காயல்பட்டினம் நகராட்சியில் தற்போது நிறைவேற்றப்பட்டு வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்ய சென்னை நகராட்சி நிர்வாகத்துறை அலுவலகத்தில் இருந்து SUPERINTENDENTING ENGINEER பூபதி, அக்டோபர் 19 (சனிக்கிழமை) அன்று காயல்பட்டினம் வந்தார்.
காயல்பட்டினம் வரும்முன் - காயல்பட்டினத்தில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள, பொன்னன்குறிச்சியில் தற்போது நடைபெற்று வரும் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான, குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் காயல்பட்டினம் வந்த பொறியாளர் பூபதி, கீழ லட்சுமிபுரத்தில் நடைபெற்றுவரும் உயர்நிலை நீர் தேக்கப்பணிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து IUDM திட்டத்தின் கீழ் 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்பட்டு, முறைக்கேடு காரணமாக தற்போது நின்றிருக்கும் நெய்னார் தெரு சாலைப்பணியினை - பூபதி ஆய்வு செய்தார்.
பின்னர் தமிழக அரசின் 90 லட்ச ரூபாய் மதிப்பிலான பயோ காஸ் திட்டத்திற்கான இடம் மற்றும் நகரில் உருவாகும் குப்பைகளை கொட்டுவதற்கான இடம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய - சர்வே எண்கள் 392/5 மற்றும் 278 ஆகிய பகுதிகளை பூபதி பார்வையிட்டார்.
சர்வே எண் 392/5 (மொத்த இடம்: 7 ஏக்கர், 54 சென்ட்) பகுதியில் மயானத்திற்கு பயன்படுத்தப்பட்ட இடங்களை தவிர, மீதி இடங்கள் குறித்த விபரத்தை வரைப்படங்களுடன், சென்னை நகராட்சி நிர்வாகத்துறை அலுவலகத்திற்கு உடனடியாக அனுப்பும்படி காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளருக்கு பூபதி அறிவுறுத்தினார்.
சர்வே எண் 278 இடத்தை பார்வையிட்ட பொறியாளர், இந்த இடம் தனியார் வசம் உள்ளதால் திட்டப்பணிகளை இங்கு அமல்படுத்த சில சிக்கல்கள் உள்ளன என தெரிவித்தார்.
தொடர்ந்து நகரின் சந்தைகளை பொறியாளர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக், மண்டல பொறியாளர், நகராட்சி ஆணையர் ஜி.அசோக் குமார், நகராட்சி பொறியாளர் சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
படங்கள்:
ஏ.கே. இம்ரான் |