DCW -க்கு வக்காலத்து வாங்காதீர். posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[21 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30878
சகோதரர் செய்யத் முஹம்மத் அலி அவர்களே, 'நகராட்சியின் மூலம்தான் வேலை நடக்கவில்லை . தனியார் நிறுவனங்களின் உதவியை நாடுவதில் தவறில்லையே !
ஊரை ஒளிமயமாக்க DCW வை அணுகலாம் என்கிற நகரமன்ற உறுப்பினர்களின் ஆதங்கம் சரியானதே . நகராட்சியில் பணம் இருந்தும் , " தல " பிடிவாத்தால்தானே தனியார் நிறுவனத்தை அணுக சொல்கிறார்கள் . தவறில்லையே ? அதற்காக புரோக்கர் வேலை பார்கிறார்கள் என்று எப்படி சொல்லலாம் ? (c&p)
- இது உங்கள் கமெண்ட்ஸ். கருத்து பதியும் பொது யோசித்து பதிவு பண்ணவும். தலைவியை எதிர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, நாசக்கார நச்சு ஆலைக்கு ஆதரவு தெரிவிக்காதீர்.
நம் சகோதரர்கள், உற்றார், உறவினர்கள் என்று புற்று நோயால் மரணித்தவர்கள், பாதிக்கப்பட்டு வேதனையில் புழுங்கி கொண்டு இன்றும் இருக்கின்றனர். அதற்கு ஒரு காரணியாக இந்த நாசகார நச்சு ஆளை இருப்பது நீங்கள் அறியாததல்ல.
பல நலத்திட்டங்கள் காலதாமதம் ஆவதற்கு வேண்டுமானால் தலைவி அவர்கள் காரணமாக இருக்கலாம். அதற்கு அவர்கள் பல காரணங்கள் கூறலாம். ஆனால், நமதூர் மக்களின் உயிருடன் விளையாடும் அந்த நாசகார நச்சு ஆலைக்கு ஆதரவாக செயல்படும் நமதூரை சேர்ந்த எந்த கைக்கூலிகளுக்கும், அவர் நகர்மன்ற உறுப்பினராக இருந்தாலும் வக்காலத்து வாங்க வேண்டாம். அப்படி DCW -க்கு ஆதரவாக செயல்படும் கைக்கூலிகளை இனம்கண்டு அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும்.
அட்மின் அவர்களே, யார்,யார் பேசினார்கள் என்ற யூகங்களுக்கு முற்றுப்பள்ளி வைக்கும் விதமாக, பேசிய நபர் / நபர்களை பெயர் குறிப்பிட்டு அடையாளம் காட்டுங்கள். ஒலிநாடா இருந்தால் அதையும் வெளியிடுங்கள்.
இந்த நாசக்கார நச்சு ஆலையை இந்த ஊரை விட்டு விரட்டும் வரை போராடுவோம். வாருங்கள் சகோதரர்களே! ஒன்று படுவோம்! வெற்றி பெறுவோம்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross