காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் இயங்கி வரும் அல்மத்ரஸத்துன் நஸூஹிய்யா சார்பில், தமிழகம் தழுவிய அளவில், திருக்குர்ஆன் மனனப் (ஹிஃப்ழுப்) போட்டி, வரும் டிசம்பர் மாதம் 28, 29, 30 தேதிகளில் (சனி, ஞாயிறு, திங்கள்) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக, இம்மாதம் 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற முதற்கட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தின்போது, 15 பேர் கொண்ட ஏற்பாட்டுக் குழு நியமிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இம்மாதம் 24ஆம் தேதியன்று (நேற்று) இரண்டாவது கலந்தாலோசனைக் கூட்டத்தில், நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கு துறைவாரியாக பொறுப்புகளைப் பிரித்து, அவற்றுக்கென பொறுப்பாளர்கள் உத்தேசமாக இனங்காணப்பட்டனர். அதுகுறித்து இறுதி முடிவு செய்வதற்கான கலந்தாலோசனைக் கூட்டம், இன்று காலை 10.30 மணியளவில் காயல்பட்டினம் நெய்னார் தெருவிலுள்ள ஹாஜி எம்.எம்.உவைஸ் இல்லத்தில், அவரது தலைமையில் நடைபெற்றது.
‘முத்துச்சுடர்’ ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
சில மணித்துளிகள் கலந்தாலோசனைக்குப் பின், துறைவாரியாக பொறுப்பாளர்கள் பின்வருமாறு இறுதி செய்யப்பட்டு, நியமிக்கப்பட்டனர்:-
ஆலோசனைக் குழு:
(01) அல்ஹாஜ் எம்.எம்.உவைஸ்
(02) அல்ஹாஜ் ஏ.ஆர்.அப்துல் வதூத்
(03) மவ்லவீ அல்ஹாஜ் எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ
(04) மவ்லவீ அல்ஹாஜ் எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ
(05) மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ
(06) மவ்லவீ ஹாஃபிழ் கதீப் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம்
(07) மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ
(08) மவ்லவீ ஹாஃபிழ் மக்கீ எம்.எம்.ஹாமித் லெப்பை ஃபாஸீ
(09) அல்ஹாஜ் வாவு எஸ்.காதிர் ஸாஹிப்
(10) அல்ஹாஜ் எம்.ஓ.முஹம்மத் முஹ்யித்தீன்
(11) அல்ஹாஜ் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்
(12) அல்ஹாஜ் பி.எம்.ஏ.சி.நூருத்தீன்
உபசரிப்புக் குழு:
(01) ஜனாப் வி.எம்.ஏ.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
(02) ஜனாப் பி.எம்.ஏ.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
(03) அல்ஹாஜ் எஸ்.ஏ.ஜவாஹிர்
(04) ஜனாப் டி.எம்.கே.ஹஸன்
(05) ஜனாப் எம்.ஏ.சி.முஹம்மத் நூஹ்
(06) ஜனாப் எல்.எம்.இ.கைலானீ
(07) அல்ஹாஜ் எம்.என்.எல்.சுலைமான் லெப்பை
(08) ஜனாப் எஸ்.எம்.எல்.தைக்கா தம்பி
(09) ஜனாப் எஸ்.எச்.தைக்கா தம்பி
(10) ஹாஃபிழ் ஏ.எல்.ஷம்சுத்தீன்
(11) ஜனாப் கே.எம்.முஹம்மத் உமர் ஃபாரூக்
(12) ஜனாப் இசட்.முத்து இப்றாஹீம்
(13) ஜனாப் எம்.ஏ.கே.ஷம்சுத்தீன்
பொறுப்பு: நடுவர்கள், உள்ளூர் - வெளியூர் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களை வரவேற்று, முறையான முறையான உபசரிப்பை வழங்கி வழிகாட்டல்
போட்டிக் குழு:
(01) ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத்
(02) மவ்லவீ ஹாஃபிழ் ஏ.செய்யித் முஹம்மத் மன்பஈ
(03) ‘முத்துச்சுடர்’ ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ்
(04) மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ
(05) ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப்
(06) அல்ஹாஜ் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
(07) ஹாஃபிழ் எஸ்.டி.காஜா முஹ்யித்தீன்
(08) ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ்
(09) ஹாஃபிழ் கே.எம்.செய்யித் இஸ்மாஈல் அஸ்ஹரீ
(10) மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ
பொறுப்பு: 3 நாட்கள் நடைபெறும் போட்டிகள் அனைத்திற்குமான நிகழ்முறையை வடிவமைத்து இறுதி செய்தல்
மேடை அலங்காரம்:
(1) அல்ஹாஜ் துளிர் எம்.எல்.ஷேக்னா லெப்பை
(2) அல்ஹாஜ் சொளுக்கு எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
(3) ஜனாப் கே.எம்.டி.சுலைமான் லெப்பை
(4) அல்ஹாஜ் ஜெ.ஏ.செய்யித் அஹ்மத் புகாரீ
பொறுப்பு: மேடை அலங்காரம், நடுவர்களுக்கான இருக்கைகள், போட்டியாளர்களுக்கான இருக்கைகள், ஹல்கா அலங்காரம்
ஒலி-ஒளி அமைப்பு & ஊடகத் துறை:
(1) ஜனாப் ஜெ.ஏ.லரீஃப்
(2) அல்ஹாஜ் நேஷனல் காஜா
(3) ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ்
(4) ஜனாப் எம்.ஜஹாங்கீர்
(5) ஜனாப் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன்
(6) ஜனாப் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத்
பொறுப்பு: அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஒளி - ஒலி அமைப்பு, இணையதளத்தில் நேரலை, ஊடகங்களில் செய்திகள் வெளியிடல்
நிகழ்ச்சி நெறியாளர்கள்:
(1) ஜனாப் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ்
(2) ‘முத்துச்சுடர்’ ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ்
இவ்வாறு, துறைவாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். துஆவுடன் நண்பகல் 11.30 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.
மாநிலந்தழுவிய திருக்குர்ஆன் மனனப் போட்டி தொடர்பான முதற்கட்ட கலந்தாலோசனைக் கூட்டம் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |