ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், நவம்பர் 22 - முதல் மதுரை - துபாய் மார்கத்தில் விமான
சேவை துவக்கவுள்ளது. இந்த விமானம் மதுரையிலிருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 02:20 மணிக்கு துபாய் அடையும். பின்னர்,
துபாய் இருந்து அதிகாலை 03:50 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு காலை 09:45 மணிக்கு வந்தடையும்.
அறிமுக சலுகைக் கட்டணமாக ஒரு வழிக்கு வெறும் Rs.6,999 (வரிகள் உட்பட) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்று திரும்பும் கட்டணம்
Rs.13,999 (வரிகள் உட்பட) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏற்கனவே டெல்லி, மும்பை, கொச்சி, அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கும் துபாய்க்கும் இடையே விமான
சேவையை மேற்கொண்டுள்ளது. தற்போது இதில் 5வது நகராக மதுரை இணைகிறது.
இந்த மார்க்கத்தில் Boeing 737-800 ரக விமானத்தை ஸ்பைஸ் ஜெட் பயன்படுத்த உள்ளது. இவ்விமானத்தில் 189 இருக்கைகள் இருக்கும்.
தகவல்:
யஹ்யா முஹையதீன்,
துபாய். |