காமாலைக் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்தானே...? posted byHameed Rifai (Kayalpatnam)[24 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30950
மெகா அமைப்பு செய்த சேவை என்ன? -இங்கு ஒரு கருத்தாளர் கேட்டுள்ள கேள்வி.
(1) நகர்மன்றத் தேர்தலின்போது வெற்றி வாய்ப்புள்ள இரு வேட்பாளர்களையும் பொதுக்கூட்டத்தில் மக்கள் முன் நிறுத்தி நேர்காணல் நடத்தியது. அழைப்பையேற்று வந்த ஆபிதா என்ற வேட்பாளரை நகர மக்கள் 4200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தது.
(2) தேர்தலோடு பணி முடிந்துவிட்டது என்று இருந்துவிடாமல், நகர்மன்றம் அடுத்த 5 ஆண்டுகளில் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்தி, நகராட்சியில் நடைபெறும் குளறுபடிகளை மக்கள் மன்றத்தில் போட்டு உடைத்தது. அதன் மூலம் பொதுமக்கள் பன்மடங்கு விழிப்புணர்வு பெற்றது.
(3) சகோதரர் குளம் மூஸா நெய்னா போன்ற சமூக ஆர்வலர்கள் எல்லாம் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டதால், களப்பணியில் சிறிது தொய்வு ஏற்பட்ட நிலையில், அது தொடரக்கூடாது என்று கருதி, தற்போது அலுவலகம் திறந்திருப்பது... அரசுத் துறை தொடர்பான விஷயங்களில் அனைவருக்கும் வழிகாட்ட களம் அமைத்திருப்பது... நல்லவற்றுக்குத் துணை நிற்கவும், அல்லவற்றை யார் - எவர் என்று பாராமல் அகற்றியொழிக்கவும் சபதமேற்றுள்ளது...
இன்னும் பல! (இன்ஷாஅல்லாஹ் நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் மெகாவின் பணிகள் மீண்டும் தொடர்வதைக் காணலாம்.)
“ஊரில் பொய்யான ஃபித்னாவை உண்டாக்கி, ஊரை இரண்டாக்க முயற்சித்ததைத் தவிர வேறு சேவை எதுவும் உண்டா?” - இது அதே வாசகரின் கேள்வி.
மெகா செய்த, செய்யவிருக்கிற சேவைகளை சுருக்கமாகப் பட்டியலிட்டுள்ளேன். இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனையை, பொதுக்குழு உள்ளிட்ட கலந்தாலோசனைக் கூட்டங்களில் பழுத்த அனுபவம் நிறைந்தவர்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
ஊரை இரண்டாக்க மெகா முனைந்திருந்தால், அது அடையாளங்காட்டிய வேட்பாளர் டெபாசிட் இழந்திருப்பார். நடந்தது என்ன? பழைய கோபம் இன்னும் தனியவில்லை போலும்!
நகருக்காக செய்ய வேண்டிய நற்பணிகள் நிறையவே தேங்கிக் கிடக்கின்றன. இன்று அவற்றைச் செய்ய குறைந்தளவிலான சகோதரர்களுக்கு அல்லாஹ் எண்ணத்தைப் போட்டுள்ளான். அவர்களால் இயன்றதைச் செய்கிறார்கள். அறியாமல் விமர்சிக்கும் கருத்தாளர்களும் இது விஷயத்தில் களமிறங்க முன்வந்தால், சிவப்புக் கம்பள வரவேற்பு காத்திருக்கிறது. அவர்களும், நகரில் 5664 பேர் பட்டியலிலிருந்து முன்னேறி, 9937 பட்டியலில் இடம்பெறலாம். ரெடியா...?
(நான் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்குதல் நடத்துவதாக தயவு செய்து எண்ணவேண்டாம். இன்றைய சூழ்நிலையில் அரசியல்வாதிகளும், பிற சமுதாய அமைப்புகளும் நமதூரின் ஒற்றுமையை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு துணையாக நம்மையும் அறியாமல் விவரமற்ற விமர்சனங்களை செய்கிறோமோ என்ற கவலை தானே தவிர யாரைபும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.
இதுபோல விமர்சனம் செய்பவர்கள் தேர்தல் சமயத்தில் உண்டாக்கிய குளறுபடிகள் மக்கள் அறியாததா... மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு நெடுநாளாகி விட்டது. வரும் தேர்தல்களில் உங்களது பருப்பெல்லாம் இந்த ஊரில் வேகாது என்பது உறுதி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross