தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம், சிறுபான்மையின மக்களான இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய, புத்த மதத்தினர் மற்றும் பார்சியர்கள் ஆகியோருக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடன் உதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தகுதிகளை, http://www.thoothukudi.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலும் மேற்கண்ட விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம், திருச்செந்தூர் வட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில், 26.10.2013 அன்று (நாளை) காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறவுள்ளது. மேற்படி முகாமில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் வட்டங்களைச் சேர்ந்த சிறுபான்மையினர் கலந்துகொண்டு,
தொழில் தொடங்க மற்றும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்குமான தனிநபர் கடன்,
சுய உதவிக்குழு உறுப்பினருக்கான கடன்,
கறவை மாடு கடன்,
கல்விக் கடன் உதவித் திட்டங்களைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மையின மக்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களுடன், மேற்கண்ட சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, கடனுதவி பெற்றுப் பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். |