்கும் என்றால்
வானம் இல்லை கடவுள் ...
உதிப்பன எல்லாம் மறையும் என்றால்
உதயன் இல்லை கடவுள்...
கரையை மீற கட்டளை வேண்டும்
கடலும் இல்லை கடவுள்.
நீரில் தன்னை நீர்த்து விடும்
நெருப்பும் இல்லை கடவுள்...
அழிக்கப்பட்டு அழிக்கப்பட்டு-
புதுப்பிக்கப்படும் பூமியும் இல்லை கடவுள்.
மறைந்து போவதும்
மரணித்துப் போவதுமாய்
வெற்றுப் பிம்பங்கள் என
சுற்றித் திரியும் கடவுள்கள்
முடிவுகளின் எல்லையில்
தன்னையே காக்க முடியாமல் கதறியவை.
காக்கும் என வணங்க சொன்ன
கற்கள் எல்லாம் கடலுக்குள்
காப்பான் எனப் பாடச் சொன்ன -
அரசன் எல்லாம் மண்ணுக்குள்
எல்லாம் படைப்புகள்
தேவைகள் தேடும் அனைத்தும் படைப்புகள்.
1. ஒரு மகத்தான கவிதையை நண்பர் முஷ்தாக் வடித்துள்ளார்.......!!!!!! posted by:S.K.Shameemul Islam (Chennai) on 18 October 2013 IP: 122.*.*.* India | Comment Reference Number: 30846
காலத்திற்கு மிகவும் தேவையான மிகவும் பிரயோசனமான இதுவன்றி வேறு எதவும் முக்கியத்துவம் பெறாத பெற முடியாத ஒரு மகத்தான கவிதையை நண்பர் முஷ்தாக் வடித்துள்ளார்.
கூடவே கவிஞ்சர்கள் பற்றி குர்ஆன் எதிர் மறையான பார்வையையே வைக்கிறது. நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகளும் அவ்வாறே உரைக்கின்றன.
ஆனால் இது போன்ற கவிதைகள் தவிர.
அதாவது எழுதியவன் யார் என்பதை விட எழுதப்பட்ட செய்தியில் அர்த்தம் இருக்க வேண்டும். கருத்து இருக்க வேண்டும். அறியாமை என்னும் இருளிலிருந்து அறிவதற்கான கண்களைத் திறந்திடவேண்டும்.
அல்லாஹ்வை அவன் உள்ளான் என்பதை உரக்கச் சொல்ல வேண்டும். அதைச் சொல்ல வந்தவர்தான் அல்லாஹ்வின் தூதர் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:
26:224 وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ
இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.
26:227. ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்); அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள்.
2. Re:...அல்லாஹ் பெரியவன் posted by:mackie noohuthambi (colombo) on 18 October 2013 IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 30847
இல்லை இல்லை என்றவனும் எதனை இல்லை என்றான், இல்லை ஒரு தெய்வம் என்று சொல்லவில்லை என்றான்.
இறைவன் என்பவன் இனி அல்லாஹ் இல்லை என்று ஒரு நாட்டு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ஆம் இறைவன் வேறு அல்லாஹ் வேறு. அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றை மட்டுமே சொல்லி அல்லாஹ்வை புகழ்வோம் மேன்மை படுத்துவோம்.
காதலன் கணவன் இவர்களுக்கும் இறைவன் என்றே தமிழில் சொல்லப்படுவதால் இனிமேலும் நாம் அல்லாஹ்வை இறைவன் என்று அழைப்பதை தவிர்ப்போம். அல்லாஹ் என்ற திருநாமம் வேறு எந்த இணை பெயராலும் துணை பெயராலும் அழைக்கப்படக் கூடாது என்று இந்த நல்ல நாளில் சபதம் ஏற்போம்.
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா வல் ஹம்து லில்லாஹி கதீரா.சுபுஹானல்லாஹி புக்ரதன் வ அஸீலா....
3. முஸ்தாக் அவர்களின் முத்தான கவிதை! posted by:kavimagan (doha-qatar) on 18 October 2013 IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 30851
மாஷா அல்லாஹ்! நீண்ட நாட்கள் கழித்து ஓர் அருமையான கவிதையை சுவாசிக்கும் வாய்ப்பு.....
தெள்ளிய நீரோட்டமாய் பயணிக்கும் கவிதை
உள்ளத்தின் பள்ளத்தில்
நீண்ட நாட்களுக்கு நிறைந்திருக்கும்...
அழுத்தம் திருத்தமான அழகான கவிதையைத் தந்த நண்பர் முஸ்தாக் அவர்களுக்கு வாழ்த்துகளுடன் ஒரு வேண்டுகோள்....
தொடரட்டும் உங்கள் கவிதைகள்... இன்ஷா அல்லாஹ்.....
குர்ஆன் மற்றும் நபிமொழிகள் கவிஞர்களை எதிர்மறையாகவே
பார்க்கிறது என்ற, நீண்ட பல வருடங்களுக்கு முன்பே அறிஞர்களால் தோற்கடிக்கப்பட்ட ஒரு வாதத்தை முன்னிறுத்தி நண்பர் சகோதரர் ஷமீமுல் இஸ்லாம் அவர்கள் மீண்டும் வந்திருக்கின்றார்கள்.
இந்தத் தலைப்பிற்குள் நுழைந்தால், அடிப்படை பொருளில் இருந்து, நம்மை வேறு ஒரு தளத்திற்கு, களத்திற்கு அழைத்துச் சென்று விடும்..
சகோதரர் அவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்னவெனில், தயவுசெய்து நீங்கள் இங்கே சுட்டிக் காட்டியிருக்கும் இறை வசனங்கள் எந்த சூழ்நிலையில்,எதற்காக சொல்லப்பட்டது என்பதனையும் மார்க்கம் அறிந்த நீங்கள் எடுத்து வைத்தால், நீங்கள் முன்வைத்த வாதங்களுக்கு அதுவே பதில் ஆகிவிடும் என்பது எனது பணிவான கருத்து..... எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் நேர் வழியில் நடத்துவானாக! ஆமீன்...
4. Re:... posted by:Abbas (Los Angeles) on 18 October 2013 IP: 24.*.*.* United States | Comment Reference Number: 30852
அஸ்ஸலாமு அழைக்கும்
சகோ முஸ்தாக் அவர்களின் இன்னொரு அருமையான படைப்பு.......
தொலைந்து போன சுவனத்தின் முகவரி மாதிரி இன்னொரு கட்டுரை எழுதுங்க ஊருக்கு இப்ப ரொம்ப முக்கியமான தேவை ஒற்றுமையை வலியுறுத்தும் எழுத்துக்கள்....
எல்லோரும் சந்தோசமா இருக்க வேண்டிய நாட்களில் நிம்மதி இழந்து மன வேதனையோட.... உம்மா வீட்டில் ஒரு நாள் மனைவி வீட்டில் ஒரு நாள் அவ்வளவு ஏன் கணவனுக்கு ஒரு நாள் மனைவிக்கு வேறொரு நாள்..... இதுதான் நபி காட்டிய வழியா? இப்படி தான் நபி வழியை பின்பற்றுவதா?... சிந்தியுங்கள் பொறுப்பில் உள்ளவர்களே....
இன்றைய இளைஞர்கள் நினைத்தால் நிச்சயம் இதுக்கு அழகான முடிவு காணலாம் பல நாட்களாக இருந்த இந்த பெருநாள் இப்ப ரெண்டு நாலுன்னு ஆயிடிச்சு Insha அல்லாஹ நாம் முயற்சித்தால் அது ஒரு நாளில் உண்மையான பெருநாளாக மாறும்......
5. Re:...பிரயோசனமான கவிதை.. posted by:Ismail (Dammam) on 19 October 2013 IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30857
மாஷா அல்லாஹ்.. நண்பனின் கவிதை அருமை..
கவிதைகளில் பல விதங்கள்.. அதில் இது போன்ற கவிதைகள்தான் வாசிப்பவருக்கம், எழுதியவருக்கும் பிரயோசனம்..
பொதுவான கவிதைகளை எழுதுவதற்கு ஏராளாமானவர்கள் இருக்கிறார்கள்.. இது போன்ற கவிதைகளை எழுதுவதற்கு ஆட்கள் கம்மி.. மார்க்கப் பற்றுள்ளவர்கள்தான் முன் வர வேண்டும்..
நண்பன் முஸ்தாக் வருடத்துக்கு ஒரு கவிதை எழுதாமல், அவ்வப்போது எழுதலாம், தரமாக..
6. Re:... posted by:ALS IBUNUABBAS (Kayalpatnam) on 20 October 2013 IP: 106.*.*.* India | Comment Reference Number: 30862
அஸ்ஸலாமுஅழைக்கும்
மழை இல்லா காயல் நகருக்கு கவிதை மழை தந்து நனைய வைத்தமைக்கு நன்றி.
உங்கள் ஒளி இன் ஒலி கவிதை சூப்பர்
கொற்கை துறைமுஹதில்
குதிரைகளின் கொட்டாரத்தில்
தோளோடு தோல் உரச
குனிந்த
என்ற வரி காயலின் பழமையை கண் முன் கொண்டு நிறுத்திய கோவா உல்லாசபுரியில் வாழ்ந்து தொழில் செய்து வரும் உங்களுக்கு எங்களது நன்றி.
நான் எழுதவே முடியும் இதில் எழுத பிறர் உதவியை நாடுவதால் அணைத்து கட்டுரை ஆசிரியர்களுக்கு பதில் தர ஆசை அனால் முடியவில்லை . முடிந்த வரை பதில் தர சில நல்ல உள்ளங்களை அல்லாஹ் தந்துள்ளான் அல்ஹம்துலில்லாஹ்.......
ALS .MAMA
தலைவர் - நூலகர்
SIDAKATHI MEMORIAL LIBRARY
மஜ்லிஸ்-உல்-கௌத் சங்கம்
தாயம்பள்ளி வளாகம்
காயல்பட்டணம்
7. Re:... posted by:k m shaik dawood (chennai) on 31 October 2013 IP: 117.*.*.* India | Comment Reference Number: 31098
அஸ்ஸலாமு அலைக்கும்
என் இனிய நண்பா
அல்லாஹுவின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக
ஒளியின் ஒலி
உன் இஸ்லாமிய கவிதை வாசித்தேன்
அருமையான நடையில் ஆழமான
கருத்துகள் ஒளிர்கின்றன
அல்லாஹுவின் பண்புகள் மகத்துவம் வல்லமையை
அழகாக உன் கவிதை சொல்லுகிறது
வணங்கதகுதியானவன் அவனைத்தவிர யாரும் இல்லை
என்று அழகாய் மாற்றானை அழகாய் அழைக்கிறது
கொற்கை கடற்கரையில்
ஒன்றாய் குனிந்து எழும்பிய கூட்டம்
இன்று இருவேறு கூட்டமாய் இரு வேறு நாட்களில்
குனிந்து எழும்புவது ஒற்றுமையை பிளகிறதே
ஒற்றுமையை ஒரக்க சொன்ன புதிய நாகரிகம் எங்கே
காற்று அழைத்து வருமா முனுசாமியை
வந்தவர்கள் ஏற்றி வைத்த இஸ்லாமிய வெளிச்சம்
என்றிராமல் திருகுரான் 3.110 இல் கூறியபடி
நீங்கள் மனித சமுதயதிற்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த
சமுதாயமாக இருகிறிர்கள் நன்மையை ஏவுகிரிர்கள் தீமையை
தடுகிரிர்கள் அல்லாஹுவை நம்புகிறிர்கள்
என்ற வசனதுகேற்ப ஒரு கூட்டம் அழைப்புபணியை அழகாய் செய்கிறது
வந்தவர்கள் ஏற்றி வைத்த இஸ்லாமிய வெளிச்சத்துக்கு
மெருகூட்டுகிறது
8. வளர்பிறை! posted by:கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா-கத்தார்) on 03 November 2013 IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 31166
சகோ. முஸ்தாக் அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் இந்த இணையத்தளத்தின் எழுத்து மேடை பகுதியில் எழுதிய “தொலைக்கப்பட்ட சுவனத்து முகவரி!” என்ற கட்டுரை சில நேரங்களில் நினைவுக்கு வந்து என் நெஞ்சைப் பிழியத் தான் செய்கின்றன. சகோதரரின் எழுத்து வரிகளைப் படித்து முடித்ததும், ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு மனதில் தோன்றி பிசைகிறது. அழகான எழுத்து வடிவம்!
வியாபாரிகளாய் வந்த எளிய தொண்டர்களான அவர்களின் நீதி, நேர்மை, வாய்மை, செயல்பாடு, சமத்துவம் - இவை கண்ட முனுசாமிகள் அலை அலையாய் முஹம்மதுகளாகவும், முஹ்யித்தீன்களாகவும், முஸ்தாக் களாகவும் ‘”லாயிலாஹ இல்லல்லாஹ்” என்னும் ஒற்றைச் சொற்றொடரை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிம்களாய் பரிணமித்தனர். அது ஒரு வளர்பிறை காலம் தான்!
அல்லாஹ்வின் ஒளியை எவராலும் ஊதி அணைத்து விட இயலாது! இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம்! வாழ்ந்து காட்டுவோம்!
பாருங்கள்!
அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி திரண்டு வரும் மக்கள் திரளைக் கண்டு நம் வாய் தொடர்ச்சியாக “சுப்ஹானல்லாஹ்””அல்ஹம்து லில்லாஹ்” “அஸ்தஃபிருல்லாஹ்” என்று மொழிந்த வண்ணம் இறைத்துதியில் ஈரப்பதமாகவே இருப்பதைக் கண்கூடாகப் பாருங்கள்!
இன்ஷா அல்லாஹ்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross