காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில், கடந்த 2012-13 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்று முடித்த மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா இம்மாதம் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் இவ்விழாவில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு மடிக்கணினி வினியோகத்தைத் துவக்கி வைத்தார்.
பள்ளி தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை, தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், பள்ளி அமைந்துள்ள 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பள்ளியின் துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.டி.இப்றாஹீம், பொதுநல ஆர்வலர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினர்.
|