Re:... posted byV. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou)[22 October 2013] IP: 183.*.*.* China | Comment Reference Number: 30919
AWS காக்கா அவர்களுக்கு ,
< நமது நகராட்சி தலைவிக்கு எதிரான நிலைப்பாடு சகோ., விளக்கு அலியை DCWவினால் நமதூரில் பாதிப்பு ஏற்படவில்லை என்று சொல்லும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது > C & P
என்னுடைய அனைத்து கருத்து பதிவுகளையும் , ஒருவேளை நீங்கள் படிக்காமல் இருந்ததால்தான் , இந்த அளவுக்கு எழுதி இருக்கிறீர்கள் . நகராட்சி தலைவி எனக்கு தீண்டத்தகாதவரோ , அல்லது மற்றவர்கள் எனக்கு மாமனோ மச்சானோ அல்ல . எல்லோரும் எனக்கு ஒன்றுதான் . நகராட்சி தலைவி செய்யும் எல்லா காரியங்களையும் நான் எதிர்கவில்லை . நல்லதை வரவேற்கிறேன் , மற்றதை சுட்டிக்காட்டுகிறேன் . மன்ற உறுப்பினர்கள் செய்யும் ஒருசில தவறுகளைகூட சுட்டிக்காட்டி இருக்கிறேன் . என்னை பற்றிய உங்களின் தவறான எண்ணங்களை மாற்றிக்கொள்ளவும் .
DCW விசயத்திலும் , உங்களுக்கும் , மற்றவர்களுக்கும் என்னை பற்றிய தவறான எண்ணங்களே உள்ளது . DCW செய்வது சரி என்று நான் ஒருபோதும் சொல்லியதில்லை . உதாரணம் .... ஜலாளியாவில் நடந்த ஒரு கூட்டத்தில் , நான் பேசும்போது DCW க்கு எதிராக வழக்கு போடுங்கள் என்று சொன்னதே நான்தான் .
தொழிற்சாலையால் சுற்றுபுறத்தில் ஏற்படும் பாதகங்கள் எனக்கும் தெரியும் .
நீங்கள் சொல்வதுபோல் DCW ஆலையை மூடச்சொல்லி நாம் ஒருபோதும் சொன்னதில்லை . மாசுகட்டுப்பாடு விதிமுறைகளை கடைப்பிடிக்க சொல்லித்தான் வற்புறுத்துகிறோம் . ஆனால் இங்கே கருத்துபதியும் ஒருசிலர் , என்னவென்றே தெரியாமல் , இந்த ஆலையை மூடாமல் என் மூச்சு அடங்காது என்ற தொனியில் எழுதுகின்றனர் .
நமதூரில் கான்சர் நோயாளிகள் இருப்பது உண்மைதான் . DCW மூலம்தான் இந்த நோய் வருகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதைவிட மோசமாக pollute செய்யும் ஆலைகள் உலகின் எல்லா இடங்களிலும் உள்ளது . ஆலைகலாள்தான் நோய் பரவுகின்றது என்று அனைவரும் கொடி பிடித்தால் உலகமே இயங்காது .
நான் முன்பு எழுதிய கருத்துபதிவில் சொன்னதுபோல் , நமதூரில் கான்சர் நோயால் இறப்பவர்களை பற்றி ஆராய வேண்டும் . அவர் தன் வாழ்நாளில் எந்தெந்த இடங்களில் அதிகம் இருந்திருக்கிறார் , அவருடைய உணவு , மற்ற பழக்க வழக்க முறைகள் , இவற்றை பார்க்க வேண்டும் . பிறகுதான் ஒரு முடிவுக்கு வர வேண்டும் .
< யார் யார் அந்த கூட்டத்திற்கு ஒரு நாள் முன்பு DCW விற்கு சென்று அதிகாரிகளை சந்தித்து ஆசி பெற்றார்கள் என்பதை நிரூபிக்க தக்க ஆதாரம் கைவசம் கிடைக்கப் பெறாததால் கைக்கூலிகளின் பெயர்களை இங்கு பதிவு முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. > C & P
ஆதாரமே இல்லை என்கிறீர்கள் . பிறகு , எதற்காக இப்படி எழுதினீர்கள்?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross