உங்கள் குடும்பத்தையும் இறைவன் காப்பாற்றட்டும்! posted byHameed Rifai (Kayalpatnam)[21 October 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 30880
DCW தொழிற்சாலைக்கு எதிராக நமது ஊர் மக்கள் அனைவரும் இணைந்தேதான் போராட்டம் நடந்தினர். அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தது - ஆளுங்கட்சி உட்பட! இது இப்படியிருக்க, மக்களின் மொத்த குரலையும் தலைமைக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள உள்ளூர் அ.தி.மு.க.வினர் DCW தொழிற்சாலைக்கு ஆதரவான நிலையை எடுத்தது ஏன்?
(இந்த கூட்டத்திற்காக வெளியிடப்பட்ட பிரசுரத்தில் “DCW அண்ணா தொழிற்சங்க” பிரதிநிதிகள் பெயரும் இடம்பெற்றிருந்தது.)
நம் நிலத்தை வாங்கி தொழிற்சாலையை அமைத்து, நமக்கே 50 ஆண்டுகளாக அனைத்து வகையிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி, சிறு தொகையை மட்டும் வரியாகக் கட்டுகிறான் என்பதற்காக, அந்த தொழிற்சாலையின் உதவியை - அது சிறிதோ, பெரிதோ - வாங்கவேண்டும் என்ற நினைப்பு நமக்கு வரலாமா?
அவன் தரும் உதவியில்லாமல் நம்மால் செயல்பட முடியாதா? அப்படி அவன் உதவியைக் கோரும் அளவுக்கு நம் நகராட்சியின் கஜானா காலியாகிவிட்டதா?
அல்லது DCW தொழிற்சாலையால் எந்த பாதிப்பும் இல்லை என அவர்கள் நினைக்கிறார்களா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross