தென்மேற்கு பருவ மழை - இந்திய துணை கண்டம், வங்காள விரிகுடா, அரபிக்கடல் பகுதிகளில் இருந்து முழுமையாக விலகியதை அடுத்து - அக்டோபர் 21 அன்று வடக்கிழக்கு பருவ மழை, தமிழ்நாடு, கேரளா, இம்மாநிலங்களுக்கு ஒட்டிய கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில பகுதிகளில் துவங்கியது.
கடந்த ஆண்டு - அக்டோபர் 19 அன்று வடக்கிழக்கு பருவமழை துவங்கியது நினைவிருக்கலாம். வானிலை மையம் பொதுவாக அக்டோபர் 20 தேதியில் இருந்து 7 நாளுக்கு முன்னரோ அல்லது 7 நாளுக்கு பின்னரோ - எந்த தேதியிலும், வடக்கிழக்கு பருவமழை என கணிக்கிறது.
கடந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழையும், வடக்கிழக்கு பருவமழையும் பொய்த்த நிலையில் இவ்வாண்டு தென் மேற்கு பருவமழை உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. செப்டம்பர் 30 அன்று அதிகாரப்பூர்வமாக தென் பருவ மழைக்காலம் முடிந்த நிலையில், இக்காலக்கட்டத்தில் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் இயல்பான மழை பெய்ததாக அறிவிக்கப்பட்டது.
தற்போது துவங்கியுள்ள வடக்கிழக்கு பருவ மழை காலம், டிசம்பர் இறுதிவரை நீடிக்கும். இக்காலக்கட்டத்தில் இந்தியா முழுவதும் இயல்பான மழையும், தமிழகத்தில் இயல்பை விட கூடுதலான மழையும் கணிக்கப்பட்டுள்ளது. |