Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:00:08 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12183
#KOTW12183
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, அக்டோபர் 25, 2013
“கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவதேன்???” - உயிரி எரிவாயு திட்டத்திற்கான இடந்தேடல் குறித்து ‘மெகா’ வெளியிட்டுள்ள பொதுப்பிரசுரம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 8531 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (31) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலையொட்டி, பொதுமக்களுக்கு வழிகாட்டுவதற்காக துவக்கப்பட்டது, “நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு - Municipal Election Guidance Association (MEGA).

தேர்தல் நிறைவுற்ற பின்னரும் ‘மெகா’ அமைப்பு தொடர்ந்து நகரில் இயங்கி மக்கள் நலப்பணிகள் செய்ய வேண்டும் என பொதுநல ஆர்வலர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் இவ்வமைப்பு, “மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு - Mass Empowerment and Guidance Association (MEGA)” என்ற பெயரில் புதிய பரிணாமம் பெற்று, காயல்பட்டினம் தைக்கா பஜாரில் - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியருகில், இம்மாதம் 23ஆம் தேதி புதன்கிழமையன்று ‘மெகா’ அலுவலக திறப்பு விழாவும் நடைபெற்றது. அலுவலகம் திறக்கப்பட்ட பின், ‘மெகா’ மூலம் முதன்முதலாக இன்று பொதுமக்களுக்கான பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டு, அகநகர் மக்களுக்கு ஜும்ஆ தொழுகை நிறைவுற்ற பின்னரும், புறநகர் மக்களுக்கும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. “கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவதேன்???” என்ற தலைப்பில், ‘மெகா’வின் முதல் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ள அப்பிரசுரம் வருமாறு:-
















Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by netcom buhari (chennai) [25 October 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 30979

Something wrong.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Abbas (Los Angeles) [26 October 2013]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 30981

Assalamu Alaikkum

ரொம்பவும் தெளிவான விளக்கம் MEGA வின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

இந்த அநியாயத்துக்கு அதரவு தெரிவிச்சு கொஞ்சம் பேர் இங்கே எழுததான் செய்வாங்க... இதுக்கு மேலயும் திருந்தலன்னா M .R . ராதா சொன்ன இந்த நாடும் நாட்டு மக்களும்........ வசனம்தான் ஜாபகதுக்கு வருது....

மக்களால் என்ன செய்ய முடியும்னு கொஞ்சம் explain பண்ணுங்க ப்ளீஸ்

அலலாஹ் எல்லாத்துக்கும் தெளிவு ஏற்படுத்தட்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை...!
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [26 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30982

ஒன்றுமில்லாத பொட்டல்வெளியில் பயோ கேஸ் ப்ளாண்ட் அமைத்து அதனால் உருவாக்கப்படும் மின்சாரத்தை நான்கு கிமீ.தொலைவுக்கு கொண்டு வர இயலுமா? இது சாத்தியமாகுமா? என்பது பாமரனுக்கு கூட உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரியும். நமது நகர்மன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் ஏன் தெரியாமல் போனது? ஆக தலைவியின் காலத்தில் இந்த திட்டம் வரக்கூடாது என முடிவு கட்டி விட்டார்கள்.

சரி அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மானாவாரியாகக் மயானம் உட்பட கிடக்கும்போது மாற்று இடம் தேவைதானா? அதுவும் விலை கொடுத்து வாங்கி ரோடு போட்டு மின்சார வசதி செய்து கொடுத்து இப்படி கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை பாழாக்கத் துடிக்கும் உறுப்பினர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும்.

அரசுக்குச் சொந்தமான நிலங்களை அநியாயமாக பத்திரம் போட்டு அனுபவிக்கத் துடிக்கும் சிலர், இந்த நிலம் தேடுதல் வேட்டையில் சிக்குவார்கள். இவர்கள் அரசு நிலங்களை அரசிடமே ஒப்படைப்பது நல்லது. இல்லையேல் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை போல் ஆகிவிடும். அப்புறம் கம்பியும் எண்ணணும் களியும் தின்னணும்.

மொத்தத்தில் நமதூரின் நிலச் சுரண்டல் மாஃபியாக்களின் தூக்கம் தொலைந்து எனலாம். ஆக வெளிச்சம் போட்டுக்காட்டிய மெகாவுக்கு ஒரு மெகா சல்யூட்...!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Mohiadeen Thamby (Bangalore) [26 October 2013]
IP: 171.*.*.* India | Comment Reference Number: 30983

புரட்சி எயக்கதிருக்கு எனது வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by V. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou) [26 October 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 30984

ஊரின் நிலைமை இப்படி நெருக்கடியாக உள்ளதே என்று வருத்தப்படுவதை விட, தமாசாக பொழுது போகிறதே என்று சந்தோசமாக உள்ளது. இவர் அவரை குறை சொல்ல, அவர் இவர் மீது பாய .........

5 வருட ஆட்சி காலமும் இப்படித்தான் போகும்போல .

மக்கள் கவலையை மறந்து, சந்தோசமாக இருக்க அவ்வப்போது தோன்றும் இதுபோன்ற அமைப்புகளுக்கு மிக்க நன்றி. இதுபோன்ற அமைப்புகள் காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப, தெருவுக்கு தெரு வெவ்வேறு பெயர்களில் முளைக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கும் நன்றாக பொழுது போகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இந்த குற்றச்சாட்டிற்கு நகர்மன்ற உறுப்பினர்களின் தரப்பிலிருந்து என்ன விளக்கம் தர போகிறார்கள்...
posted by syed ahamed (chennai ) [26 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30985

எனது மன குமறல் (சர்வே எண் 392 - மறைந்தும் மக்கள் மனதில் வாழும் பெருந்தகை M K T அப்பா காலத்தில் இதற்காகவே ஒதுக்கிய) இந்த பிரசுரத்தில் இடம் பெற்றுள்ளது என்பதை படிக்கும் போது மெகாவிற்கு நன்றி.

இந்த குற்றச்சாட்டிற்கு நகர்மன்ற உறுப்பினர்களின் தரப்பிலிருந்து என்ன விளக்கம் தர போகிறார்கள்...

பொதுமக்களாகிய நாங்கள் எதிர்பார்ப்பது உங்களின் (உறுப்பினர்களின்) விளக்கத்தையும் அறிந்த பின்பு தான் ஒரு தெளிவை பெற முடியும். ஆகையால் நகர்மன்ற உறுப்பினர்களே காலம் கடத்தாமல் உங்களின் தரப்பின் விளக்கத்தை மக்கள் மன்றத்தின் முன் சமர்பிப்பீராக.

அரசு புறம்போக்கு இடத்தை ஒரு தனியார் உரிமை கொண்டாடுவது நியாயமில்லை - அந்த தனியார் யார் ?

இந்த திட்டம் (தமிழக முதல்வர் வழங்க இருக்கும் 90 லட்சம்) திரும்பி RUTERN போகும் ஆபத்து ஏற்பட போகுது. இறுதியில் இது தான் நடக்க போகிறது பொறுத்து இருந்து பார்போம்

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்...
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [26 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30989

அநியாமாக வசதியே இல்லாத பொட்டல் வெளியில் அதுவும் நாலு கி.மீ தூரத்திலிருக்கும் தனியாரின் நிலத்தை வாங்கி அதுக்கு தெண்டம் போட முயற்சிக்கும் நகர் மன்றத்தின் செயல்பாட்டை எண்ணி குமுறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், ரோம் நகர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதை போல கருத்துப் பரிமாற்றத்தை ஒரு பொழுது போக்காகவும், ஜாலியாகவும் சித்தரிக்கும் சிலர் திருந்தப்போவது எப்போது?

மக்களின் உணர்வுகளை மதிக்கத்தெரியாத இவர்களுக்கு பொழுது போக வில்லை எனில் வேறு பொழப்பிற்குச் செல்லட்டும். இப்படி காயப்படுத்த வேண்டாம்.

-ராபியா மணாளன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. SAFETY FIRST
posted by Abu Rushda (Dubai) [26 October 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30990

MEGA’s intention may be right. But no one will accept a biogas plant and a solid waste dumpsite at his back yard. Biogas plants produce large quantities of combustible and toxic gases like methane, CO2 and H2S which pose increased fire, explosion or asphyxiation hazards in case something gone wrong. In the event of an incident at the plant, damage to life, property and environment surrounding the plant is inevitable. Methane, a highly volatile and explosive gas needs such a stringent monitoring against leak, I think we would hardly able to do that. Keeping safety and health concerns in mind, I think it is wise to keep these projects much away from residential areas, preferably away from city limit.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. எமாற்றுபவர்களின் எதிர்கால எல்லைக்கல் சிலஎட்டு தூரமே!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (YANBU) [26 October 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30991

மக்கள் வரிப்பணத்தில் இருந்து நிறைவேறும் திட்டம் நல்லதா?அல்லது அரசாங்க நிலத்தில் அரசாங்கமே நிறைவேற்றும் திட்டம் நல்லதா? என்று நடுநிலையானவர்கள் முடிவேடுக்ககூடிய தருணம் வந்து விட்டது. சிறுபிள்ளைகளிடம் கேட்டால் கூட எந்த நிலை சரியென்று இலகுவாக சொல்லிவிடுவார்கள்!

விழிப்புணர்ச்சி பாதையில் வேகமாக சென்றுகொண்டிருக்கும் நம்காயல் மக்களுக்கு இந்த உண்மை விஷயம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உணரவைத்து விட்டது என்பது தான் எதார்த்தம்!

எமாற்றுபவர்களின் எதிர்கால எல்லைக்கல் சிலஎட்டு தூரம்வரை தான் என்று எல்லோர் மனதிலும் ஏற்பட தொடங்கிவிட்டது!

யார் சொல்கிறார்கள் எபதைவிட என்ன சொல்லபடுகிறது அதன் நன்மைகள் என்ன?அதன் உண்மை என்ன? என்பதை உரசி பார்பதுதான் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும், அக்கடமையை காயல் மக்களுக்கு காட்டிய வல்ல அல்லாஹ் விற்க்கும்,அவனால் ஏவப்பட்டு எல்லா மக்களுக்கும் எளிய முறையில் உண்மை விபரத்தை விளங்கவைத்த "அமைப்பிற்கும்" எங்களின் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Hameed sulthan (Abudhabi) [26 October 2013]
IP: 82.*.*.* Iceland | Comment Reference Number: 30992

Makkalay itharku thiervu kana vendum.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. MKT அப்பா வசியத் செய்த நிலம்.
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [26 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30994

சகோதர் செய்யத் அஹ்மத் அவர்களே!

'எனது மன குமறல் (சர்வே எண் 392 - மறைந்தும் மக்கள் மனதில் வாழும் பெருந்தகை M K T அப்பா காலத்தில் இதற்காகவே ஒதுக்கிய) இந்த பிரசுரத்தில் இடம் பெற்றுள்ளது என்பதை படிக்கும் போது மெகாவிற்கு நன்றி' (C&P)

இன்னும் எத்தனை தடவைதான் இதை எழுதுவீர்கள். உங்களுக்காகவே அதன் விபரம் புரியும்படி கமன்ட் பதிவு செய்திருந்தேன். ஆனால் நீங்களும் புரிந்த மாதிரி தெரியவில்லை. அதே நேரத்தில் இந்த அமைப்பும் MKT அப்பா அவர்களின் தீர்மானத்தை, தங்களது நோட்டீஸில் சுட்டி காட்டியுள்ளதால், அதை மறுபதிவு செய்கிறேன். இனிமேலாவது அந்த தீர்மானத்தை மேற்கோள் காட்டாதீர்கள்.

'MKT அப்பா அவர்கள் 1953-1965 வரை இரண்டு முறை (2 term) தலைவராக இருந்துள்ளார்கள். தலைவி நகர்மன்றத்தில் தெரிவித்த, நீங்கள் உடும்பு பிடியாக சொல்லும் தீர்மானம் இயற்றப்பட்ட ஆண்டு 1958. அதாவது MKT அப்பா அவர்களின் முதல் ஆட்சி காலத்தில். அதன் பின்னர் MKT அப்பா அவர்கள் மேலும் 7 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார்கள். அந்த 7 வருடங்களில் அவர்களே அந்த தீர்மானத்தை செயல்படுத்த முயற்சி எடுத்தது மாதிரி தெரியவில்லை.

இந்த 55 ஆண்டுகளில், அவர்களுக்கு பின்னால் வந்த, பாவலர் அப்பா, LK அப்பா உட்பட எந்த தலைவரும் முயற்சி எடுக்கவில்லை. ஏன் MKT அப்பா அவர்களின் மருமகள் (மகனின் மனைவி) நாச்சி தம்பி ராத்தா அவர்கள் தலைவியாக இருந்தபோது கூட அந்த முயற்சி எடுக்கப்படவில்லை. காரணம், மாற்று மத சகோதரர்களின் மயானமாக இருப்பதால், இந்த இடத்தில் குப்பை கொட்டினால் அவர்களின் மத உணர்வுகள் புண்படலாம் என்பதனால்.' (C&P) COMMENT# 30948

தம்பி அபு ருஷ்தா உடைய கமென்ட்#30990. இது மிகவும் கவனிக்க வேண்டியது. இந்த கருத்தாளர், Dubai மின்வாரியமான DEWA -வில் பொறியாளராக, மேலாளராக இருக்கிறார். இவரின் கருத்துப்படி ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கவேண்டியதன் அவசியத்தை Technical & Safety காரணங்களை சுட்டி காட்டியுள்ளார். இதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

-- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...அதானே!!!
posted by OMER ANAS (DOHA QATAR..) [26 October 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 30995

அதானே கையில் வெண்ணை இருக்க நெய்க்கு அலைவானே.... ஒரு வேலை உருக்க சட்டி இல்லையோ என்னவோ! நல்ல திட்டங்களை யார் மக்கள் முன் இட்டுச்சென்றாரும் பாராட்டுவோம் வரவேற்ப்போம். அல்லது ஒதுங்கி இருப்போம் இதுவே முறை! அது வகையில் என் பாராட்டுக்கள்!

இது விசயமாக சகோதரி ஆபிதா அவர்கள் ஜமாத்துகளுக்கு எழுதிய கடித நகலையும் இணைத்து வெளியிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்குமே..?

காத்திருப்போம் உறுப்பினர்களின் விளக்க பிரசுரத்திற்கு!
அப்பத்தான் ஒரு தெளிவுக்கு வர முடியும். நன்றி !!!

உமர் அனஸ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. MEGA -க்கு சில கேள்விகள்.
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [26 October 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 30999

அல்லாஹ், யூதர்களை பற்றி குறிப்பிடும்போது, "எனவே வேதத்தில் சிலவற்றை நம்பியும் வேறு சிலவற்றை நிராகரித்தும் வருகின்றீர்களா? உங்களில் இதனைச் செய்பவர்களுக்கு இந்த அற்ப வாழ்வில் இழிவைத் தவிர வேறு பிரதிபலன் இல்லை.(அல்-குர்ஆண் 2:85)

இதே மாதிரித்தான் நீங்கள் வெளியிட்டுள்ள பிரசுரமும். மக்களுக்கு உங்களின் தரப்பை சொல்லும்போது முழுமையாக சொல்லுங்கள். இந்த Bio-gas திட்டத்தை மட்டும் கையிலெடுத்து குப்பை கொட்டும் திட்டத்தை, உங்கள் வசதிக்காக மறந்து விட்டீர்கள்.

ஆனால் நீங்கள் போற்றும் தலைவி அவர்கள், 09.08.2012-ல், ஐக்கிய பேரவை உட்பட அனைத்து ஜமாஅத்திற்கும் எழுதிய கடிதம், மக்கள் மறந்து இருப்பார்கள் என்ற நினைப்பா?

அதில், "நகராட்சிக்கு என பிரத்தியேக குப்பைகள் கொட்டும் இடம் இல்லாததால் - அதற்கு தேவைப்படும் 5 ஏக்கர் நிலம் கிடைக்கும் பட்சத்தில், அதே இடத்தில, Bio-Gas Plant க்கு தேவையான 10 சென்ட் நிலத்தையும் நாம் ஒதுக்கலாம். எனவே - நகரில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேவைக்கான நிலம் வைத்துள்ளவர்கள், இந்த முக்கிய பணிக்கு இடம் தந்து உதவிடும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள். இந்த பணிகள் அனைத்தும் இறைவன் உதவியுடன் நிறைவேறினால் - கூடிய விரைவில் - குப்பைகள் தெருக்களில் தேங்காத நகராக நம் நகரை நாம் மாற்றிவிடலாம்".(C&P)

அந்த கடிதம் கொடுத்த நேரத்தில், ஊரில் புறம்போக்கு நிலம் இருப்பது, இந்த தலைவிக்கு தெரியாதா?

1. இந்த இரண்டு திட்டமும் ஒரே இடத்தில் தான் இருக்க வேண்டுமா? அல்லது வெவ்வேறு இடங்களில் இருந்தால் பரவாயில்லையா? ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் குறிப்பிடும் அந்த சர்வே எண்களில், அவ்வளவு பெரிய இடம் உள்ளதா? இந்த இரண்டு திட்டமும் ஒரே இடத்தில் இருந்தால் நல்லது என்று நம் தலைவி சொல்லுகிறார்கள்,

2. உங்கள் பிரசுரம்படி, நம் நகரில் தினசரி 8.00 MT குப்பை சேர்க்கிறது. அதில் 40% (3.20 MT) மட்டுமே மக்கும் குப்பை. மீதி 4.80 MT மக்காத குப்பை. இந்த மக்கும் குப்பையை நீங்கள் குறிப்பிடும் BIO-GAS PLANT -ல் கொட்டினால், மீதம் உள்ள 4.80 MT. (இது மக்காத குப்பை) (ஒரு வருடத்திற்கு 1,750 MT சேரும்) அதை எங்கே கொட்டுவீர்கள்?

3. இரண்டு திட்டங்களும் வெவ்வேறு இடங்களில் இருக்கும் போது, மக்கும்/ மக்காத குப்பையை எவ்வாறு பிரிப்பார்கள்? தற்சமயம் நம் மக்கள் ஒரு வாளி வைத்து அதை கொட்டவே சோம்பல், அலட்சியம் படும்போது, மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று 2 வாளியில் குப்பையை பிரித்து தருவார்களா? நாம், நம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களும் பிரித்து தந்து, ஒரே குப்பை வண்டியில் 2 பிரிவு (chamber) வைத்து சேகரித்து, மக்கும் குப்பையை ஊருக்கு அருகிலுள்ள bio-gas plant- ல் கொட்டிவிட்டு மீதியை ஊருக்கு வெளியில் உள்ள உரக்கிடங்குக்கு தினமும் கொட்டும் போது, அதற்கான transportation cost, (on long run) எவ்வளவு ஆகும்? நகராட்சி சார்பில் ஒவ்வொரு தெருவிலும் வைத்துள்ள குப்பை தொட்டிகளிலும் (Dumber Placer Bin), மக்கும் / மக்காத குப்பைக்கு என்று தனி பிரிவு இல்லை.

4. தற்போது நம் நகரில் சேரும் குப்பைகளை எங்கே கொட்டுகிறார்கள் என்று தெரியுமா? அந்த குப்பைகள் LF ரோட்டுக்கு பின்புறமுள்ள தனியாருக்கு சொந்தமான குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள நிலத்தில்தான். இதை விட கொடுமை என்ன தெரியுமா? அந்த குப்பை கொட்டபட்டிருக்கும் இடத்த ஒட்டி தான், நம் நகர்மன்றதிற்கு சொந்தமான ஆடு அறுக்கும் இடம் (slaughter house) உள்ளது. நாம் தினமும் சாப்பிடும் ஆட்டு இறைச்சி அறுக்கப்படும் இடம் இதுதான். குப்பை கொட்டும் இடத்தை சுற்றி எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறக் கூடாது என்று மாசு கட்டுப்பாடு விதிகள் சொல்ல, அப்படி ஒரு சூழல் பற்றி தலைவிக்கு தெரியுமா? அதை பற்றி உங்கள் அமைப்பு எடுத்த நடவடிக்கைகள்தான் என்ன?

5. தற்போது கொட்டப்படும் இடத்தில் மக்காத குப்பையை கொட்டிவிட்டு, நீங்கள் குறிப்பிடும் சர்வே எண் 392/5 -ல் Bio-gas plant ல் மக்காத குப்பையை கொட்டவேண்டும் என்றால், இரண்டு இடத்திற்கான தூரம் 3 கீ.மீ.

ஆனால் நீங்கள் குறிப்பிடும் சர்வே எண் 334/1,334/2 ஆகியவற்றிற்கு, தற்போது கொட்டும் இடத்தில் இருந்து 5 கீ.மீ. நகராட்சியில் எத்தனை குப்பை லாரி மூலம் குப்பை அள்ளபடுகிறது? ஒரு நாளைக்கு, 1 குப்பை லாரி (1 TRIP) வீதம்,வருடத்திற்கான TRANSPORTATION COST எவ்வளவு? என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. MEGA பிரசுரமும், சர்வே எண்-278-ம்
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [26 October 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 31000

முன்னாள் நகர்மன்ற தலைவர், ஹாஜி வாவு செய்யத் அப்துல் ரஹ்மான் அவர்கள் தருவதாக சொன்ன, சர்வே எண் 278 பற்றி நீங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் எவ்வளவு உண்மை என்று பார்போம்?

உங்கள் கருத்துப்படி ஊர் எல்கை என்பது எது? அது இருக்கும் இடம் கற்புடையார் வட்டத்திலிருந்து 2 கீ.மீ தூரத்தில் உள்ளது. சாலை வசதி (தார் சாலை), மற்றும் மின்சார வசதி இருக்கும் இடத்தில் இருந்து 1 கீ.மீ தூரத்தில் மட்டுமே உள்ளது. நம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து 4 கீ.மீ மட்டுமே. மாவட்ட ஆட்சியரின் கருத்தை உங்கள் பிரசுரம் மூலம் திரித்து வெளியிட்டிருக்கிறீர்கள். இந்த இணையதளத்தில் வந்த ஆட்சியரின் குறிப்பை தருகிறேன்.

News# 12154 பற்றி. மாவட்ட ஆட்சியர் அவர்களின் தல ஆய்வு (Field report) அதில்

>>' மேற்படி 25.00 சென்ட் அளவுள்ள நிலத்தினை தானமாகப் பெறுவதற்கு நகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

>> மேற்படி நிலப்பரப்பு கடற்கரை பகுதியினை ஒட்டி அமைந்துள்ளதால் “கடற்கரை மேலாண்மைப் பகுதி” வரையறைக்குள் (CRZ) அமையப்பெறாவண்ணம் திட்ட செயல்பாட்டிற்கான நிலம் தெரிவு செய்யப்படலாம்' (C&P)

இதெல்லாம் போகட்டும், உங்களின் அமைப்பில் இருப்பவரும், தலைவியின் தீவிர ஆதரவாளரான, சகோதரர் அப்துல் வாஹித் அவர்கள், இந்த இணையதளத்தில் பதிந்த கருத்து# 30468 "ஊர்நலனில் அக்கறையுள்ள ஒரு சகோதரர் என்னிடம் கூறும்போது ஐக்கிய பேரவையைக் சார்ந்த ஒரு நபர் தன்னிடம் இந்த குற்றச்சாட்டை வைத்ததாக கூறி, "ஏன் தலைவி இந்த மாதிரி பிடிவாதமாக இருக்கிறார்" என்று வினவினார். நான் அந்த நபரின் அலுவலகத்திலிருந்தே தலைவியுடன் தொலைபேசியில் வினவினேன். அதற்கு தலைவி அளித்த பதில்.

"இதுவரை என்னிடம் யாரும் பேச்சு மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ இந்த விசயமாக அறிவிக்கவில்லை. நீங்கள் சொல்லித்தான் முதன் முறையாக கேள்விப் படுகிறேன். மாற்று நிலம் தருவது சம்பந்தமாக நீங்கள் சொல்வது உண்மையானால் சம்பந்தப்பட்டவர்களை எழுத்து மூலம் தரும்படி சொல்லுங்கள். இன்ஷா-அல்லாஹ், மேலதிகாரிகளிடம் பேசி மேற்கொள்ள வேண்டியதை செய்வோம்". என்றார். (C&P)

(இது 4-5 மாதங்களுக்கு முன் நடந்த பேச்சு, கருத்து பதிந்தது 30.09.2013.) 4-5 மாதங்களுக்கு முன்பு சேரவே எண் 278 நிலம் சரியாக பட்டது. இப்போது இந்த இடம் சரியில்லாமல் போனதோ? ஊராரிடம் காத்து குத்தாதீர்கள்.

அடுத்து இந்த சர்வே எண் நிலைத்த தட்டிக் கழிக்க சொல்லும் உங்களின் உப்புசப்பு இல்லாத காரணம், DCW நச்சு ஆலையின் கழிவுகள் இந்த இடத்திற்கு அடுத்தாற்போல்தான் கடலில் கலக்கிறது.. அதனால் அந்த ஆலை, அந்த ஓடை கலக்க தான் (DCW) காரணமில்லை என்று சொல்லுமாம்! கேட்கிறவன் கேனையனாக இருந்தால், கேப்பையில் நெய் வடியுது என்று சொல்லுவானாம்.

அப்போ நம் நகரில் இயங்கிவரும், சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்பில் (KEPA) உள்ளவர்களிடம் அந்த ஆலையின் கழிவுகள் நம் கடலில் கலப்பதற்கு ஆதாரம் இல்லையா? அதுவும் பீலா தானா? அந்த அமைப்பில் முக்கிய உறுப்பினர்களாக இருப்பவர்கள் உங்கள் அமைப்பிலும் இருக்கிறார்களே?

கடைசியாக, இந்த உறுப்பினர்களை மிரட்டும் வேலையை இத்தோடு நிறுத்துங்கள். அவர்கள் முன்னர்மாதிரி, நகர்மன்றத்தில் வெளிநடப்பு செய்ய மாட்டார்கள். நகரின் நன்மைக்காக நகர்மன்றத்தில் குரல்கொடுப்பார்கள். சென்ற மாத கூட்டத்திலும், அதன் பின் நடந்த அவசர கூட்டத்திலும், உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்? தலைவி அதற்கு எவ்வாறு பதில் சொன்னார்கள் என்று, இணையதளங்களில் தணிக்கை செய்யாத வீடியோ காட்சிகள் மூலம் மக்கள் தெரிந்து கொண்டார்கள். தலைவின் நிர்வாக திறமை(?) சாயம் கலைந்து போய்ட்டுதுங்கோ!

மக்களும் உஷாராக இருக்காங்கோ. உங்களின் நாடகம் அம்பலமாக போகுதுங்கோ.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. விரைவில்.... பொது மக்கள் பார்வைக்கு பதில் தாருங்கள்...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [26 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31002

இந்த அறிக்கைக்கு உறுப்பினர்களின் தரப்பில் பதில் விளக்கம், கருத்துக்கள் என்ன…?

உங்களை நகர்மன்றதிர்க்கு அனுப்பி வைத்த எங்களுக்கு உங்களின் விளக்கம் தேவை...?

விரைவில்.... பொது மக்கள் பார்வைக்கு பதில் தாருங்கள்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. பெருந்துரோகம்
posted by Abdul Wahid S. (Kaayalpattinam) [27 October 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31005

ஏதோ M.K.T. அப்பா, பாவலர் அப்பா, L.K. மாமா காலத்தில் அவரவர்கள் பதவியிலிருக்கும் போது அந்த இடத்தில் குப்பைகொட்டும் திட்டத்தை அமுல்படுத்தாமலிருந்தற்கு இவரிடம் காரணம் சொன்னது போல கருத்து எழுதுகின்றனர் சிலர். இவர்கள் கூறிய காரணம் உண்மையாக இருந்திருந்தால் ஆதாரம் தரவும்.

ஒரு வேலை அந்த குறிப்பிட்ட இடத்தில் குப்பை கொட்டுவதற்கு அப்போது அவசியம் ஏற்படாமலிருந்திருக்கலாம் அல்லவா ?

-----------------------------------------------------------

Technical & safety : மயான இடம் நமதூர் மத்தியில் அமையவில்லை. ஊர் எல்லைக்கு வெளியில்தான் அமைந்துள்ளது. அபு ருஸ்தாவை விட தமிழக அரசுக்கும் அதன் பொறியாளர்களுக்கும் Technical & Safety யை பற்றி நன்கு தெரியும். அது மற்றுமல்ல மயான நிலம் போக 2 ஏக்கர் நிலம் அங்குள்ளது என்பது குறிப்பிட தகுந்தது.

Gas Plant ஐப் பற்றிய ஞானம் எனக்கில்லாததால் கிட்டத் தட்ட 40 வருடங்களாக Tarapore ( Maharashtra) வில் Gas Plant ஐ நடத்திவரும் நமதூரைச் சார்ந்த ஒரு பொறியாளரிடம் (B.E., M.B.A) விசாரித்ததில், Bio-Gas plant அபு ருஸ்தா Built up கொடுத்த மாதிரி மிக ஆபத்தான Plant இல்லை என்பதை அறிய முடிந்தது.

ஒரு வேலை எதிபாரா விதமாக ஒரு பெரிய விபத்து/ விபரீதம் நடந்தாலும் அதன் தாக்கம் அந்த Plant எரியாவைத் தாண்டி இருக்காது என்பது அந்த பொறியாளரின் கருத்து.

அது மட்டுமல்ல எனக்கு கிடைத்த தகவலின் படி Pune யில் (Maharashtra) ஒரு ஏரியாவில் ஒவ்வொரு வார்டிலும் ஒரு Bio-Gas Plant அமைத்துள்ளார்கள்.

ஆதலால் Bio-gas plant பற்றிய ஞானம் இல்லாதவர்கள் அது பற்றிய ஞானம் இருப்போரிடம் விசாரித்து தெரிந்து கொண்டு எழுதவும்.

கவுன்சிலர்களால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இடம் பல காரணங்களால் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்ட இடம். அப்படியிருந்தும் அந்த தீர்மானத்தை செயல்படுத்த முனைவது அந்த ஏரியா நிலச்சுவான்களை பெரும்பலன் அடையச் செய்வதற்கும் அதன் மூலம் குளிர்காய்வதற்கும் நிறைவேற்றப்பட்ட தீர்மானமேயன்றி வேறு காரணங்கள் இருக்க முடியாது. இது நமதூர் மக்களுக்கு செய்யும் பெருந்துரோகம்.

தலைவியின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்பதற்காக மறுதரப்பினரை (கண்மூடித்தனமாக) ஆதரிக்க வேண்டாம். அப்படியே ஆதரிக்க வேண்டும் என்ற நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டால் அதற்காக அவர்களின் தவறான முடிவை ஞாயப் படுத்தவேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...அறிந்து கொள்வோம்.
posted by OMER ANAS (DOHA QATAR..) [27 October 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 31006

இங்கே மக்கள் அறிந்து கொள்ள வேண்டி தெளிவாக விளக்கம் தந்து கொண்டிருக்கிறார் சகோதரர்,சாளை அப்துல் ரஸ்ஸாக். நல்ல விளக்கம். சிலர் தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே புரியும்படி விளக்கம் தருகின்றனர்., மற்றவர்கள் சொல்வது கனா கண்டு சொல்வது போல் திரிக்கப் பார்க்கின்றனர்.

அது போல் தலைவி மீது வெறுப்பு காரணமாக உறுப்பினர்களுக்கு கண்ட மேனி ஆதரவு கொடுப்பதாகவும் நினைக்கின்றனர். பதிகின்றனர். அப்படி என்றால்,நீங்கள் மொத்த உறுப்பினர்களின் மீதும் வெருப்பால்தான் இந்த மாற்றுத்திட்டத்தை கையில் எடுத்துள்ளீர்களா? அதனால்தான் மாற்று பெயர் புனைந்து வந்திருக்கும் மெகா உறுப்பினர்கள் மீது வெறுப்பை காட்டி முதல் கோரிக்கையினை தலைவி ஆதரவுக்காக கையில் எடுத்து திசை திருப்ப நினைக்கிறது என்றல்லவோ நடுத்தர மக்கள் நினைப்பார்கள்,சிந்திப்பார்கள்..

நிலங்களை வைத்து ஆதாயம் தேடுவோர் யார் இல்லை அப்படி என்றால் இந்த இடத்தை சிபாரிசு செய்து மல்லு கட்டுகிறீர்களே இங்கே உங்களுக்கு வேண்டப்பட்ட நிலம் எகிரனும் என்றுதான் இந்த திட்டம் என்று மக்கள் நினைக்கப் போகிறார்கள்.

ஆகவே மக்களிடம் போய் சேரவேண்டிய திட்டங்கள் நிறைய இருக்கிறது அதில் முதல் கோரிக்கை அடிப்படை தண்ணீர். அதை கையில் எடுத்து மோட்டார் போட்டு உறிஞ்சுவோர். கிணற்றிலே வெட்ட வெளிச்சமாக மக்கள் அறியும் இடத்தில் ஓட்டை போட்டு குழாய் இறக்கி தினமும் தண்ணீர் பிடிப்போர், இவர்களை இனம் கண்டு மக்கள் முன் இனம் காட்டுங்கள்!.

அன்றைய இன்றைய பெரியவர்களின் நெடுந்தூர சிந்தனையை இனியாவது கொச்சை படுத்து முகமாக பதியாதீர்கள். இப்ப விடுங்க சார் உறுப்பினர்களை! அடுத்த தேர்தல் வரும் அப்ப யாரை கொண்டு வரலாம் வரக்கூடாது என்று ரூம் போட்டு பேசுவோம்! .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Grow up guys!!!!
posted by Abu Rushda (DUBAI) [27 October 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31007

What I mentioned is my understanding of biogas after 23 years in power industry especially in control of fuel gas processing for more than 10 years in one of the largest power facility in Asia. I am quite sure my knowledge is limited as technology tends to change by each passing day. This is only an observation and I could not understand why Mr. Abdul Wahid is so nervous in his reply. I have no intention what so ever to give a false BUILD-UP as mentioned by him. Neither I got any hidden agenda nor objective to mess around.

It did not require high technical knowledge to understand the health hazards around a solid waste dump. If someone got a proper and sensible nose, he can feel the stench around the dumpsite. Guys who advocate the site near residential area should try to shift their houses near these facilities or at least try to find a location for this facility at their back yard.

I don’t want someone in this caliber to certify my technical credentials. If required I am ready to write a much bigger reply with ASME and NFPA codes governing these types of plants and what are the safety guidelines followed not in Tharapur but Internationally.

For Mr. Abdul Wahid’s information, DCW got clearance from TNPCB and other government bodies for their industry, still why you guys are behind that. Do you think you are much smarter than them or you feel what TNPCB did is based on wrong judgment? If you think government engineers are much smarter than others, apply your understanding in all areas. One thing I can understand now, in kayal the condition is “if you are not with us then you are against us”…..Grow up guys!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. உண்மைகள் உறங்கக் கூடும்! ஒருபோதும் இறப்பதில்லை!
posted by kavimagan m.s.abdul kader (doha...qatar) [27 October 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 31009

மதிப்பிற்குரிய காக்கா சாளை அப்துல் ரசாக் அவர்களுக்கு! அஸ்ஸலாமுஅலைக்கும்........

எம்.கே.டி.அப்பா அவர்கள் காலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை,அன்னாருக்குப் பின் வந்தவர்கள் ஏன் செயல்படுத்த வில்லை? இந்தக் கேள்விக்கான பதிலை,காலம் சென்ற தலைவர்களும்,படைத்த இறைவனும் மட்டுமே அறிவான்... இந்த இடத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப் படக் கூடாது என்று,அந்தத் தலைவர்களுள் எவரேனும் சொன்னார்களா?

மெகாவின் கேள்வி மிகத் தெளிவானது....அதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? நம்மிடம் பணம் செலுத்தத் தேவையில்லாத அரசு புறம்போக்கு நிலம் கைவசம் இருக்கும் பொது,விலை கொடுத்து ஏன் வாங்க வேண்டும்....இந்தக் கேள்விக்கு பதில் இருந்தால் சொல்லுங்கள்....அதை விடுத்து அந்த இணையதளம் சொன்னது, அப்துல் வாஹித் சொன்னது என்று ஏன் குழப்புகின்றீர்கள்?

உறுப்பினர்களை மிரட்டுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று எழுதும் முன்பு எது மிரட்டல் என்பதனை நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும்....மக்களது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பது மிரட்டலா? எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்?

எடிட் செய்யாத வீடியோ காட்சியில் என்ன கண்டீர்கள்? அல்லது நேரில் சென்று என்ன அவதானித்தீர்கள்....பதினாறு பேர் ஒன்றாகச் சேர்ந்து உரக்க சப்தமிட்டால் அதுவே உண்மையாகி விடுமா? அதனை உண்மை இல்லை என்று நிரூபிக்கும் ஒவ்வொரு ஆதாரமும் உங்கள் கண்முன்னால் அணிவகுக்க ஆரம்பித்து விட்டது....

அதில் முதலாவது விஷயம்......எந்தத் தீர்மானத்தின் மீதும் தனது சொந்தக் குறிப்பை எழுத தலைவிக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்கான ஆவணம்.....தொடர்ந்து பயோ கேஸ் திட்டத்தைக் குறித்து வெகு ஜன மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது......இன்னும் இன்னமும் இது தொடரும்....உண்மைகள் உறங்கக் கூடும்....ஒருபோதும் இறந்து போவதில்லை.....

அடுத்ததாகக் கெபா குறித்த கிண்டல்.....எதிர்வரும் விளைவுகளை சந்திக்கும் திராணி கொண்ட இளைஞர்கள்,நகர மக்களின் நன்மைக்காக தியாக உணர்வுடன் நடத்தும் வேள்விதான் கெபா. பீலா விடுவதற்கு அவர்கள் ஒன்றும் கருத்துக் கதைகளை எழுதி வேடிக்கை பார்ப்பவர்கள் அல்ல....களப் போராளிகள்....அவர்கள் எதிர் கொண்டிருக்கும் இன்னல்கள் என்னென்ன என்பதனை வல்ல இறைவன் அறிவான்....அவர்களுக்காக துஆ செய்து வாழ்த்த மனம் இல்லையெனினும் தயவு செய்து கேலி,கிண்டல் செய்யாதீர்கள்....அவர்கள் நமக்காக களத்தில் இருக்கின்றார்கள் என்பதனை மறந்து விடாதீர்கள்....

தலைவியின் நிர்வாகத் திறமையின் சாயம் என்ன என்பதை நகர மக்களும்,மாவட்ட மாநில ஆட்சித் துறை அதிகாரிகளும், அரசாங்க நிர்வாகத்தினரும் அறிந்தே வைத்திருக்கின்றார்கள்.... இதற்கெல்லாம் மேலாக எல்லாவற்றையும் அறிந்தவனாக இறைவன் இருக்கின்றான்....அவன் என்னையும்,உங்களையும் நேர்வழியில் நடத்துவானாக......ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. News from Indian Express …not a build-up…
posted by Abu Rushda (Dubai) [27 October 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31011

News from Indian Express …not a build-up…

City’s first biogas plant spews problems for nearby ரேசிதேன்த்ஸ்

http://www.indianexpress.com/news/city-s-first-biogas-plant-spews-problems-for-nearby-residents/1084877/

The first biogas plant of the Pune Municipal Corporation (PMC) commissioned in 2010 as a solid waste management measure is making too much wrong noises.

……….Right to Information (RTI) Act revealed that MPCB field officers had found noise levels at the plant far higher than permissible limits.

The field visit of the MPCB also brought to fore that the complaint of the residents of foul smell, and excess methane being burnt leading to air pollution and effluents polluting the water had some substance to it……

Some excerpt from “Guidelines for Selecting Suitable Sites for Biogas Plants” Dr. Christian EPP, விப்

Possible neighborhood conflicts

Emissions, particularly smell and noise emissions cannot be avoided. Thus, the site has to be selected in view to possible conflicts with neighboring areas. Are there residential areas in proximity (this should be analyzed in view to the prominent wind direction?) For analyzing these potential conflicts a legal and a real level should be scrutinized:

On the legal level it should be analyzed:

- Is any legal planning instrument enforced which prohibits the installation of a biogas plant?

- Is any legal planning instrument enforced which defines using purposes in this neighborhood that might create conflicts (e.g. residential areas, areas of cultural heritage or nature protected areas)?

In engineering things are decided based on established standards and tangible evidences and not on face value.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re: சகோதரர் லுக்மான் ரசாக் அவர்களே ... இது உங்களுக்கு ...
posted by Hameed Rifai (Kayalpatnam) [27 October 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 31012

சகோதரர் லுக்மான் ரசாக் அவர்களே ... இது உங்களுக்கு ...

< ஆனால் நீங்கள் போற்றும் தலைவி அவர்கள், 09.08.2012-ல், ஐக்கிய பேரவை உட்பட அனைத்து ஜமாஅத்திற்கும் எழுதிய கடிதம், மக்கள் மறந்து இருப்பார்கள் என்ற நினைப்பா?

அந்த கடிதம் கொடுத்த நேரத்தில், ஊரில் புறம்போக்கு நிலம் இருப்பது, இந்த தலைவிக்கு தெரியாதா? > C & P

நல்ல கேள்வி. முகவரி மாறி வந்த கேள்வி. ஐந்து லட்சம் பரிசா கொடுக்கலாம். ஊர நாட்டாமை பண்ணிட்டு இருக்கிற சில பெரிய மனுஷர்களுக்கு இன்னிக்கி வரைக்கும் புறம்போக்கு நிலங்கள் ஊரில எங்கிருக்குன்னு தெரியிலை. இந்த சேர்மன் பதவிக்கு வந்த 12 மாசத்திலேயே - புறம்போக்கு லிஸ்டை நோண்டி எடுத்தாங்களே. அத பாராட்டுவீங்களா , அத உட்டுட்டு ... இப்பதான் தெரியுமோன்னு கேள்வி வேற?! சாரே, பல பேர், அதக்கூட தெரியாம 5 வருசத்த முடிச்சுட்டு போயிருக்காங்க, அவங்கட்ட கேளுங்க உங்க கேள்விய

< இந்த இரண்டு திட்டமும் ஒரே இடத்தில் தான் இருக்க வேண்டுமா? அல்லது வெவ்வேறு இடங்களில் இருந்தால் பரவாயில்லையா? > C & P

அற்புதமான கேள்வி ... ஒரே இடத்தில இருந்தா நல்லது, சாலை வசதி, மின்சார வசதி, மக்கள் பகுதிக்கு பக்கத்தில அமைந்து ... எல்லாம் கூடிவந்தா ... இல்லன்னா பிரிக்கத்தான் செய்யனும் ... அது ஒன்னும் சீரியஸ் மேட்டர் இல்ல ... பயப்படாதீங்க ... இரண்டும், தனி தனியா தான் பிறந்துச்சு, இரட்டை குழந்தை இல்லை ...

தலைவி, கொஞ்ச மாசம் இரண்டும் சேர்ந்தாப்பில அமையுமானா பார்த்தாங்க, அமையலே, ஊர் நாட்டாமைகள் 278, 278, 278, 278, 278 ன்னு பழைய பல்லவியை தான் பாடிட்டு இருந்தாங்க .. இரண்டு திட்டத்தையும் பிரிச்சிட்டு, அவசரமா தேவைப்படுற பயோ காஸ் திட்டத்துக்கு மட்டும் இப்பம் இடம் தேடுறாங்க. புரிஞ்சுதா? அதெப்படி புரியும் ... 278... 278... 278 ...

< (ஒரு வருடத்திற்கு 1,750 MT சேரும்) அதை எங்கே கொட்டுவீர்கள்? > C & P

புதுசா குப்பைக்கொட்ட இடம் கிடைச்சா, அந்த புது இடத்தில ... கிடைக்கலேனா, இருக்கவே இருக்கு, நம்ம சேர்மன் கைக்குழந்தையா இருக்கும்போதிலிருந்து கொட்டிட்டு இருக்காங்களே, அதாங்க, பல திறமை மிக்க தலைவர்களை கண்ட, அந்த எல்.எப். சாலை தனியார் இடத்தில ...

< இரண்டு திட்டங்களும் வெவ்வேறு இடங்களில் இருக்கும் போது, மக்கும்/ மக்காத குப்பையை எவ்வாறு பிரிப்பார்கள்? தற்சமயம் நம் மக்கள் ஒரு வாளி வைத்து அதை கொட்டவே சோம்பல், அலட்சியம் படும்போது, மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று 2 வாளியில் குப்பையை பிரித்து தருவார்களா? > C & P

ரொம்ப ஆழமா யோசிச்சிருக்கீங்க ... வெரி குட் ... காக்கா, மக்கும் குப்பையை கறிக்கடை, மார்கட், ஹோடேலில் இருந்து தான் மஜோரிட்டி எதிர்பார்க்குராங்கா ... வீட்டில இருந்து இல்லை ... அதுக்குன்னு தனி லாரி, தனி ட்ரிப் போகும் ... சரியா .. மேலும் அதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் நகராட்சி நிர்வாகத்துறை, எழிலகம், சேப்பாக்கம், சென்னை, அண்ணா சமாதி எதிரில்...

< தற்போது நம் நகரில் சேரும் குப்பைகளை எங்கே கொட்டுகிறார்கள் என்று தெரியுமா? அந்த குப்பைகள் LF ரோட்டுக்கு பின்புறமுள்ள தனியாருக்கு சொந்தமான குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள நிலத்தில்தான் ... குப்பை கொட்டும் இடத்தை சுற்றி எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறக் கூடாது என்று மாசு கட்டுப்பாடு விதிகள் சொல்ல, அப்படி ஒரு சூழல் பற்றி தலைவிக்கு தெரியுமா? > C & P

கொஞ்சமாவது நியாயமா இருக்கவேண்டாமா உங்க கேள்வி ... ஓவரா அநியாயமா இருக்க கூடாது ... காகா ... கம்ப்யூட்டர் கொதிச்சுரும் ... எல்.எப். சாலை பக்கத்தில, இந்த சேர்மன் வந்தப்பிறகு தான் குப்பையை கொட்ட ஆரம்பிச்சாங்களா ... அந்த கேள்வியை, யார் தலைமையில, குப்பை கொட்ட ஆரம்பிக்கப்பட்டது, யார் தலைமையில slaughter house கட்டப்பட்டுசீனு, ஆராய்ஞ்சு, இந்த கேள்வியை கேட்கணும் ...

< மாவட்ட ஆட்சியரின் கருத்தை உங்கள் பிரசுரம் மூலம் திரித்து வெளியிட்டிருக்கிறீர்கள். > C & P

யாரு மறைச்சு எழுதுறா, யாரு திரித்து எழுதுறா ... சர்வே 392/5 ட்ட பத்தி ஆட்சியர் இப்படி சொல்றார்

>> இந்நிலத்திற்கு முறையான அணுகுபாதை உள்ளது.

>> மயான நிலமாக இருந்தாலும், தற்போது அதன் ஒரு பகுதி மட்டுமே மயானமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

>> ஒவ்வொரு ஜாதிவாரியாக மயானம் அமைப்பதற்கு, இப்பகுதி முழுமையும் மயான பயன்பாட்டிற்காகவே பிற்காலத்திற்குத் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்படும் மன்ற உறுப்பினரின் ஆட்சேபனை நிராகரிக்கப்படலாம்.

>> எனவே, திட்ட செயலாக்கத்திற்குத் தேவையான 25.00 சென்ட் நிலப்பரப்பு இப்பகுதியிலிருந்து தெரிவு செய்யப்படலாம்.

சர்வே 278 ட்ட பத்தி ஆட்சியர் இப்படி சொல்றார் ...

>> மேற்படி நிலமானது நகர்ப்புறத்திலிருந்து சுமார் 4.00 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

>> கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

இத மறைச்சிட்டு, நீங்க கடைசி இரண்டு வரியை மட்டும் ஹைலைட் பண்ணுறீங்க. நல்ல திறமை தான், பாராட்டி தான் ஆகணும் ... இந்த இடத்தை பார்க்க வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், சென்னை அதிகாரியும் அங்க போனப்போது நீங்க இல்லாம போய்ட்டாங்க ... in case, உங்க உறுப்பினர் நண்பர்கள் உங்கட்ட சொல்லாம போய்ட்டாங்கன, FYI, அந்த அதிகாரிகள் 278 பொருத்தம் இல்லேனே சொல்லிட்டாங்க ... நோ, நோ, அவங்க எல்லாம் MEGA மெம்பெர்ஸ் இல்லை ... நம்புங்க

< கேட்கிறவன் கேனையனாக இருந்தால், கேப்பையில் நெய் வடியுது என்று சொல்லுவானாம்.

அப்போ நம் நகரில் இயங்கிவரும், சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்பில் (KEPA) உள்ளவர்களிடம் அந்த ஆலையின் கழிவுகள் நம் கடலில் கலப்பதற்கு ஆதாரம் இல்லையா? அதுவும் பீலா தானா? > C & P

பரவாயில்லையே ... நெய், தலைப்பு நல்லா, தலையில ஆணி அடிச்சாப்பில, பதிஞ்சிருக்கு, ரொம்ப சந்தோசம் ...

ஆதாரம்ல இருக்கூங்க ... கடல்ல கலக்குராங்கனு ஆதராம்ல இருக்குங்க ... போன வாரம் புதிய தலைமுறை பார்த்தீங்களா ... ஓஹோ, இன்னும் கவுன்சில் மீட்டிங் வீடியோ தான் பார்த்துட்டு இருக்கீங்களோ ... ஓகே ஓகே

முழுசா ஓடையை ஆய்வு செய்றதுக்கு முன்னே, குற்றம் இடத்தில, வேற கைரேகை பட்டுவிடக்கூடாதுன்னு சொல்றோம்க, அம்புட்டுதாங்க ... இத புரிஞ்சிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தாங்க ... புரிய வேண்டியவங்க புரிசிக்குருவாங்க ... அதாங்க, மாசு கட்டுப்பாட்டு வாரியம்

< இந்த உறுப்பினர்களை மிரட்டும் வேலையை இத்தோடு நிறுத்துங்கள். > C & P

நாங்க ஏங்க மிரட்டப்போறோம் ... எங்க கைல போலீசும் இல்ல, எங்களுக்கு வவுந்திடவும் தெரியாதுங்க ...

< அவர்கள் முன்னர்மாதிரி, நகர்மன்றத்தில் வெளிநடப்பு செய்ய மாட்டார்கள். நகரின் நன்மைக்காக நகர்மன்றத்தில் குரல்கொடுப்பார்கள். > C & P

இரண்டு வருஷம் கழிச்சாவது புத்தி வந்திருக்கே ... ரொம்ப சந்தோசங்க ... அது எப்படிங்க, நீங்க ஏதாவது செய்தீங்களா?

< சென்ற மாத கூட்டத்திலும், அதன் பின் நடந்த அவசர கூட்டத்திலும், உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்? தலைவி அதற்கு எவ்வாறு பதில் சொன்னார்கள் என்று, இணையதளங்களில் தணிக்கை செய்யாத வீடியோ காட்சிகள் மூலம் மக்கள் தெரிந்து கொண்டார்கள். தலைவின் நிர்வாக திறமை(?) சாயம் கலைந்து போய்ட்டுதுங்கோ! > C & P

நாங்களும் பார்தொங்க ... யாருடா சாயம் கலைஞ்சுதுன்னு நாங்களும் பார்தொங்க ... நாடகம் நல்லா இருந்திச்சு ... என்னா, 16 நடிகர்கள், வசனம் எல்லாம் ஒன்னு, ரண்டு தான் பேசிச்சு ... கொஞ்சம் போர் தான் ... அடுத்த தடவ, வசனத்தை மத்தவங்களுக்கும் எழுதி கொடுக்க சொல்லுங்க ... அப்புறம், முக்கியம், அந்த டிராமால இந்த சீன பார்த்தீங்களா ... அதாங்க அந்த பத்திரிக்கை விளம்பரம் கமிசன் மேட்டர் ... அது என்னானா, பழக்க தோஷம், கேமரா ஓடிட்டிருக்குன்னு மறந்துட்டாங்கா ... தப்பா ஒன்னும் நினைச்சுக்காதீங்க ... மத்தப்படி ரொம்ப நல்லவங்கா ...

< மக்களும் உஷாராக இருக்காங்கோ. உங்களின் நாடகம் அம்பலமாக போகுதுங்கோ. > C & P

மீடியா உள்ள வந்தா நாங்க வரமாட்டோம் ... இந்த தலைவி கீழ் கூட்டம் நடந்த, நாங்க வரமாட்டோம்னு டயலாக் உட்டவங்க எல்லாம், துரத்னாலும் போக மாட்டோம்னு, அமர்வு ஒன்னு, அமர்வு இரண்டு, அமர்வு மூணுன்னு உக்குருராங்கலே ... அப்பவே நினைச்சேன்,

மக்கள் ரொம்ப உசார், காக்கா, ரொம்ப உசார். இது மக்களாட்சி காலம் ... நாட்டமை எல்லாம், அவங்க அவங்க வீட்டோட தான் ... ராஜா, ராணி கதையெல்லாம், பிள்ளைங்களுக்கு, பேரன்களுக்கு தான் ... மலரும் நினைவுகள் செக்சனுக்கு போய்டணும் ... இனி புது பாடல் தான் ... ஏமாந்த காலம் எல்லாம், மலை ஏறிடுச்சு ... இன்ஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by Rilwan (Austin,TX) [27 October 2013]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 31014

முன்னாள் நகர் மன்ற தலைவர் வெறும் ஐந்து லட்சம் ரூபாய்க்காக தன் நிலத்தை தள்ளிவிட திட்டம் போடுகிறார் என்பது நம்ப முடியவில்லை... நகர் மன்ற உறுப்பினர்களை விடுங்கள்.... அவர்களை பற்றிய என் அபிப்பிராயம் உங்கள் அபிப்பிராயதைவிட மாறுபட்ட தில்லை... biogas accidents நிறைய்யவே ஊடகங்களில் வெளி வந்துள்ளது..

http://www.indiatvnews.com/news/india/two-labourers-killed-in-maharashtra-gas-explosion-19667.html

http://www.hindu.com/2009/08/27/stories/2009082761930100.htm Beginners guide to biogas -

http://www.adelaide.edu.au/biogas/safety/

தடித்த வார்த்தைகளை கொண்டு பதில் எழுதினால் உண்மை ஆகிவிடாது. அவரிடம் பேசினேன் இவரிடம் பேசினேன் என்பதற்கு பதில் ஏன் ஆபத்து இல்லை என்பதை விளக்கமாக கூரியிரிக்க வேண்டும்...நீங்கள் பேசிய நபர் ஏன் ஆபத்து இல்லை என்பதற்கு விளக்கம் என்ன கூறினார் என்பதை பகிர்ந்திருக்க வேண்டும்.. மாறாக அவற்றை உங்களுக்குள் வைத்து கொண்டுவிட்டு --- நான் சொல்லிவிட்டேன்.. எல்லாரும் நம்பியே ஆகவேண்டும் -- என்பது தான்தோன்றித்தனம்.

எனக்கு பிடிக்காதவர்கள் எது செய்தாலும் குற்றம் என்ற பாணியில் எழுதுவது சிறுபிள்ளைத்தனம். வீணாக மல்லாந்து படுத்துக்கொண்டு வானத்தை நோக்கி துப்பவேண்டாம்.

மற்ற சர்வே எங்களால் ஆபத்து இல்லை என்பதை விளக்க வேண்டியது மேகாவின் கடமை.

மெகா ஒரு பக்க நன்மையையும் ஒரு பக்க தீமையையும் மட்டும் சொல்லியிருப்பதை விரிவு படுத்தி இரு பக்கங்களின் நன்மை தீமைகளையும் அலச வேண்டும்...

கண்டிப்பாக என் வீட்டு பின்பக்கத்தில் biogas அமைய நான் அனுமதிக்க மாட்டேன்.. நீங்கள் எப்படி? நீங்கள் கூறும் அந்தந்த பகுதி மக்கள் ஆதரிக்கும் இந்த திட்டத்தை பற்றி அந்தாத பகுதி மக்கள் நன்மை தீமை அறிவார்களா? இல்லை என்று கூற வர வில்லை.. பாதுகாப்பு பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டதா? அந்த பகுதி மக்களின் அன்றாடம் உபயோகிக்கும் இடங்கள், அவர்களின் குழந்தைகள் விளையாடும் இடங்கள் பாதுகாப்பான தொலைவில் இருக்கிறதா? இதல்லாம் கூட மெகா விவரமாக சொல்லி இருக்க வேண்டும்.

சரி... முன்னாள் தலைவரின் நிலத்தில் இதை நிறுவினால் வரும் நட்டங்கள் என்ன? ஐந்து லட்சம் என சொல்ல வேண்டாம்.. cost is recoverable in a year and there could perpetual gain. இந்த திட்டம் உபயோகம் இல்லாம் போயி விடுமா?

விளக்கங்கள் தான் கேட்கிறேன்... குற்றம் சொல்ல வில்லை... மேகவினால் குடுக்கப்பட்ட விளக்கம் பத்தாது. மற்றும்.. முன்னாள் தலைவர் இடத்தில தான் இந்த திட்டம் வரவேண்டும் என்பதும் என் ஆசை இல்லை...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by Hameed Rifai (Kayalpatnam) [27 October 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 31016

< MEGA’s intention may be right. But no one will accept a biogas plant and a solid waste dumpsite at his back yard. > C & P

< It did not require high technical knowledge to understand the health hazards around a solid waste dump. If someone got a proper and sensible nose, he can feel the stench around the dumpsite. Guys who advocate the site near residential area should try to shift their houses near these facilities or at least try to find a location for this facility at their back yard. > C & P

சகோதர் அபு ரஸ்தா அவர்களுக்கு, குப்பைக்கொட்டும் இடத்தையும், பயோ காஸ் இடத்தையும் - ஒரே இடத்தில், அமைக்க MEGA ஆதரவு தெரிவிக்கவில்லை. தயவு செய்து பிரசுரத்தை மீண்டும் படிக்கவும்.

மாறாக பயோ காஸ் திட்டம் இடம், ஊருக்கு மிகவும் ஒதுங்கியில்லாமல், அதில் உருவாகும் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டிய தெரு விளக்குகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு அருகாமையில் இது அமைய வேண்டும் என்று வல்லுனர்கள் கூறுவதையே பிரசுரம் எடுத்து கூறியுள்ளது. இதற்கு காரணம் விநியோக இழப்பை குறைப்பதற்கே.

அது போன்ற இடம் தான், சர்வே எண் 392/5. அந்த இடத்தை நேரில் பார்த்துள்ளதால் இதனை நான் கூறுகிறேன். அதற்கு அருகில் - நீண்ட தூரத்திற்கு எந்த குடித்தனமும் இல்லை. ஆனால் சாலை வசதி உண்டு, மின் விளக்குகள் உண்டு. எனவே - அரசின் குறிக்கோளை (நகராட்சிக்கு மின்சார செலவு சேமிப்பு), குறைந்த செலவில் நிறைவேற்ற இந்த இடம் சாத்தியமானது என்று மாவட்ட ஆட்சியரும், இதர அதிகாரிகளும் கூறியுள்ளனர்.

அது மட்டும் அல்ல, மாற்று கருத்துக்கொண்ட உறுப்பினர்களும் - இந்த இடத்தை எதிர்க்க காரணம், அந்த நிலத்தின் ஓர் பகுதியில் மயானம் அடக்கப்படுகிறது என்பது தான். இந்த இடம் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கிறது என்று அல்ல.

இந்த இடத்தை தவிர, இது போன்ற இடங்கள், பல புறம்போக்கு நிலங்கள் நகராட்சியில் உள்ளது.

< The first biogas plant of the Pune Municipal Corporation (PMC) commissioned in 2010 as a solid waste management measure is making too much wrong noises. > C & P

எந்த புது திட்டங்களையும் மேற்கொள்ளும் போது, பாதுக்காப்பினை நாம் கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் - நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள, ஒரு செய்தியை மட்டும் கொண்டு, பயோ காஸ் திட்டம் கூடாது என்று முடிவெடுக்க தாங்கள் வலியுறத்தவில்லை என நம்புகிறேன்.

விதிமுறைகளுக்கு உட்பட்டு, சரியான முறையில் பயோ காஸ் திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆபத்துக்கள் அரிதாக்கப்படலாம் என்பதை தாங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

அவ்வாறு சரியான இடத்தில், சரியான முறையில், இந்த திட்டம் அமைக்கப்பட்டு, முறையாக இயக்கப்பட்டால் எவரும் எதிர்க்கப்போவதில்லை.

தற்போது தமிழக அரசு ஒவ்வொரு நகராட்சியாக அறிமுகம் செய்துவரும் பயோ காஸ் திட்டத்திற்கு முன்னோடியாக - ஆற்காடு நகராட்சி இத்திட்டத்தை 2011-12 லேயே மக்களின் நிதி பங்களிப்பு கொண்டு, தன்னிறைவு திட்டம் மூலம் - நிறைவேற்றியது.

அதனை முன்னோடியாக கொண்டே தமிழக அரசு - பிற நகராட்சிகளில் (இதுவரை 20) இத்திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது.

< DCW got clearance from TNPCB and other government bodies for their industry, still why you guys are behind that. Do you think you are much smarter than them or you feel what TNPCB did is based on wrong judgment? > C & P

DCW பிரச்சனையோடு, இதனை இணைப்பது சரியாக தெரியவில்லை. மாசு கட்டுபாட்டு வாரியம் விதிகளை DCW தொழிற்சாலை பின்பற்றாததும், அதனை முறையாக கண்காணிக்காததும் தான் பிரச்சனையே தவிர - மாசு கட்டுபாட்டு வாரியத்தின் விதிமுறைகளில் பிரச்னை அல்ல.

தயவு செய்து மீண்டும் பிரசுரத்தை படிக்கவும்.

< சரி... முன்னாள் தலைவரின் நிலத்தில் இதை நிறுவினால் வரும் நட்டங்கள் என்ன? ஐந்து லட்சம் என சொல்ல வேண்டாம்.. cost is recoverable in a year and there could perpetual gain. இந்த திட்டம் உபயோகம் இல்லாம் போயி விடுமா? > C & P

சகோதரர் ரில்வான் அவர்களுக்கு,

முன்னாள் தலைவரின் இடம் (278) பயோ காஸ் திட்டத்திற்கு பொருத்தமில்லை என்பதை தாங்கள் அந்த இடத்தை பார்த்தால் கூறலாம். இதனை தான் - சென்னையில் இருந்து பார்த்த நகராட்சி நிர்வாகத்துறை SUPERINTENDING ENGINEER மற்றும் மாசு கட்டு பாட்டு வாரியத்தின் அதிகாரி ஆகியோர் கூறினர்.

தாங்கள் - இந்த இடத்தை GOOGLE MAP கொண்டு பாருங்கள். இடத்தின் தன்மை தெரியும். பல ஏக்கர் காலியான இடத்தின் வடக்கோடியில் இந்த இடம் உள்ளது. இங்கிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து, தெருவிளக்குகளுக்கு பயன்படுத்துவது சாத்தியம் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. சர்வே எண் 392/5 எதிர் கேள்வி & என் கேள்வி
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [28 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31035

1958-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சர்வே எண் 392/5 பற்றிய தீர்மானம் பற்றி நான் கொடுத்த விளக்கம் மற்றும் கேள்வி பற்றி சகோதரர் அப்துல் வாஹித் அவர்களின் எதிர்கேள்வியில், நான் அதற்கு ஆதாரம் தர வேண்டுமாம்.

நான் கேட்டது, தீர்மானம் நிறைவேற்றிய, MKT அப்பா அவர்களே, அந்த தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் 7 ஆண்டுகள் தலைவர் பதவியில் இந்த தீர்மானத்தை செயல்படுத்தவில்லையே? .அதற்கு இவர் கொடுக்கும் காரணம், "ஒரு வேலை அந்த குறிப்பிட்ட இடத்தில் குப்பை கொட்டுவதற்கு அப்போது அவசியம் ஏற்படாமலிருந்திருக்கலாம் அல்லவா ? " (C&P)

அவசியம் ஏற்படாமல் இருக்கும்போது, எதற்கு ஒரு தீர்மானம்? இந்த 55 ஆண்டுகளிலும் குப்பை கொட்ட அவசியம் ஏற்படவில்லையோ? அடுத்து, தம்பி அப்துல் காதிர் உடைய கருத்து, "காலம் சென்ற தலைவர்களும், படைத்த இறைவனும் மட்டுமே அறிவான்... இந்த இடத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப் படக் கூடாது என்று,அந்தத் தலைவர்களுள் எவரேனும் சொன்னார்களா?" (C&P)

இன்னும் உயிருடன் இருக்கும் தலைவர்கள் உங்கள் தலைவியையும் சேர்த்து, 4 பேர்கள். அதில் மற்ற 3 முன்னாள் தலைவர்களிடமும் கேட்டு பதில் தரவும். உங்கள் தலைவி ஆட்சியில் இருக்கும் இந்த 2 ஆண்டுகள் அந்த தீர்மானத்தை வைத்து என்ன செய்து கொண்டு இருந்தார்? என்று கேளுங்கள். தக்க பதில் தருவார்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. சர்வே எண் 278 பற்றிய மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [28 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31048

தம்பி அப்துல் காதிர், உங்களின் மாவட்ட ஆட்சியரின் கருத்துப் பற்றி, இந்த இணையத்தளம், தன் கருத்தையோ, அவர் சொன்னார் இவர் சொன்னார் என்றோ போடவில்லை. மாறாக மாவட்ட ஆட்சியரின் குறிப்புகளை வரிக்கு வரி பதிந்துள்ளது. எப்படி சர்வே எண் 392/5, 334/1, 334/2, 334/12 & 334/15 -ளுக்கு பரிந்துரை செய்துள்ளாரோ, அதே போல் சர்வே எண் 278 பற்றிய பரிந்துரைகளை பார்போம். காயல்பட்டினம் தென்பாகம் வருவாய்க் கிராமத்தில், நில அளவை எண் 278இல் உள்ள தனிநபர் பட்டா நிலம் திடக்கழிவு மேலாண்மைக்காக இனாமாகப் பெற வாய்ப்புள்ளதாக நகராட்சி தலைவியால் கூறப்பட்டதால் தலம் பார்வையிடப்பட்டது. >> மேற்படி நிலமானது நகர்ப்புறத்திலிருந்து சுமார் 4.00 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

>> கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

>> மேற்படி நிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நிலவியல் பாதை உள்ளது.

>> மேற்படி நிலத்தில் திட்ட செயல்பாட்டிற்காக 25.00 அளவுள்ள நிலப்பரப்பு குறைந்த அளவு விலை நிர்ணயத்தொகை அடிப்படையில் வழங்க சம்மதிப்பதாக சம்பந்தப்பட்ட நில உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டது.

>> மேற்படி 25.00 சென்ட் அளவுள்ள நிலத்தினை தானமாகப் பெறுவதற்கு நகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

>> மேற்படி நிலப்பரப்பு கடற்கரை பகுதியினை ஒட்டி அமைந்துள்ளதால் “கடற்கரை மேலாண்மைப் பகுதி” வரையறைக்குள் (CRZ) அமையப்பெறாவண்ணம் திட்ட செயல்பாட்டிற்கான நிலம் தெரிவு செய்யப்படலாம். (Action: நகராட்சி ஆணையாளர், காயல்பட்டினம்) .

>> மேற்கண்ட மூன்று இடங்களிலிருந்து காயல்பட்டினம் நகராட்சியில் செயல்படுத்தப்பட உள்ள திடக்கழிவு மேலாண்மை, எரிவாயு உற்பத்தி செய்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்காக சுமார் 25.00 சென்ட் அளவுள்ள நிலப்பகுதி தெரிவு செய்து நகர்மன்றத் தீர்மானம் நிறைவேற்ற நகராட்சி ஆணையரால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

(Action: நகராட்சி ஆணையாளர், காயல்பட்டினம்) (C&P)

காய்தல் உவப்பு இன்றி, இந்த குறிப்புகளை மீண்டும் படிக்கவும். மாவட்ட ஆட்சியர், இந்த நிலத்தை நிராகரிக்கவில்லை, மாறாக திட்ட செயல்பாட்டிற்கான நிலம் தெரிவு செய்யப்படலாம் என்று பரிந்துரை செய்கிறார். அந்த நிலத்தில் அந்த plant வருவதற்கு தகுதியற்றதாக இருந்தால், தானமாகப் பெறுவதற்கு நகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பு அனுப்புவாரா? அவர் அந்த நிலத்தை ஆய்வு செய்தபின் இந்த குறிப்பை அனுப்புகிறார். அவருக்கும் தெரியும் 4 கி.மீ தூரத்தில் இருக்கிறது, கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது என்று. அதை குறிப்பிடவும் செய்கிறார்.

1 கி.மீ தூரம் மட்டுமே சாலை மற்றும் மின்சார வசதி செய்ய வேண்டும். உங்களின் வெறுப்பு, அந்த 1 கி.மீ -க்கும் நம் நகராட்சி நிதியில் இருந்து ஏன் செலவழிக்க வேண்டும்? நான் கேட்பது நமதூர் சாலைகள் அனைத்தும் நம் நகராட்சி நிதியில் இருந்தா போடப்பட்டது? எத்தனை சாலைகள். MLA / MP தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து போடப்பட்டிருக்கிறது? ஒரு திறமையான தலைவியாக இருந்தால், நம் MLA/MP ஆகியோரிடம் முறையிட்டு அதை பெறலாம். முறையிட்டால் தானே கிடைக்கும். இப்பொது ஆளும்கட்சியில், அதுவும் முதல்வர் முன்னிலையில் சேர்ந்து விட்டார். மாவட்ட மந்திரியின் ஆதரவு உள்ளது. அதை வைத்து இந்த 1 கி.மீ சாலையை போடமுடியாதா?

நம் மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்துள்ள 3 இடங்களில் ஒன்றான இந்த சர்வே எண் 278-ஐ பரிந்துரைத்து, நமது நகர்மன்றத்தில், தலைவி மற்றும் 13-ம் வார்டு உறுப்பினர் நீங்கலாக ஏனைய 16 உறுப்பினர்களும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

இந்த திட்டம் நமது நகரில் நிறைவேற்றப்படுமா அல்லது அந்த நிதி அரசுக்கு திருப்பி அனுப்பப்படுமா? என்பது தலைவின் கையில் உள்ளது.

-- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. உங்கள் நிலம் விலையேற வேண்டுமா? குப்பை கொட்டும் இடம் அருகில் வாங்கவும்
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [28 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31050

MEGA -வின் அற்புதமான கண்டுபிடிப்பு.

மக்களே! உங்கள் நிலங்கள் பன்மடங்காக விலையேற்றம் பெற வேண்டுமா? குப்பை கொட்டும் இடத்திற்கு அருகில் வாங்கவும். Courtesy: MEGA, Kayalpatnam. இது நாள் வரை, இந்த அமைப்பினரும், தலைவியின் ஆதரவாளர்களும் சொல்லும் முக்கிய காரணம், 'இச்செலவுகளால், யார் பயனடைய போகிறார்கள்? பொதுமக்களா அல்லது இப்பகுதியில் நிலம் வைத்துள்ள நிலமுதலாளிகளா? மக்கள் வரிப்பணத்தில் சாலைகள், மின்வசதிகள் ஏற்படுத்திக்கொடுத்து அங்குள்ள நிலங்களின் விலையை பன்மடங்கு உயர்த்துவது.... (C&P)

கொஞ்சம் நிதானித்து யோசியுங்கள். நம் வீடு / நிலங்களுக்கு, முன்பு அல்லது அருகில் ஒரு பெரிய வணிக வளாகம், ரயில்வே ஸ்டேஷன், பஸ் நிலையம், ஏதாவது அரசு அலுவலகம், பள்ளிக்கூடம், கல்லூரி, என்று மக்கள் அதிகம் கூடும் இடமாக இருந்தால் நிலத்தின் விலை கூடுமா?

அல்லது இதுபோன்று குப்பை கொட்டும் இடம், சாக்கடை, கூவம் ஆகியவற்றிற்கு அருகில் இருந்தால் நிலத்தின் மதிப்பு கூடுமா? சற்று யோசியுங்கள் மக்களே! நம் கட்டிடத்திற்கு முன்பு மக்கள் பயன்படுத்தும் மேம்பாலம் இருந்தாலே அந்த இடத்தின் மதிப்பு குறைவுதான் என்று சாமானியனும் சொல்லுவான். அப்படியிருக்க குப்பை கொட்டும் இடம் அங்கு வந்தால், அங்குள்ள நிலத்தின் மதிப்பு கூடுமாம். புத்தி உள்ளவர்கள் சிந்திப்பார்கள்.

1 கி.மீ தூரம் மட்டுமே சாலை மற்றும் மின்சார வசதி செய்ய வேண்டும். உங்களின் வெறுப்பு, அந்த 1 கி.மீ -க்கும் நம் நகராட்சி நிதியில் இருந்து ஏன் செலவழிக்க வேண்டும்? நான் கேட்பது நமதூர் சாலைகள் அனைத்தும் நம் நகராட்சி நிதியில் இருந்தா போடப்பட்டது? எத்தனை சாலைகள். MLA / MP தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து போடப்பட்டிருக்கிறது? ஒரு திறமையான தலைவியாக இருந்தால், நம் MLA/MP ஆகியோரிடம் முறையிட்டு அதை பெறலாம்.இப்பொது ஆளும்கட்சியில், அதுவும் முதல்வர் முன்னிலையில் சேர்ந்து விட்டார். மாவட்ட மந்திரியின் ஆதரவு உள்ளது. முறையிட்டால் தானே கிடைக்கும். அதை வைத்து இந்த 1 கி.மீ சாலையை போடமுடியாதா?

-- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Attn.: அப்துல் ரசாக் லுக்மான் அவர்கள்
posted by Hameed Rifai (Kayalpatnam) [28 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31051

பக்கம் பக்கமாக கேள்வி கேட்டுள்ளீர்கள்.

அந்த நிலத்தில் அந்த plant வருவதற்கு தகுதியற்றதாக இருந்தால், தானமாகப் பெறுவதற்கு நகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பு அனுப்புவாரா? (C&P)

எந்த அரசு அதிகாரியும், சுக்கு கண்ட இடத்தில் பிள்ளை பெற மாட்டார்கள். அதுபோல்தான் மாவட்ட ஆட்சியரும்.

மயான புறம்போக்கு இடத்தை ஆய்வு செய்யும்போது உறுப்பினர் சாமி அவர்கள் அந்த இடம் குறித்து தனது ஆட்சேபணையைக் கூறியபோதெல்லாம், அவற்றுக்கு அங்கேயே பதிலளித்த ஆட்சியர், அந்த பதில்களையெல்லாம் அறிக்கையில் தெரிவிக்கவில்லை. மாறாக, அவரது பொறுப்பிற்கு உட்பட்டே வாசகங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற விஷயங்களில் அவருக்கு சரியான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது இதர அதிகாரிகள்தான். அப்படி வந்த அதிகாரிகள்தான் இந்த இடம் தகுதியில்லை என வெளிப்படையாகவே கூறிச் சென்றுள்ளனர். அதன்படி அறிக்கையையும் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் அளித்தால், இதில் வேறு பேச்சுக்கு இடமேயில்லை.

அது சரி.... அது என்ன, எம்பிய பாக்க மாட்டாங்களா? அமைச்சர பாக்க மாட்டாங்களா-ன்னு இப்ப புதுப் புலம்பல்? பார்க்க வேண்டிய அவசியம் இப்ப என்ன வந்துவிட்டது? உங்களுக்கு ஒரு கேள்வி:

பெருங்கொண்ட முதல் போட்டு ஒரு கம்பெனியை ஆரம்பிக்க நாடுகிறீர்கள். அதற்குத் தகுதியான இடம் உங்களுக்கு சொந்தமாகவே இருக்க, வேறு இடத்தைப் பரிசீலிப்பீர்களா? உங்களுக்கு எப்படியோ, அப்படியே ஊருக்கும் நினைக்கவும்.

இத்திட்டங்களை செயல்படுத்தத் தகுதியான புறம்போக்கு நிலங்களே நமதூருக்கு இல்லை என்று முடிவு வரட்டும். அதற்குப் பிறகு ஹாஜியார்களைப் பார்ப்பது பற்றி பரிசீலிக்கலாம்.

மொட்டைத் தலைக்கு எத்தனை வகையான பூவெல்லாம் சூட??? ஆசைய பாருங்களேன் ஆசைய...? காக்காக்கு ஒரே தமாஷ் பண்றதுதான் கொஞ்ச நாளா வேலையாகப் போச்சு!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. KEPA வை அவமானப்படுத்தும் MEGA
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [28 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31052

தம்பிமார் அப்துல் காதிர் மற்றும் ஹமீத் ரிபாய் ஆகியோர், நான், KEPA செயல்பாடுகள் பற்றியும், அந்த நச்சு ஆலையின், மாசு கட்டுப்பாடு முறைகேடுகள் பற்றி, KEPA எடுத்த தன்னலமற்ற தியாகங்களை கொச்சை படுத்துவதாக கருத்து பதிந்துள்ளீர்கள். KEPA- வை கொச்சைப் படுத்தியது நானா? அல்லது உங்கள் பிரசுரம்/ தம்பி ஹமீத் ரிபாய் ஆகியோரின் கருத்தா?

உங்களின் பிரசுரம் மற்றும் தம்பி ஹாமீத் ரிபாய் கருத்தை மீண்டும் வாசியுங்கள். "அந்த பகுதில் குப்பை கொட்டினால், அந்த ஓடை மாசுபட இந்த குப்பைதான் காரணம் என்று வருங்காலத்தில் DCW சொல்லுமாம்" (C&P) இது மெகா பிரசுரம்.

"ஆதாரம்ல இருக்கூங்க ... கடல்ல கலக்குராங்கனு ஆதராம்ல இருக்குங்க ... போன வாரம் புதிய தலைமுறை பார்த்தீங்களா. முழுசா ஓடையை ஆய்வு செய்றதுக்கு முன்னே, குற்றம் இடத்தில, வேற கைரேகை பட்டுவிடக்கூடாதுன்னு சொல்றோம்க, அம்புட்டுதாங்க .(C&P).-இது தம்பி ஹாமீத் ரிபாய் உடைய பதிவு.

நான் பதிந்தது, KEPA அமைப்பினர் சென்னை மாசுக் கட்டுப்பாடு தலைமையகத்தில், நமதூர் மக்களை ஒன்று திரட்டி இத்தனை ஆதாரங்கள், ஆய்வறிக்கைகள் சமர்பித்தார்கள். அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். KEPA செயல்வீரர்கள், அவ்வளவு ஆதாரம் கொடுத்த பின்பும், இந்த சர்வே எண்ணில் குப்பை கொட்டும் இடம் வந்தால், வருங்காலங்களில் DCW சொல்லுமாம். இன்னும் முழுவதுமாக ஆய்வு செய்து முடிக்கப் படவில்லையா? சரி, இந்த நிலம் கடலில் இருந்து சுமார் 1 கி.மீ தூரம் இருக்குமா? ஆனால் DCW நச்சு ஆலை அதன் நச்சு அமிலங்களை எங்கிருந்து (எவ்வளவு தூரத்தில்) கலக்கிறது? அல்லது அந்த நச்சு ஆலை வெளியிடும் அமிலங்கள் எந்த இடத்தில் இருந்து நச்சுத்தன்மையாக மாறுகிறது? என்ற அனைத்து விபரங்கள் KEPA -விடம் ஆதாரத்தோடு இருக்கும்போது, MEGA -வின் அறிக்கை மற்றும் தம்பி ஹமீத் ரிபாயின் கருத்து KEPA வை கொச்சை படுத்துவதாக இல்லையா? கேட்க நகைப்பாக இல்லையா? MEGA வின் ஆதாயத்துக்காக KEPA வை பலிக்கிடா ஆக்காதீர்.

-- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by Salai S Nawas (Singapore) [29 October 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 31059

ஒரு நல்லது சொன்னா கேட்கணும், அது உங்களுக்கு புடிச்சவன் சொன்னா என்னா அல்லது புடிக்காதவன் சொன்னா என்னா. எல்லாவற்றுக்கும் விமர்சனம் என்ற போர்வையில் அதிமேதாவி தனம் காட்டி பல ஆண்டுகளாக அரசின் பல நல்ல திட்டங்களை இழந்துவிட்டு வருகிறோம். இன்றும் அரசியல்வாதிகளாலும் அரசு அதிகாரிகளாலும் ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

உங்கள் இலையில் உணவு இருக்கும் போது ஏன் அடுத்தவன் இலையில் இருக்கும் உணவுக்கு ஏன் ஆசை படனும்? நகராட்சிக்கு சொந்தமான 25 சென்ட் நிலம் இருக்கும் போது, அதை பயன்படுத்த முடியுமா முடியாதன்னு உங்கள் விமர்சனம் இருக்கணுமே தவிர ஒரு நயா பைசாக்கு உதவாத விமர்சனத்தை தவிருங்கள்.

- மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. மாவட்ட ஆட்சியரின் மற்றும் அதிகாரிகளின் குறிப்பு.
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [29 October 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 31060

மயான புறம்போக்கு இடத்தை ஆய்வு செய்யும்போது உறுப்பினர் சாமி அவர்கள் அந்த இடம் குறித்து தனது ஆட்சேபணையைக் கூறியபோதெல்லாம், அவற்றுக்கு அங்கேயே பதிலளித்த ஆட்சியர், அந்த பதில்களையெல்லாம் அறிக்கையில் தெரிவிக்கவில்லை. மாறாக, அவரது பொறுப்பிற்கு உட்பட்டே வாசகங்களைக் குறிப்பிட்டுள்ளார். (C&P)

தம்பி ஹாமீத் ரிபாய் உடைய கருத்து. நீங்களும் நானும் எப்படியும் குறிப்பிடலாம். அதே போல், மாவட்ட ஆட்சியர் உட்பட எந்த அரசு அதிகாரியும் வாய்மொழியாக ஏதும் கூறலாம். ஆனால் அது ஆவணமாக ஆகாது. எதை குறிப்பாக எழுதுகிறார்களோ அதுதான் ஆவணமாகும் என்பது உங்களுக்கும் தெரியும். மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் உறுப்பினர் சாமி அவர்களின் ஆட்சேபனை நிராகிக்கப்படலாம் என்ற குறிப்பையும் அவர் தெரிவித்துள்ளார். அவரின் குறிப்பு கீழ் உள்ளது.

>> ஒவ்வொரு ஜாதிவாரியாக மயானம் அமைப்பதற்கு, இப்பகுதி முழுமையும் மயான பயன்பாட்டிற்காகவே பிற்காலத்திற்குத் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்படும் மன்ற உறுப்பினரின் ஆட்சேபனை நிராகரிக்கப்படலாம். (C&P)

இதுபோன்ற விஷயங்களில் அவருக்கு சரியான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது இதர அதிகாரிகள்தான். அப்படி வந்த அதிகாரிகள்தான் இந்த இடம் தகுதியில்லை என வெளிப்படையாகவே கூறிச் சென்றுள்ளனர். அதன்படி அறிக்கையையும் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் அளித்தால், இதில் வேறு பேச்சுக்கு இடமேயில்லை. (C&P)

தம்பி, உங்களுக்கு ஒன்று தெரியுமா? உச்ச நீதிமன்றத்திலும் கூட, open court- ல் நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துக்கள், தீர்ப்பாக ஆகாது. எது தீர்ப்பாக எழுதப்படுகிறதோ, அதுதான் இறுதி. உதாரணமாக, டான்சி வழக்கில், நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் என்ன? ஆனால், தீர்ப்பு என்ன? என்று உங்களுக்கு தெரியும்.

அதே போல்தான் நீங்கள் குறிப்பிடும் அந்த அதிகாரிகள் வெளிப்படையாக சொன்னெதெல்லாம். அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை அளிக்கட்டும். அளித்தால்...... அத்தைக்கு மீசை முளைக்கட்டும். அது வரை பொறுமையாக இருப்போம்.

இத்திட்டங்களை செயல்படுத்தத் தகுதியான புறம்போக்கு நிலங்களே நமதூருக்கு இல்லை என்று முடிவு வரட்டும். (C&P)

என்னுடைய கருத்தும் தகுதியான அரசு புறம்போக்கு நிலங்கள் இருக்கும்போது வேறு நிலங்கள் தேட தேவையில்லை. ஆனால், 2 திட்டங்களும் ஒன்றாக இருப்பது தான் நமது ஊருக்கு, cost wise நன்மை தரும்.

தலைவி அவர்கள் சொல்லி தான், சர்வே எண் 278-ஐ மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தது, மேலும் 2 திட்டங்களுக்க்ம் சேர்த்துதான் அந்த இடத்தை பரிந்துரை செய்கிறார். மாவட்ட ஆட்சியர் உட்பட ஆய்வுக்கு வந்த எல்லா அதிகாரிகளும் , சர்வே எண் 278-ஐ தவிர மற்ற இடங்கள் bio-gas plant- க்கு மட்டுமே ஆய்வு செய்தனர்.

வாவு செய்யத் அப்துல் ரஹ்மான் ஹாஜி அவர்கள், எனக்கு சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை. அவரின் இடத்தை பற்றி பரிந்துரை செய்ய. அவருக்கும் அதை விற்றுத்தான் பொழப்பை நடத்தனும் என்று அல்லாஹ் அவரை வைக்கவில்லை. அவர் நகரமன்ற தலைவராக இருந்தபோது, தன் கைக்காசை, இந்த நகர்மன்றத்திர்காக செலவழித்தார் என்று, உங்களுக்கு சாதகமான முன்னாள் உறுப்பினர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

இப்போதும் என் இடத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது தருகிறேன் என்று சொல்லவில்லை. மாறாக தலைவி அவர்கள் ஐக்கிய பேரவை உட்பட அனைத்து பொது பல அமைப்புகளுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில், ஐக்கிய பேரவை கேட்டுக் கொண்டதன் பேரில் கொடுக்க முன் வருகிறார். அல்லாஹுக்கு பயந்து, உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். அந்த இடத்தில், 25 ஏக்கரில் வெறும் 5 ஏக்கர் நிலம் மட்டும், குப்பை கொட்ட இடம் அளித்தால், மீதி 20 ஏக்கரில் அவரால் என்ன அபிவிருத்தி பண்ண முடியும்? என்று சொல்லுங்கள்.

நான் கேட்ட நில விலையேற்றம் பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் எதிர்பார்த்து இருக்கிறேன்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை ஏற்கப்பட வேண்டுமா?
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [29 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31062

தம்பி நவாஸ்,

மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை ஏற்கப்பட வேண்டுமா? அல்லது நிராகிக்கபட வேண்டுமா? என்று சட்டத்திற்கு உட்பட்டு, உங்கள் MEGA அமைப்பினர்தான் கூற வேண்டும். தீர்மானம் நிறைவேற்ற வேண்டியது நகராட்சியின் கடமை. நீங்கள் வெறும் ஆலோசனை மட்டுமே கூற முடியும்.

நம் மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்துள்ள 3 இடங்களில் ஒன்றான இந்த சர்வே எண் 278-ஐ பரிந்துரைத்து, நமது நகர்மன்றத்தில், தலைவி மற்றும் 13-ம் வார்டு உறுப்பினர் நீங்கலாக ஏனைய 16 உறுப்பினர்களும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். (C & P )

தலைவி அவர்கள், இந்த தீர்மானத்திற்கு எதிராக, தலைவர் குறிப்பு எழுதினால், அதை முடிவு செய்ய நகராட்சி தலைமையகம் சென்னையில் உள்ளது. அவர்கள் முடிவு செய்வார்கள். அதுவரை நானும் நீங்களும் வாயை பொத்திக் கொண்டு சும்மா இருப்போம். now the ball is in official's court. Let them decide.

எங்கள் விமர்சனம், ஒரு நயா பைசாக்கு உதவாத ஒன்று. ஆனால், நீங்கள் சொல்லுவது மட்டும்தான் ஊருக்கு உதவும் திட்டம்.

நான் கேட்ட நில விலையேற்றம் பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் எதிர்பார்த்து இருக்கிறேன்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved