செய்தி: “கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவதேன்???” - உயிரி எரிவாயு திட்டத்திற்கான இடந்தேடல் குறித்து ‘மெகா’ வெளியிட்டுள்ள பொதுப்பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
MKT அப்பா வசியத் செய்த நிலம். posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[26 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30994
சகோதர் செய்யத் அஹ்மத் அவர்களே!
'எனது மன குமறல் (சர்வே எண் 392 - மறைந்தும் மக்கள் மனதில் வாழும் பெருந்தகை M K T அப்பா காலத்தில் இதற்காகவே ஒதுக்கிய) இந்த பிரசுரத்தில் இடம் பெற்றுள்ளது என்பதை படிக்கும் போது மெகாவிற்கு நன்றி' (C&P)
இன்னும் எத்தனை தடவைதான் இதை எழுதுவீர்கள். உங்களுக்காகவே அதன் விபரம் புரியும்படி கமன்ட் பதிவு செய்திருந்தேன். ஆனால் நீங்களும் புரிந்த மாதிரி தெரியவில்லை. அதே நேரத்தில் இந்த அமைப்பும் MKT அப்பா அவர்களின் தீர்மானத்தை, தங்களது நோட்டீஸில் சுட்டி காட்டியுள்ளதால், அதை மறுபதிவு செய்கிறேன். இனிமேலாவது அந்த தீர்மானத்தை மேற்கோள் காட்டாதீர்கள்.
'MKT அப்பா அவர்கள் 1953-1965 வரை இரண்டு முறை (2 term) தலைவராக இருந்துள்ளார்கள். தலைவி நகர்மன்றத்தில் தெரிவித்த, நீங்கள் உடும்பு பிடியாக சொல்லும் தீர்மானம் இயற்றப்பட்ட ஆண்டு 1958. அதாவது MKT அப்பா அவர்களின் முதல் ஆட்சி காலத்தில். அதன் பின்னர் MKT அப்பா அவர்கள் மேலும் 7 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார்கள். அந்த 7 வருடங்களில் அவர்களே அந்த தீர்மானத்தை செயல்படுத்த முயற்சி எடுத்தது மாதிரி தெரியவில்லை.
இந்த 55 ஆண்டுகளில், அவர்களுக்கு பின்னால் வந்த, பாவலர் அப்பா, LK அப்பா உட்பட எந்த தலைவரும் முயற்சி எடுக்கவில்லை. ஏன் MKT அப்பா அவர்களின் மருமகள் (மகனின் மனைவி) நாச்சி தம்பி ராத்தா அவர்கள் தலைவியாக இருந்தபோது கூட அந்த முயற்சி எடுக்கப்படவில்லை. காரணம், மாற்று மத சகோதரர்களின் மயானமாக இருப்பதால், இந்த இடத்தில் குப்பை கொட்டினால் அவர்களின் மத உணர்வுகள் புண்படலாம் என்பதனால்.' (C&P) COMMENT# 30948
தம்பி அபு ருஷ்தா உடைய கமென்ட்#30990. இது மிகவும் கவனிக்க வேண்டியது. இந்த கருத்தாளர், Dubai மின்வாரியமான DEWA -வில் பொறியாளராக, மேலாளராக இருக்கிறார். இவரின் கருத்துப்படி ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கவேண்டியதன் அவசியத்தை Technical & Safety காரணங்களை சுட்டி காட்டியுள்ளார். இதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross