54வது சுப்ரதோ கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் புது டில்லியில் செப்டம்பர் 27 அன்று துவங்கின.
மூன்று பிரிவுகளாக (சப்-ஜூனியர் ஆண்கள், ஜூனியர் பெண்கள், ஜூனியர் ஆண்கள்) நடைபெற்ற இப்போட்டிகள் - அக்டோபர் 19 அன்று நிறைவுற்றது.
தமிழகம் சார்பாக 17 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் ஆண்கள் பிரிவு போட்டிகளில் பங்கேற்ற எல்.கே.மேல்நிலைப்பள்ளி அணி - தான் பங்கேற்ற 3 போட்டிகளில் ஒரு போட்டியை சமம் செய்து, இரு போட்டிகளில் தோல்வியை தழுவியது.
ஜூனியர் பிரிவில் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெற்ற அணி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது.
காலிறுதி போட்டிகள்
முதல் காலிறுதி போட்டி [8-10-2013]
ARMY BOYS, Patna (A பிரிவு வெற்றிப்பெற்ற அணி) [1] - NCC (West Bengal & Sikkim) (B பிரிவு வெற்றிப்பெற்ற அணி) [0]
இரண்டாம் காலிறுதி போட்டி [8-10-2013]
Om Rai Memorial High School, Meghalaya (C பிரிவு வெற்றிப்பெற்ற அணி) [2] - BSL High School, Bokaro Steel City, Bokaro, Jharkhand (D பிரிவு வெற்றிப்பெற்ற அணி) [0]
மூன்றாம் காலிறுதி போட்டி [13-10-2013]
Chandigarh (E பிரிவு வெற்றிப்பெற்ற அணி) [4] - Rev. Saiaithanga Memorial School, Mizoram (F பிரிவு வெற்றிப்பெற்ற அணி) [6]
நான்காம் காலிறுதி போட்டி [15-10-2013]
Magurmari High School, Assam (G பிரிவு வெற்றிப்பெற்ற அணி) [4] - Troschnina, Ukraine (H பிரிவு வெற்றிப்பெற்ற அணி) [1]
அரையிறுதி போட்டிகள்
முதல் அரையிறுதி போட்டி [12-10-2013]
ARMY BOYS, Patna (A பிரிவு வெற்றிப்பெற்ற அணி) [0] - Om Rai Memorial High School, Meghalaya (C பிரிவு வெற்றிப்பெற்ற அணி) [3]
இரண்டாம் அரையிறுதி போட்டி [17-10-2013]
Rev. Saiaithanga Memorial School, Mizoram (F பிரிவு வெற்றிப்பெற்ற அணி) [0] - Magurmari High School, Assam (G பிரிவு வெற்றிப்பெற்ற அணி) [1]
அக்டோபர் 19 அன்று நடந்த இறுதி போட்டியில் - மாகுர்மாரி உயர் பள்ளி, அஸ்ஸாம் அணி, ஓம் ராய் நினைவு மேல்நிலைப்பள்ளி, மேகாலயா அணியை எதிர்த்து விளையாடியது. 3 - 0 என்ற கோல் கணக்கில் ஓம் ராய் நினைவு மேல்நிலைப்பள்ளி, மேகாலயா அணி வெற்றிபெற்று, சுப்ரதோ கோப்பையை தட்டி சென்றது.
கோப்பையை வென்ற மேகாலையா அணியும், காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளி அணியும், ஒன்றாக C பிரிவில் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
|