செய்தி: “கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவதேன்???” - உயிரி எரிவாயு திட்டத்திற்கான இடந்தேடல் குறித்து ‘மெகா’ வெளியிட்டுள்ள பொதுப்பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உண்மைகள் உறங்கக் கூடும்! ஒருபோதும் இறப்பதில்லை! posted bykavimagan m.s.abdul kader (doha...qatar)[27 October 2013] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 31009
மதிப்பிற்குரிய காக்கா சாளை அப்துல் ரசாக் அவர்களுக்கு!
அஸ்ஸலாமுஅலைக்கும்........
எம்.கே.டி.அப்பா அவர்கள் காலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை,அன்னாருக்குப் பின் வந்தவர்கள் ஏன் செயல்படுத்த
வில்லை? இந்தக் கேள்விக்கான பதிலை,காலம் சென்ற தலைவர்களும்,படைத்த இறைவனும் மட்டுமே அறிவான்...
இந்த இடத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப் படக் கூடாது
என்று,அந்தத் தலைவர்களுள் எவரேனும் சொன்னார்களா?
மெகாவின் கேள்வி மிகத் தெளிவானது....அதற்கு உங்களிடம் பதில்
இருக்கிறதா? நம்மிடம் பணம் செலுத்தத் தேவையில்லாத அரசு
புறம்போக்கு நிலம் கைவசம் இருக்கும் பொது,விலை கொடுத்து
ஏன் வாங்க வேண்டும்....இந்தக் கேள்விக்கு பதில் இருந்தால்
சொல்லுங்கள்....அதை விடுத்து அந்த இணையதளம் சொன்னது,
அப்துல் வாஹித் சொன்னது என்று ஏன் குழப்புகின்றீர்கள்?
உறுப்பினர்களை மிரட்டுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று
எழுதும் முன்பு எது மிரட்டல் என்பதனை நீங்கள் சுட்டிக்காட்ட
வேண்டும்....மக்களது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பது
மிரட்டலா? எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்?
எடிட் செய்யாத வீடியோ காட்சியில் என்ன கண்டீர்கள்? அல்லது
நேரில் சென்று என்ன அவதானித்தீர்கள்....பதினாறு பேர் ஒன்றாகச்
சேர்ந்து உரக்க சப்தமிட்டால் அதுவே உண்மையாகி விடுமா?
அதனை உண்மை இல்லை என்று நிரூபிக்கும் ஒவ்வொரு
ஆதாரமும் உங்கள் கண்முன்னால் அணிவகுக்க ஆரம்பித்து
விட்டது....
அதில் முதலாவது விஷயம்......எந்தத் தீர்மானத்தின்
மீதும் தனது சொந்தக் குறிப்பை எழுத தலைவிக்கு அதிகாரம்
இருக்கிறது என்பதற்கான ஆவணம்.....தொடர்ந்து பயோ கேஸ்
திட்டத்தைக் குறித்து வெகு ஜன மக்களுக்கு விழிப்புணர்வை
ஏற்படுத்துவது......இன்னும் இன்னமும் இது தொடரும்....உண்மைகள் உறங்கக் கூடும்....ஒருபோதும் இறந்து
போவதில்லை.....
அடுத்ததாகக் கெபா குறித்த கிண்டல்.....எதிர்வரும் விளைவுகளை
சந்திக்கும் திராணி கொண்ட இளைஞர்கள்,நகர மக்களின்
நன்மைக்காக தியாக உணர்வுடன் நடத்தும் வேள்விதான் கெபா.
பீலா விடுவதற்கு அவர்கள் ஒன்றும் கருத்துக் கதைகளை எழுதி
வேடிக்கை பார்ப்பவர்கள் அல்ல....களப் போராளிகள்....அவர்கள்
எதிர் கொண்டிருக்கும் இன்னல்கள் என்னென்ன என்பதனை
வல்ல இறைவன் அறிவான்....அவர்களுக்காக துஆ செய்து வாழ்த்த
மனம் இல்லையெனினும் தயவு செய்து கேலி,கிண்டல் செய்யாதீர்கள்....அவர்கள் நமக்காக களத்தில் இருக்கின்றார்கள்
என்பதனை மறந்து விடாதீர்கள்....
தலைவியின் நிர்வாகத் திறமையின் சாயம் என்ன என்பதை
நகர மக்களும்,மாவட்ட மாநில ஆட்சித் துறை அதிகாரிகளும்,
அரசாங்க நிர்வாகத்தினரும் அறிந்தே வைத்திருக்கின்றார்கள்....
இதற்கெல்லாம் மேலாக எல்லாவற்றையும் அறிந்தவனாக
இறைவன் இருக்கின்றான்....அவன் என்னையும்,உங்களையும்
நேர்வழியில் நடத்துவானாக......ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross