காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் விளையாட்டு விழா மற்றும் ஆண்டுவிழா குறித்து விழிப்புணர்வேற்படுத்தும் மாரத்தான் குறுநீள் ஓட்டப்போட்டி, இம்மாதம் 05ஆம் தேதி காலையில் நடைபெற்றது.
அப்பள்ளியின் 06 முதல் 08ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 09 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மற்றொரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றது.
முதற்பிரிவில் 140 மாணவர்கள் பங்கேற்றனர். காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளர் ஹாஜி பி.எஸ்.எம்.இல்யாஸ் கொடியசைத்து அப்போட்டியைத் துவக்கி வைத்தார்.
காயல்பட்டினம் ஐசிஐசிஐ வங்க முனையிலிருந்து புறப்பட்ட வீரர்கள், தைக்கா தெரு, காட்டு தைக்கா தெரு, குத்துக்கல் தெரு, குறுக்கத் தெரு, ஆஸாத் தெரு, ஸீ-கஸ்டம்ஸ் சாலை, மரைக்கார் பள்ளித் தெரு, நெசவுத் தெரு, வீரசடைச்சியம்மன் கோயில் தெரு, சந்தனமாரியம்மன் கோயில் தெரு வழியாக காயல்பட்டினம் பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தனர்.
இப்போட்டியில், அப்பள்ளியின் 06ஆம் வகுப்பு மாணவர் ஷகீல் முதலிடத்தையும், 08ஆம் வகுப்பு மாணவர் அப்துல் ஷுக்கூர் இரண்டாமிடத்தையும், 08ஆம் வகுப்பு மாணவர் ஹரிஹரன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
07ஆம் வகுப்பு மாணவர்களான அஃப்ஸல் நான்காமிடத்தையும், முஹ்யித்தீன் ஐந்தாமிடத்தையும், அபூபக்கர் தய்யிப் ஆறாமிடத்தையும் பெற்றனர்.
09ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்ற மற்றொரு பிரிவிற்கான மாரத்தான் போட்டியை, பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
காயல்பட்டினம் கடற்கரையில் புறப்பட்ட போட்டியாளர்கள், சித்தன் தெரு, நெய்னார் தெரு, காட்டு தைக்கா தெரு, புறவழிச்சாலை, பேயன்விளை குறுக்குச் சாலை வழியாக கே.ஏ.மேனிலைப்பள்ளி பகுதி, அங்கிருந்து எல்.எஃப்.ரோடு வழியாக மகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவில் போட்டியை முடித்துக்கொண்டது.
இப்போட்டியில், அப்பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவர் பஸ்ஸாம் முதலிடத்தையும், 09ஆம் வகுப்பு மாணவர் நஸீர் அஹ்மத் இரண்டாமிடத்தையும், அதே வகுப்பு மாணவர் அபூ மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
10ஆம் வகுப்பு மாணவர் இர்ஃபான் நான்காமிடத்தையும், 09ஆம் வகுப்பு மாணவர் காமில் ஐந்தாமிடத்தையும், அதே வகுப்பு மாணவர் புகாரீ ஆறாமிடத்தையும் பெற்றனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை, எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் தலைமையில், அப்பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
படங்கள்:
ஆசிரியர் அஹ்மத் மீராத்தம்பி |